Saturday, 28 August 2010

நேதாஜி

நேதாஜி ஹிட்லரை சந்தித்தார்


இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். வங்காளத்தில் புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த ஜானகி நாத்போஸ் பிரபாவதி தேவி தம்பதிகளின் 9வது குழந்தையாக 23/1/1897 ல் பிறந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். (நேருவைவிட எட்டு வயது இளையவர்).


லண்டனுக்குச் சென்று ஐ.சி.எஸ் (தற்போதைய ஐ.ஏ.எஸ்) படிப்பு படித்தார். முதல் வகுப்பில் தேறினார். ஆனால் வெள்ளையர் ஆட்சியில் கலெக்டராக வேலை பார்க்கப்பிடிக்காமல், “ஐ.சி.எஸ்” பட்டத்தை வாங்காமலேயே இந்தியா திரும்பினார். காந்தியை சந்தித்தார். காங்கிரசில் சேர்ந்தார். சுபாஷ் சந்திரபோசும், நேருவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.


சுத்திரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நேதாஜி, பர்மாவில் மாண்டலே என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை அடைந்த பின், 1938-ம் ஆண்டு ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். “சட்டமன்றங்களைக் கைப்பற்றினால் மட்டும் போதாது. வெள்ளையர்களை வெளியேற்ற தீவிரமாகப் போராட வேண்டும்” என்று வீர உரை நிகழ்த்தினார். அவர் புகழ் நாடெங்கும் பரவியது. அவரை “நேதாஜி” (தலைவர்) என்று மக்கள் அழைத்தனர். நேதாஜியின் தீவிரவாதப்போக்கு காங்கிரஸ் தலைவர்களுக்கு -குறிப்பாக மகாத்மா காந்திக்குப் பிடிக்கவில்லை.


1939-ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக நேதாஜி அறிவித்தார். அவரை எதிர்த்து, பட்டாபி சீத்தாராமையாவை காந்தி நிறுத்தினார். கடும் போட்டியில், நேதாஜி வெற்றி பெற்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, “பட்டாபியின் தோல்வி, என் தோல்வி” என்று கூறினார். இதனால் மனம் புண்பட்ட நேதாஜி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆயினும், காங்கிரசுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட “பார்வர்டு பிளாக்” என்ற அமைப்பை உருவாக்கினார். இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரிட்டிஷ் அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக 1940 ஜுலையில் நேதாஜியை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது.


உலகப்போரின் ஆரம்பத்தில், பிரிட்டிஷ் படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பிரிட்டனின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார். அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரிய பிரளயமே ஏற்படும் என்பதைப் பிரிட்டிஷ் அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது. வேறு வழியின்றி நேதாஜியை அரசாங்கம் விடுதலை செய்தது.


ஆனால் அவர் வீட்டைச்சுற்றி ரகசிய போலீசார் சாதாரண உடையில் 24 மணி நேரமும் வட்டமிட்டபடி இருந்தனர். எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார். வெளிநாடு செல்ல உதவுவதாக, அவருடைய நண்பர்கள் சிலர் வாக்களித்தனர்.


1941-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் நேதாஜி ஒரு முஸ்லிம் போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார். ஒரு காரில், கல்கத்தாவிலிருந்து 40 மைல் தூரத்தில் உள்ள ஒரு சிறிய ரெயில் நிலையத்துக்குச் சென்றார். “சயாதீன்” என்ற பெயரில், ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். 17-ந்தேதி பெஷாவர் நகரை (தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது) அடைந்தார். அங்கே அவருடைய நண்பர்கள் காத்திருந்தனர். அவர்கள் நேதாஜியை ஒரு காரில் அழைத்துச் சென்றார்கள். மூன்று நாள் கழித்து பட்டாணியர் போல் மாறுவேடம் அணிந்து, நேதாஜி ஒரு காரில் பயணமானார். ரகமத்கான் என்ற நண்பர் உடன் சென்றார். கார் நெடுந்தூரம் சென்றது. கார் செல்ல முடியாத பாதையில் இருவரும் நடந்து சென்றார்கள். மறுநாள் மாலை இந்தியாவின் எல்லையைக் கடந்து ஒரு கிராமத்தை அடைந்தார்கள். அன்று இரவு ஒரு மசூதியில் தங்கினார்கள். மறுநாள் காலை எழுந்ததும், மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள்.


