Saturday, 18 December 2010

pandian 10

சாதி வெறியர்கள் இரண்டு வகை,
ஒருவன் சரித்திரத்தை காக்க சாதியின் பெயரை பயன்படுத்துகிறான்,
ஒருவன் சலுகைகளை பெற சாதியின் பெயரை பயன்படுத்துகிறான்,
சலுகைகளை நீ விடும் வரை,சரித்திரத்தை மறந்து சேர மாட்டோம்,
நினைவில்கொள்,நீ சலுகைகளை மறுக்கும் வரை,எங்களை சாதி வெறியர்கள் என்று சொல்ல அருகதை இல்லை...

சலுகைகள் நிறுத்தப்படட்டும்,சட்டங்கள் திருத்தப்படட்டும் ..
சமத்துவத்தை பற்றி பிறகு பேசலாம்...

இன உணர்வால் இனத்தை காப்போம் ....
மன உணர்வால் மனிதத்தை வளர்ப்போம் ....
முக்குலத்தின் முழுமுதற் முக்கிய தேவையான
ஒற்றுமை பேணுவோம் .....
எதிரிகள் எம்மை எகதாலமிடுவது ....
நமக்கு கல்வி கை கொடுக்காது என்று .......
உண்மையாதெனில் கல்விக்கு தான்
நாம் இன்னும் கை கொடுக்க வில்லை!!!
கற்று அறிந்த கலைஞர்கள் முதல் தலைவர்கள்
வரை நம் கூடத்தில் பிறந்தவர்கள் தான் .......
கூடிய போதெல்லாம் எம் வீரம் பேசினோம் , மானம் பேசினோம்,
மதி பற்றி பேசிட மறந்தோம் .....மறுத்தோம் ......
மன்னராய் ஆண்டதை நேற்றைய வரலாறு சொல்லும் .......
கல்வி இழந்தால் வருகிற வரலாறு நம்மை கொல்லும்!!!
எதிரிகள் எட்ட முடியாத எடத்திற்கு செல்ல .....
ஏடு எடுத்து படிப்போம் .....வான் தொடுத்து வரலாறு படைப்போம்.......
தரித்திரம் தொலைத்து சரித்திரம் படைப்போம் ....
வருகின்ற வரலாற்றின் வறுமை துடைப்போம் ......

pandian 9

அன்று வாழ் ஏந்தி போராடியது நம் மக்கள் தானே , அன்று வீரத்தோடு கல்வியிலும் சிறந்து விளங்கினோம் அதிகாரத்தில் இருந்தோம், அன்று வீட்டுக்குள் பயந்து இருந்தவர்கள் எல்லாம் இன்று அதிகாரத்தில் ஆனால் நம் மக்களோ ???? மீண்டும் பழைய நிலை பெற வேண்டும் நாம், ஒன்று கூடுவோம் வெல்வோம் வாருங்கள் சொந்தபந்தகளே தோள் கொடுங்கள்

அடிமைகள்..
யார் அடிமைகள்?

உயர்ந்த மதிப்பெண் பெற்றும் உத்தியோகம் பெறமுடியாத நிலை,
கேட்க நாதி இல்லை,நாம் தான் அடிமைகள்...

முறைத்தாலும் வன்கொடுமை என சொல்லி சிறை தள்ளும் நிலை,
கேட்க நாதி இல்லை,நாம் தான் அடிமைகள்...

சட்டம் நம் கையில் இல்லாததால் சட்டக்கல்லூரியில் அடிபட்டோம்,
கேட்க நாதி இல்லை,நாம் தான் அடிமைகள்...

அன்று யாரோ சொன்னதாய் கேள்வி பட்டேன்,

ஆடுகளாய் இருப்பதால் தானே பலியிடபடுகிறாய்,சிங்கங்களாய் மாறு என்று...

இன்று நான் கேட்கிறேன்,என்
ஆடுகள் சிங்கமாய் முயலும்போது,
சிங்கமே நீ ஏன் ஆடாய் மாற முயல்கிறாய்???

