நெத்தியிலே பொட்டு வைத்து .....
நேர்மை மட்டும் கற்று கொடுத்து .....
நேர்கோட்டில் சென்று விட்டாய் நீ ......
நித்தம் நாங்கள் கூடும் போதும்.....
சத்தம் மட்டும் கூடி போகும் ......
சாதனைகள் ஓடி போகும் ......
நம்மில் நரை விழுந்த பலர் இருந்தும் ......
நம் சரித்திரத்தில் திரை விழுந்த போதும் ......
தட்டி கேட்க ஆளில்லாமல்.....
தரணி முழுதும் தவித்து கிடந்தோம் .....
நீ கற்று கொடுத்த பல இருந்தும் .....
ஒட்டி கொண்ட சில மட்டும் சேர்த்து கொண்டு ......
ஒற்றுமை காட்ட ஓடி வந்தோம் அக்டோபர் 30௦இல் .....
அப்போது நீ ( தேவரய்யா) சொன்னது ......
இன்று இருக்கும் ஒற்றுமை என்றும் இருந்தால் .....
உங்களை ஏஇபதற்கு ஆளேது என்று ......
சண்டாளர்கள் நாங்கள் போட்ட சத்தத்தில் சத்தியமாய் ......
நீ சொன்னது இன்று வரை கேட்கவில்லை .....
சாதனைக்காக வருவோம் அடுத்த முறை ......
ஆனால் உண்மையை உணராது இந்த தலைமுறை ......
சில வீட்டில் சண்டை சொல்லி கேட்க மறுக்கிறார்கள் என்று .....
நம் வீட்டு சண்டை பற்றி சொன்னால்.....
நீ கூட சிரிப்பாய் சத்தமின்றி .....
இந்த சண்டையோ சொல்லவே ஆள் இல்லை என்று .....
உன் பெயரை சொல்லி பெருமை அடைந்தவர்கள் ஒரு ரகம்.....
பெருமைக்காக மட்டுமே உன் பெயரை சொல்வார்கள் பல யுகம் .....
அய்யா வருவார் அதர்மம் அழிப்பார் என சொல்லிவிட்டோம் பலரிடம் .....
காத்திருப்பு சுகம் தான்....கடவுள் அவதாரம் உம் பலம் தான்.....
நாங்கள் கடந்து வந்த காலங்களில்.....
நீங்கள் நடந்து வந்து .....
எம் பாவம் போக்குங்கள் .....
பரிசுத்தமாக்குங்கள் ......
வானம் நோக்கி பார்த்திருப்போம் .....
பசும்பொன்னார் வருகைக்காக காத்திருப்போம் ......
No comments:
Post a Comment