காட்டிலும், கரடுமுரடான மலைப்பாதைகளிலும் நடந்து, ஒரு ரோட்டை அடைந்தார்கள். அங்கு ஒரு லாரியில் ஏறி, ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் போய்ச் சேர்ந்தார்கள். அங்கு இத்தாலி நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டார். தான் யார் என்பதையும், இத்தாலிக்கு செல்ல விரும்புவதையும் தெரிவித்தார். அவர்கள் இது பற்றி இத்தாலி அரசுக்கு தகவல் அனுப்பினார்கள். பதில் வர தாமதமாயிற்று. எனினும் நேதாஜி பொறுமையுடன் பல நாட்கள் காத்திருந்தார். இறுதியில் அவரை அழைத்துச்செல்ல ரோமில் இருந்து இரண்டு தூதர்களை இத்தாலி அரசு அனுப்பி வைத்தது. மார்ச் 18-ந்தேதி காலை, நேதாஜி, அந்த இருவருடன் காரில் புறப்பட்டார்.


காபூல் வரை துணைக்கு வந்த அவர் நண்பர் ரகமத்கான், இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றார். நேதாஜிக்கு, பிரயாண அனுமதிச்சீட்டை இத்தாலி அனுப்பியிருந்தது. அதன் உதவியால், ரஷிய எல்லைக்குள் நேதாஜியும், மற்ற இருவரும் நுழைந்தனர். ரஷியா வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக ஜெர்மனிக்கு வருமாறு ஹிட்லரிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, ரெயில் மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்குப் போய்ச்சேர்ந்தார். அவர் ஜெர்மனி வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி ஜெர்மனி பத்திரிகைகள் வெளியிட்டன. அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற விஷயமே பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிந்தது! ஜெர்மனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வாதிகாரி ஹிட்லரை நேதாஜி சந்தித்துப்பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதி அளித்தார்.


நேதாஜியின் வீர சாகசம்

இந்தியாவைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நேதாஜி ஒப்பந்தம் செய்து கொண்டார். ஜெர்மனியில் இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். 4 ஆயிரம் வீரர்கள் கொண்ட படை அது. அவர்கள் பிரான்சு நாட்டுக்கு சென்று, பிரிட்டிஷ் படைகளை எதிர்த்துப்போரிட்டனர். 1941 டிசம்பர் 7-ந்தேதி, போரில் ஜெர்மனிக்கு ஆதரவாக ஜப்பான் குதித்தது. வெகு எளிதாக சிங்கப்பூரைக் கைப்பற்றியது. 1942 பிப்ரவரியில், சிங்கப்பூரிலிருந்த பிரிட்டிஷ் ராணுவம் ஜப்பானிடம் சரண் அடைந்தது. தாய்லாந்து, மலேயா, அந்தமான் ஆகிய நாடுகளையும் ஜப்பானிய படைகள் கைப்பற்றிக்கொண்டு, மேலும் முன்னேறின. பிரிட்டிஷ் வசம் இருந்த ரங்கூனும், ஜப்பானியர் வசம் ஆகியது. ஜப்பானிடம் சரண் அடைந்த பிரிட்டிஷ் படைகளில் இந்திய ராணுவத்தினர் இருந்தார்கள். அவர்களைக்கொண்டு, “இந்திய தேசிய ராணுவம்” அமைக்கப்பட்டது.