உன்னை ஒன்றுபடுத்துவேன்,கற்பிப்பேன்,போராடசெய்வேன்..
ஜெய் ஹிந்த்

pandian 8

நெத்தியிலே பொட்டு வைத்து .....
நேர்மை மட்டும் கற்று கொடுத்து .....
நேர்கோட்டில் சென்று விட்டாய் நீ ......
நித்தம் நாங்கள் கூடும் போதும்.....
சத்தம் மட்டும் கூடி போகும் ......
சாதனைகள் ஓடி போகும் ......
நம்மில் நரை விழுந்த பலர் இருந்தும் ......
நம் சரித்திரத்தில் திரை விழுந்த போதும் ......
தட்டி கேட்க ஆளில்லாமல்.....
தரணி முழுதும் தவித்து கிடந்தோம் .....
நீ கற்று கொடுத்த பல இருந்தும் .....
ஒட்டி கொண்ட சில மட்டும் சேர்த்து கொண்டு ......
ஒற்றுமை காட்ட ஓடி வந்தோம் அக்டோபர் 30௦இல் .....
அப்போது நீ ( தேவரய்யா) சொன்னது ......
இன்று இருக்கும் ஒற்றுமை என்றும் இருந்தால் .....
உங்களை ஏஇபதற்கு ஆளேது என்று ......
சண்டாளர்கள் நாங்கள் போட்ட சத்தத்தில் சத்தியமாய் ......
நீ சொன்னது இன்று வரை கேட்கவில்லை .....
சாதனைக்காக வருவோம் அடுத்த முறை ......
ஆனால் உண்மையை உணராது இந்த தலைமுறை ......
சில வீட்டில் சண்டை சொல்லி கேட்க மறுக்கிறார்கள் என்று .....
நம் வீட்டு சண்டை பற்றி சொன்னால்.....
நீ கூட சிரிப்பாய் சத்தமின்றி .....
இந்த சண்டையோ சொல்லவே ஆள் இல்லை என்று .....
உன் பெயரை சொல்லி பெருமை அடைந்தவர்கள் ஒரு ரகம்.....
பெருமைக்காக மட்டுமே உன் பெயரை சொல்வார்கள் பல யுகம் .....
அய்யா வருவார் அதர்மம் அழிப்பார் என சொல்லிவிட்டோம் பலரிடம் .....
காத்திருப்பு சுகம் தான்....கடவுள் அவதாரம் உம் பலம் தான்.....
நாங்கள் கடந்து வந்த காலங்களில்.....
நீங்கள் நடந்து வந்து .....
எம் பாவம் போக்குங்கள் .....
பரிசுத்தமாக்குங்கள் ......
வானம் நோக்கி பார்த்திருப்போம் .....
பசும்பொன்னார் வருகைக்காக காத்திருப்போம் ......

pandian 7

பத்துடன் ஒன்றாய் வாழவா பிறந்தோம்-நாங்கள்
பத்தையும் சேர்த்து ஆளவே பிறந்தோம்.

"புரட்சி இணையத்தில் வெடிப்பதல்ல,இதயத்தில் வெடிப்பது...
வீரம் பேச்சினில் இருப்பதல்ல,பிறப்பினில் இருப்பது"

தேவரின கொள்கைக்காக குரல் கொடுப்போம்

ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளணும். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலத்தோரை தேவரினமாக மாற்றி தென் நாடு தேவர் நாடாகும் வரை பாடுபடுவோம்.

நம்முயிர்க்கு மேல மானம் மரியாத,
மானம் இழந்தாலே வாழ தெரியாதே!

அன்று ஆணை கட்டி போரடித்த பரம்பரை நாம் தானே, அன்று அகிழத்தை ஆண்டதும் நாம் தானே அனைவருக்கும் படியழந்ததும் நான் தானே அன்று, ஆனால் இன்று நம்மில் பல சொந்தகளுக்கு வேலை இல்லை ஒரு வேலை உணவு இல்லை இந்நிலை மாற வேண்டும் அதற்க்கு அதிகாரம் நம் கையில் வர வேண்டும், அதற்க்கு நம் சொந்தகள் ஒன்று கூடுவோம் ஒரு குடையின் கிழ்

சமத்துவம் என்பது அனைவரையும் சமமாக பாவிப்பதே,
ஒருவரை உயர்த்துவதும்,ஒருவரை அடக்குவதும் சமத்துவத்திற்கு வழிவகுக்காது...எவன்/எவள் பேச்சும் என் செவி அறியாது...

இது அரசை நம்பும் இனமல்ல,ஆண்டவனை நம்பும் இனம்,
சலுகையை நம்பும் இனமல்ல சத்தியத்தை நம்பும் இனம்...

pandian 6

நான் சாதிவெறியன் தான்...
சாதியை ஒழிக்க முயலும் அரசு,பள்ளிகளில் சாதி சான்றிதல் கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும்.....
குறிப்பிட்ட சாதிகளுக்கு மட்டும் உதவித்தொகை வழங்குவதை நிறுத்த வேண்டும்...

"அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்..."

Pandian 5

ஈ .வெ .ரா வை நாயக்கர் என்று சொல்லலாம் ......
வ .உ .சி யை பிள்ளை என்று சொல்லலாம் ......
காமராஜரை நாடார் என்று சொல்லலாம் ......
ஆனால் நாம் ....
தேவரை தெய்வம் என்று சொல்லும் போது மட்டும் .....
எங்கிருந்து வந்தது இந்த சனியன் பிடித்த சாதி வெறி ......
சண்டாளர் கூட்டமே....
எங்கள் அரிவாள்களை ஆயுத பூஜைக்கு மட்டும் எடுப்பதாய்....
அய்யாவிடம் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறோம்....
ஆயுத பூஜையை ஆண்டு முழுவதும் கொண்டாட வைத்து விடாதீர்கள் .....
தேசிய தலைவர் வழி நடப்போம் .....
தேவையற்றதை கருவறுப்போம் ......

Thursday, 2 December 2010

மறவர் போற்றும் வீரப்போர்

தமிழர் திருமகனாம் தொல்காப்யிர் வாழ்ந்த காலம் வீரயுகக்காலம். உலகோர் போற்றும் மறக்காலம். அந்த சங்ககால மக்கள் வாழ்க்கை முறை அம்மக்களின் நாட்டுணர்வு, அவர் தம் வீரச்சிறப்பு, வாணிகம், அக்காலப் புலவர்களின் ஆழ்ந்த புலமை, மகளிரின் வீரப்பண்பு போன்ற செய்திகளையும் தொல்காப்பியம் தௌ;ளத் தெளிவாக காட்டுகிறது.
படை பலம்
அன்று ஒரு நாட்டின் வீரத்தினை நிலை நிறுத்திக் காட்டியது, நால்வகைப் படைபலங்களே ஆகும்.
தனி ஒரு வீரரும் தம் வீரத்தை தயங்காது முன்னேறிக் காட்டினர். அவர்களின் போர்ப்படைகளிலே தேர்ப்படை, யானைப்டை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் இருந்தன என்பதை,

“தேரும், யானையும், குதிரையும், பிறவும் ஊர்ந்தனர் இயங்கவும் உடையர் என்ப” (பொ. மெல்.17)
என்று தொல்காப்பியரே தெளிவாகக் காட்டியுள்ளார். இச்சூத்திரம் தொல்காப்பியர் காலத்திலிருந்த ஊர்திகளைக் காட்டுகிறது. இவ்வூர்திகளை படைகளாலே பயன்படுத்திக் கொண்டு தம் வீரப் போரை நிகழ்த்தினர். இதனையே,
“தானை, யானை, குதிரை, என்ற
நோனார் உட்கும் மூவகை நிலையும்” (தொல். பொ.புற. 14)
என்ற நூற்பாவினால் தெளிவாக உணரலாம். அன்று தொல்காப்பியர் குறிப்பிட்ட இப்போர் வகைகளே இன்றும் உலக அளவில் ஒரு நாட்டிற்கு பாதுகாப்பைத் தேடித் தருகின்றது.
“தேரோர் தோற்றாய வென்றியும், தேரோர்
வென்ற கோமான் முன் தேர்க் கறவையும்” (தொ.பொ.புற.17)
தேரிலே ஏறிவந்த பொருளர் முதலியோடு புகழ்ந்து கூறிக்காட்டி வெற்றியும், தேரேறிப் போர் செய்ய வந்த அரசர்களை வென்ற வேந்தன், தன் வெற்றிக்களிப்பால் தேர்த்தட்டிலே ஏறி நின்று ஆடும் குரவைக் கூத்துமூ, என்று வந்துள்ளமையால் தேர்ப்படையின் சிறப்புக் கூறப்படுகிறது.

