Tuesday, 7 September 2010

மறவன் பாட்டு

மண்வெட்டிக் கூலிதின லாச்சே;-எங்கள்


வாள்வலியும் வேல்வலியும் போச்சே!

விண்முட்டிச் சென்றபுகழ் போச்சே-இந்த

மேதினியில் கெட்டபெய ராச்சே!



நாணிலகு வில்லினொடு தூணி-நல்ல

நாதமிகு சங்கொலியும் பேணி,

பூணிலகு திண்கதையும் கொண்டு,-நாங்கள்

போர்செய்த கால்மெல்லாம் ப்ண்டு.



கன்னங் கரியவிருள் நேரம்-அதில்

காற்றும் பெருமழையும் சேரும்;

சின்னக் கரியதுணி யாலே-எங்கள்

தேகமெல்லாம் மூடிநரி போலே.



சோரந் தொழிலாக் கொள்வோமோ?-முந்தைச்

சூரர் பெயரை அழிப் போமோ?

வீர மறவர் நாமன்றோ?-இந்த

வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