போரில் ஜப்பானின் கை ஓங்கிக்கொண்டிருந்தது. ஜப்பான் உதவியுடன் இந்தியாவை விடுவிக்க முடியும் என்று நேதாஜி கருதினார். ஜப்பானுக்குச் செல்ல முடிவு செய்தார். ஜப்பானுக்கு எப்படிச் செல்வது? கடலில் அமெரிக்க, பிரிட்டிஷ் கப்பல்களும், நீர்மூழ்கிகளும் சுற்றிக்கொண்டிருந்தன. விமானத்தில் செல்வதும், தரை வழியில் செல்வதும் அதிக ஆபத்தானவை. எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்த்த நேதாஜி, நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல முடிவு செய்தார். “இது ஆபத்தானது” என்று ஜெர்மன் அதிகாரிகள் எச்சரித்தனர். ஆனால் நேதாஜி துணிவுடன் 1943 பிப்ரவரி 8-ந்தேதி ஜெர்மனியில் உள்ள நீல் என்ற துறைமுகத்திலிருந்து நீர்மூழ்கிக் கப்பலில் பயணமானார். அவருடைய செயலாளர் கர்னல் ஹசன், ராணுவ அதிகாரி குலாம் ஹைதர், ஒரு ஜப்பான் அதிகாரி, ஒரு ஜெர்மன் அதிகாரி ஆகியோரும் உடன் புறப்பட்டனர்.


எதிரிகளின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் பார்வையில் சிக்காமலும், விமானக் குண்டுவீச்சில் அகப்பட்டுக்கொள்ளாமலும் நேதாஜியின் நீர்மூழ்கிக் கப்பல், ஆப்பிரிக்கா கண்டத்தைச் சுற்றிக்கொண்டு, இந்துமகா சமுத்திரத்தில் பிரவேசித்தது. மடகாஸ்கர் தீவுக்கு 400 மைல் தூரத்தில் ஜப்பான் அனுப்பி வைத்த நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, நேதாஜியின் நீர்மூழ்கியை எதிர்கொண்டு வரவேற்றது. ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பலுக்கு ஏப்ரல் 28-ந்தேதி மாறினார் நேதாஜி. நீர்மூழ்கிக்கப்பல் பயணம் தொடர்ந்தது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த சுமத்ரா தீவை,


மே 6-ந்தேதியன்று நேதாஜி அடைந்தார். அதாவது, நேதாஜியின் நீர்மூழ்கிக் கப்பல் பயணம் 3 மாதம் நீடித்தது.


சுமத்திராவில் ஒரு வாரம் தங்கியபின் விமானம் மூலம் ஜப்பான் தலைநகருக்குப் பயணமானார். மே 16-ந்தேதி டோக்கியோ போய்ச்சேர்ந்தார். அங்கு ஜப்பானிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். இந்தியா சுதந்திரம் அடைய ஜப்பான் எல்லா உதவிகளையும் செய்யும் என்று அவர்கள் உறுதியளித்தனர். ஜப்பானிலிருந்து புறப்பட்டு, ஜுலை 2-ந்தேதி சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் மக்கள் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். இந்தியர்கள் மட்டுமின்றி, மலேசியர், சீனர், ஜப்பானியர் ஆகியோரும் வரவேற்பில் கலந்து கொண்டனர்.


சிங்கப்பூரில் உள்ள இந்திய தேசிய ராணுவ அதிகாரிகளை அழைத்துப் பேசினார். போரில் புதிய வியூகங்களை வகுத்தார். நேதாஜி மாணவராக இருந்தபோதே, “தேசிய மாணவர் படை”யில் சேர்ந்து ராணுவப் பயிற்சி பெற்றிருந்தார். எனவே, ராணுவத்தின் செயல்பாடுகளை நன்கு அறிந்திருந்தார். அவருடைய போர்த்திறன், ராணுவ அதிகாரிகளையே திகைக்க வைத்தது. அதன்பின் நேதாஜி என்ற பெயர் உலகமெங்கும் பரவியது.