தொல்காப்பியர் காலத்துத் தமிழ்மக்கள் கடல் கடந்து சென்றனர். அதாவது கப்பலேறிக் கடல் கடந்து சென்றனர். இதனடிப்படையில் கால்நடையாகப் பொருள் தேடச் செல்வதற்குக் காலிற் பிளவு என்று பெயர்.
பண்டைத் தமிழர் பண்பாட்டில் “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பது இன்றும் வழங்கிவரும் ஒன்றாகும். ஆகவே தான் கடல் தாண்டி செல்வதற்குக் கருவிகளையும், ஓடங்களையும், கட்டு மரங்களையும் அமைப்பதற்கு அவர்கள் அறிந்திருந்தனர். இது பிற்காலத்தில் அவர்களுக்குக் கப்பற்படை அமைக்கம் திறமை உண்டாகக் காரணமாக இருந்தது. கப்பற்படை தொல்காப்பியர் காலத்தில் இருந்ததாகச் சொல்வதற்கு இடமில்லை.
முறையான போர்
பண்டைத் தமிழர்கள் ஆக்கிரமிப்புப்போரை அடியோடு வெறுத்தனர். எதிர்த்து வந்தவர்களைக் கண்டு அஞ்சவில்லை. தற்காப்புப் போர் புரிந்து வெற்றி கொண்டனர். தங்களது குடிகளை நடுங்கவைக்கும் கொடுங்கோல் மன்னர்களைப் பண்டையத் தமிழர்கள் சும்மா விட்டு வைக்கவில்லை. அவர்களைப்போரினைக் கொண்டு விரட்டினர்.
“வஞ்சி தானே முல்லையது புறனேஎஞ்சா மன்னரை வேந்தனை வேந்தன் அஞ்சாதத் தலைச் சென்று அடல்குறித்தன்றே” (தொல். பொ. பு. 6)
வஞ்சியென்பது முல்லையென்னும் அகத்திணையோடு தொடர்புடையது. அடங்காத மன்னனைக் கொண்டு, நாடு பிடிப்பதற்காகப் படையெடுத்து வந்த வேந்தனை, அறங்கருதும் மற்றொரு வேந்தன், படையெடுத்து வந்து அதிகப்படி படை திரட்டிச் சென்று அவனோடு போர் செய்வது.
“தும்பை தானே நெய்தலது புறனே
மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்றுதலை யழிக்கும் சிறப்பிற் றென்ப” (தொ. பொ. புற. 12)
தும்பை என்பது நெய்தல் என்னும் அகத்திணையோடு தொடர்புடையது. தனது ஆற்றலை உலகம் புகழ வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு, போர் புணர வந்த அரக்கனை, எதிர்த்துச் சென்று போர் செய்து அவன் கர்வத்தைப்போர்க்களத்திலே அழிக்கும் சிறந்த செயல் ஆகும்.
தமிழர்கள் அகந்தை கொண்டு ஆக்கிரமிப்புப் போரிலே இறங்கமாட்டார்கள், எதிரிகளுக்கு அடிபணியவும் மாட்டார்கள். தற்காப்புப்போரின் மூலம் தங்கள் வீரத்தையும், வாழ்க்கையும், பாதுகாத்துக்கொள்ளும் பண்புடையவர்கள். இவ்வுண்மைகளை மேலே காட்டிய வஞ்சித்திணை, தும்பைத்திணை இரண்டும் விளக்கும்.
அறப்போர்

என்று நெட்டியமையார் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடிய பாட்டால் அவன் படையெடுக்கும் முன்னர் ஆநிரை முதலியவைகளைக் கவர்ந்து கொள்ளுமாறு பகைவர்க்கு அறிவித்தான் என்பது தெளிவாகிறது. இந்தப் பாடலினை விதிமுறையாகக் கொண்டே சங்க காலத்தில் போர்ச்செயல்கள் நடைபெற்றன. மறவர்கள் அறத்தை மானமாகக் காத்து வந்தனர் என்பதும் இப்பாடலால் அறியலாம். இப்பாட்டு போரின் கொடுமையிலிருந்து விலக்கப்பட வேண்டியவர்களைத் தொகுத்துக் கூறுகிறது.
வீரர்கள் யாருக்கு பணியாவிட்டாலும் பார்ப்பனருக்குப் பணிந்தனர் என்பதை
“பார்ப்பார்க்கல்லது பணியறியலையே”
“பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்”
என்ற தொடர்கள் பாப்பனரைக் கொலை புரிதல் கொடும்பாவமெக் கருதினர் என்பதையும் எடுத்துரைக்கின்றன. பார்ப்பார் என்னும் சொல் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அந்தணரைக் குறிக்கும் எனலாம்.
தொல்காப்பியர் கால அரசர்கள் “அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” என்ற உணர்வை தலையெனக் காத்து போர் செய்து வந்தனர்.



..