1943 அக்டோபர் மாதம், “சுதந்திர இந்திய அரசாங்க”த்தை சிங்கப்பூரில் அமைத்தார். பிரதமர் பதவியையும், பிரதம ராணுவத் தளபதி பொறுப்பையும் அவர் ஏற்றார். பெண்கள் படையின் தளபதியாக தமிழ்ப்பெண்ணான மேஜர் லட்சுமி சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். சுதந்திர அரசாங்கம் அமைக்கப்பட்ட 2 நாட்களில், பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான போர்ப்பிரகடனத்தை நேதாஜி வெளியிட்டார்.


அரசாங்கத்தையும், ராணுவத்தையும் குறுகிய காலத்தில் பலப்படுத்தினார் நேதாஜி. தேசிய அரசாங்கம் போரை நடத்தியதுடன் நில்லாது, பல பள்ளிக்கூடங்களைத் திறந்தது; புதிய நாணயங்களை வெளியிட்டது. பத்திரிகைகளையும் நடத்தியது. சுதந்திர அரசாங்கத்தின் தலைமையகம், முதலில் சிங்கப்பூரில் இருந்தது. பிறகு ரங்கூனுக்கு மாறியது. இந்த அரசாங்கத்தின் கிளை அலுவலகங்கள், பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அமைக்கப்பட்டன.


நேதாஜியின் சுதந்திர அரசுக்கு ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து முதலிய நாடுகள் அங்கீகாரம் அளித்தன. சுதந்திர அரசுக்கென தனியாக “பாங்கி” தொடங்கவேண்டும் என்றார், நேதாஜி. “இதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?” என்று ஒரு முஸ்லிம் கோடீஸ்வரர் கேட்டார். “ஐம்பது லட்சம் ரூபாய் வேண்டும்” என்று நேதாஜி கூறியதும், “இப்போது முப்பது லட்சம் தருகிறேன். ஒரு வாரத்தில் மீதி இருபது லட்சம் தருகிறேன்” என்று கூறிய அந்தப் பிரமுகர், சொன்னபடியே ஐம்பது லட்சம் ரூபாய் கொடுத்தார். இரண்டே வாரங்களில் “ஆசாத் ஹிந்த் பாங்க்” தொடங்கப்பட்டது.


இந்திய தேசிய ராணுவத்துக்கும், சுதந்திர அரசுக்கும் நிறையப் பணம் தேவைப்பட்டது. மக்கள் ஏராளமாக நன்கொடை அளித்தனர். நேதாஜிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு ஏலம் போயின. ஒருமுறை, ஒரே மாலை 12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயிற்று! நகைகள், ரொக்கம், நிலமாக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஒரு பிரமுகர் கொடுத்தார். பெண்கள் ஒன்று சேர்ந்து, நேதாஜியின் எடைக்கு எடை தங்க நகைகளை வழங்கினர்.


பர்மாவில் மட்டும் ரூ.8 கோடி வசூலாயிற்று. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து குவிந்த நன்கொடை மூலம் ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் வாங்கினார்நேதாஜி. இந்திய தேசிய ராணுவத்தில் 50 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். 1,500 ராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் இவர்கள் செயல்பட்டனர். மேஜர் லட்சுமி தலைமையில் இருந்த பெண்கள் ராணுவம், “ஜான்சிராணிப்படை” என்ற பெயரில் இயங்கியது.


இதில் 1,200 பெண்கள் இருந்தனர். “தற்கொலைப்படை” ஒன்றும் இயங்கியது. இவர்கள், முதுகில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, எதிரிப்படைகளின் டாங்கிகள் அணிவகுத்து வரும்போது, பாய்ந்து சென்று குறுக்கே படுத்துக்கொள்வார்கள். டாங்கிகளால் அவர்கள் நசுக்கப்படும் அதே நேரத்தில், குண்டுகள் வெடித்து டாங்கிகள் சின்னாபின்னமாகச் சிதறும்! இந்த தற்கொலைப்படையில், இளைஞர்கள் ஏராளமாகச் சேர்ந்தனர்.

“டெல்லி சலோ!” என்று நேதாஜி கட்டளையிட்டதும், இந்திய தேசிய ராணுவத்தினர் இந்தியாவுக்குள் புகுந்தனர். பல இடங்களில் பிரிட்டிஷ் படைகள், தேசிய ராணுவத்திடம் தோற்றுப் பின்வாங்கியது. “ஜான்சிராணிப்படை” பல மைல்கள் முன்னேறியது. அவர்களிடம் வெள்ளையர் ராணுவம் சரண் அடைந்தது. மணிப்புரி சமஸ்தானத்தின் பல பகுதிகளை தேசிய ராணுவம் கைப்பற்றியது. “விரைவில் இந்தியாவை விட்டுப் பிரிட்டிஷ் படைகள் விரட்டியடிக்கப்படும். டெல்லியில் சுதந்திரக்கொடியை நேதாஜி பறக்க விடுவார்” என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால்…

நேதாஜி போன விமானம் மாயமாய் மறைந்தது

போரில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. போரில் பிரிட்டனுக்கு ஆதரவாக அமெரிக்கா குதித்ததும், போரின் போக்கே தலைகீழாக மாறியது. வெற்றி மேல் வெற்றி பெற்று வந்த ஜப்பானுக்கும், ஜெர்மனிக்கும் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டது. பர்மாவில் இருந்த ஜப்பான் படைகள் அங்கிருந்து பின்வாங்கின. அமெரிக்க தளபதி மக்ஆர்தர், பெரும் படையுடன் ஜப்பானை நெருங்கிக் கொண்டிருந்தார்.

1945 ஏப்ரல் 30-ந்தேதி ஜெர்மன் தலைநகரான பெர்லின் நகரை ரஷியப்படைகள் முற்றுகையிட்டன. இனி தப்ப வழி இல்லை என்பதை அறிந்து கொண்ட ஹிட்லர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, ஜெர்மனி சரண் அடைந்தது.


ஜெர்மனி சரண் அடைந்த பிறகும் ஜப்பான் போரை நிறுத்தவில்லை. எனவே, 1945 ஆகஸ்ட் 6-ந்தேதி ஜப்பான் நகரமான ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. அப்படியும் ஜப்பான் சரண் அடையாததால், இரண்டாவது அணுகுண்டை ஜப்பானின் மற்றொரு நகரான நாகசாகி மீது வீசியது. இதைத்தொடர்ந்து 1945 ஆகஸ்ட் 12-ந்தேதி, ஜப்பான், தோல்வியை ஒப்புக்கொண்டு சரண் அடையத் தீர்மானித்தது.


அப்போது நேதாஜி மலேயாவில் இருந்தார். அவர் உடனே கார் மூலம் சிங்கப்பூர் திரும்பினார். சுதந்திர அரசாங்கத்தின் இதர தலைவர்களுடனும், தளபதிகளுடனும் ஆலோசனை நடத்தினார். 1945 ஆகஸ்ட் 15-ந்தேதி ஜப்பான் மன்னர் ரேடியோவில் பேசும்போது, ஜப்பானின் சரணாகதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அன்றிரவு நேதாஜி தூங்கவில்லை. விடிய விடிய நண்பர்களுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்து என்ன செய்யவேண்டும் என்று, ராணுவத் தளபதிகளுக்கு கட்டளைகள் பிறப்பித்தார். முக்கியமாக, “ஜான்சி ராணிப்படை”யில் உள்ள பெண்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினார். இதற்கிடையே, ஜப்பான் அரசிடமிருந்து, நேதாஜிக்கு ஒரு செய்தி வந்தது.


“ரஷியா வசம் இருக்கும் மஞ்சூரியா பகுதிக்கு உங்களை பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்த்துவிடுகிறோம். அதன் பிறகு என்ன செய்வது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்” என்பதுதான் அந்தச் செய்தி. அதன்படி அடுத்த நாள் காலை பாங்காக் (தாய்லாந்து) செல்வதென்றும், அங்கிருந்து மஞ்சூரியாவுக்குப் புறப்படுவது என்றும் நேதாஜி முடிவு செய்தார்.


1945 ஆகஸ்ட் 16-ந்தேதி சிங்கப்பூரில் இருந்து புறப்படுவதற்கு முன், இரண்டு செய்திகளை வெளியிட்டார். முதலாவது செய்தி, இந்திய தேசிய ராணுவத்தினருக்கு. “ஜப்பான் சரண் அடைந்துவிட்டாலும், டெல்லியை அடையப் பல வழிகள் இருக்கின்றன. இந்தியாவை மீட்பதுதான் நமது லட்சியம்” என்பதே அந்தச் செய்தி. அடுத்த செய்தி, கிழக்கு ஆசியாவில் வாழும் மக்களுக்கு. “நமது வரலாற்றில் இதற்கு முன் கண்டிராத நெருக்கடியான நேரம் இது. நமது தற்காலிக தோல்வியைக் கண்டு மனம் தளராதீர்கள். இந்தியாவின் விடுதலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. வெகு விரைவில் இந்தியா சுதந்திரம் அடையும். ஜெய்ஹிந்த்.”


இந்தச் செய்தியை வெளியிட்டு விட்டு, காலை 10 மணி அளவில் பாங்காக் நகருக்கு விமானத்தில் புறப்பட்டார். பிற்பகலில் பாங்காக் போய்ச்சேர்ந்தார். அதன் பின்னர் மின்னல் வேகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-1945 ஆகஸ்ட் 17 அதிகாலை பாங்காக் நகரிலிருந்து, சைகோன் (தென் வியட்நாம்) நகருக்கு விமானத்தில் புறப்பட்டார். துணைத்தளபதி கர்னல் ஹபிப்-வுர்-ரகிமான், கர்னல் குல்ஜாராசிங், கர்னல் பிரிதம்சிங், மேஜர் அபித் ஹசன் (நேதாஜி நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்தபோது உடன் இருந்தவர்) ஆலோசகர் தேவநாத் தாஸ், நேதாஜியின் சுதந்திர அரசாங்கத்தில் பிரசார இலாகா மந்திரியாக பதவி வகித்த எஸ்.ஏ.அய்யர் (தமிழர்) ஆகியோர் உடன் சென்றனர்.


ஆகஸ்ட் 18 காலை 10 மணி: விமானம் சைகோன் விமான தளத்தில் இறங்கியது. அங்கு ஜப்பானிய போர் விமானம் ஒன்று புறப்படத்தயாராக இருந்தது. அதில் ஒருவருக்கு மட்டும் இடம் இருக்கிறது என்றும், நேதாஜி மட்டும் வரலாம் என்றும், விமானத்தில் இருந்த ஜப்பானிய அதிகாரிகள் கூறினார்கள். விமானத்தில் போவதா, வேண்டாமா என்று ஒரு கணம் நேதாஜி யோசித்தார். சைகோன் நகரை எந்த நிமிடமும் பிரிட்டிஷ், அமெரிக்கப்படைகள் கைப்பற்றலாம் என்ற நிலை இருந்தது.


அந்தப் படைகளிடம் சிக்கினால் தன்னைக் கைது செய்வது நிச்சயம். போர்க் கைதியாகப் பிடிபடுவதை நேதாஜி விரும்பவில்லை. எனவே, விமானத்தில் போவதே மேல் என்று முடிவு செய்தார். விமானத்தில் ஏறி அமர்ந்தார். கடைசி நேரத்தில், “இன்னொருவர் வரலாம்” என்று ஜப்பானிய அதிகாரிகள் கூறினார்கள். எனவே ஹபிப்-வுர்-ரகிமான், நேதாஜி அருகில் போய் அமர்ந்தார். விமான நிலையத்தில் கூடியிருந்தவர்களைப் பார்த்து நேதாஜி “ஜெய் ஹிந்த்” என்று கூறினார். விமானம் புறப்பட்டது. அது எந்த இடத்துக்குப் போகிறது என்று அறிவிக்கப்படவில்லை. நேதாஜியின் கடைசி விமானப் பயணம் அதுவாக இருக்கும் என்றும் யாரும் நினைக்கவில்லை.


ஆகஸ்ட் 19-ந்தேதி, ஜப்பான் ரேடியோ “நேதாஜி இறந்துவிட்டார்” என்ற திடுக்கிடும் செய்தியை அறிவித்தது.


ஜப்பானிய ரேடியோ கூறியதாவது:-”சுதந்திர இந்திய தற்காலிக அரசாங்கத்தின் தலைவரான நேதாஜி, 1945 ஆகஸ்ட் 16-ந்தேதி ஜப்பானிய அரசுடன் பேச்சு நடத்த விமானத்தில் புறப்பட்டார். 18-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு, பார்மோசா தீவில் உள்ள தைஹோக்கு விமான நிலையத்தில் அவர் விமானம் விபத்துக்குள்ளாகியது. அதில் அவர் படுகாயம் அடைந்தார். ஜப்பானில் ஒரு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்று நள்ளிரவில் அவர் மரணம் அடைந்தார். அவருடன் விமானத்தில் பயணம் செய்த ஜெனரல் சுனாமாசா என்ற ஜப்பானிய அதிகாரி விபத்து ஏற்பட்டவுடனேயே மரணம் அடைந்தார். நேதாஜியின் உதவித் தளபதி கர்னல் ஹபிப்-வுர்-ரகிமானும், மற்றும் 4 ஜப்பானிய அதிகாரிகளும் பலத்த காயம் அடைந்தனர்” இவ்வாறு ஜப்பானிய ரேடியோ அறிவித்தது.


இந்தச்செய்தி, இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலர் நம்பவில்லை. “நேதாஜி இறந்து விட்டார் என்றால், அவர் உடலை ஏன் இந்திய மக்களிடம் ஒப்படைக்கவில்லை?” என்று கேட்டனர். ஆயினும் நேதாஜியுடன் பயணம் செய்து, படுகாயத்துடன் தப்பிய ஹபிப்-வுர்-ரகிமான், “நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன்” என்று கூறினார். ஆயினும், முத்துராமலிங்க தேவர் உள்பட பல தலைவர்கள், “நேதாஜி உயிருடன் இருக்கிறார்” என்றே கூறி வந்தனர்.


இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1956-ல் நேதாஜி பற்றிய உண்மைகளைக் கண்டறிய மூவர் கொண்ட ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி டோக்கியோ, சைகோன், பாங்காக் உள்பட பல இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியது. இறுதியில், கமிட்டியின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர், விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை.


டோக்கியோவில் உள்ள புத்தர் கோவிலில் இருப்பது அவருடைய அஸ்திதான்” என்று அறிக்கை கொடுத்தனர். மூன்றாவது உறுப்பினர் சுரேஷ் சந்திரபோஸ் (நேதாஜியின் அண்ணன்) இதை ஏற்க மறுத்து தனி அறிக்கை கொடுத்தார். 1967-ல், 350 “எம்.பி.”க்கள் கையெழுத்திட்டு, நேதாஜி பற்றி மீண்டும் விசாரணை நடத்தும்படி, ஜனாதிபதியிடம் மனு கொடுத்தனர். அதன்படி ஓய்வு பெற்ற பஞ்சாப் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜி.டி.கோசலாவைக் கொண்ட “ஒரு நபர் விசாரணை கமிஷன்” அமைக்கப்பட்டது. அவர் ஜப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி, “விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை” என்று உறுதி செய்து அறிக்கை கொடுத்தார்



...

உலகப்போர்

முதல் உலகப்போர்

இரண்டாம் உலகப்போர்

போரில் அமெரிக்க பங்கு

இந்திய எல்லையில் ஜப்பான்

வெற்றி பாதையில் ஹிட்லர்

போர் டைரி

முசோலினி

முசோலியின் கோர முடிவு

உலகை மிரட்டிய ஹிட்லர்

ஜப்பான் சராணாகதி

காதலியுன் தற்கொலை

இரண்டாம் போருக்குப் பின்

•முதல் உலகப்போர்

முதல் உலகப்போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. விமானங்களும், போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில்தான் பயன்படுத்தப் பட்டன. ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாத்தும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28ந்தேதி) சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டவன், செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியா வுக்கு ஆதரவாகப் போரில் குதித்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன.

செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா, ஆகியவை போரில் ஈடுபட்டன. 1914 ஆகஸ்ட் 4ந்தேதி முதலாம் உலகப்போர் மூண்டது. ஆரம்பத்தில் அமெரிக்கா நடுநிலை வகித்தது. ஆயினும் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு உதவி செய்தது. அதனால் ஆத்திரம் அடைந்த ஜெர்மனி, அமெரிக்கக் கப்பல்கள் மீது குண்டு வீசியது. கப்பல்கள் கடலில் மூழ்கின. இதன் காரணமாக, ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்கா போரில் குதித்தது.

இரு தரப்பினருக்கும் இடையே தரையிலும், கடலிலும் பயங்கரப் போர்கள் நடந்தன. நீர் மூழ்கிக் கப்பல்களையும், போர் விமானங்களையும் ஜெர்மனி அதிக அளவில் பயன்படுத்தி, நேச நாடுகளுக்கு கடும் சேதத்தை உண்டாக்கியது. நேச நாடுகள் டாங்கிப் படைகளை அதிகமாகப் பயன்படுத்தின. போர் நடந்து கொண்டிருந்த போதே, ரஷியாவில், புரட்சி மூண்டு, லெனின் தலைமையில் உலகின் முதலாவது கம்யூனிச அரசு உதயமாகியது.

1917ம் ஆண்டின் பிற்பகுதியில் ஜெர்மனியுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு போரில் இருந்து விலகிக் கொண்டது. இந்தப் போரில், ஜெர்மனி படைகள் விஷ வாயுவை பயன்படுத்தின. போர்க்களத்திற்கு வரும் ஜெர்மனி வீரர்கள் முகமூடி அணிந்திருப்பார்கள்.

போருக்கு சைக்கிளில் சென்ற ஜெர்மன் படை வீரர்கள்

அவர்களுக்குப் பின்னால் குதிரை வண்டிகளில் விஷப் புகை நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் வரும். எதிரிப்படைகளை நெருங்கியதும், சிலிண்டர்களின் வாய் உடைக்கப்படும். அவற்றிலிருந்து விஷ வாயு வெளியேறும். அதைச் சுவாசிக்கும் எதிரிப் படையினர் மயங்கி விழுந்து மரணம் அடைவார்கள்.

போரில் விஷப்புகையைப் பயன்படுத்தக்கூடாது என்று எல்லா நாடுகளும் ஒப்புக் கொண்டிருந்தன. ஆனால் அதை மீறி ஜெர்மனி விஷப் புகையை பயன்படுத்தியது. ஆரம்பத்தில் ஜெர்மனிக்கு வெற்றிகள் கிடைத்தன. முடிவில், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் படைகளும் ஜெர்மனியை நோக்கி விரைந்தன. இதன் காரணமாக ஜெர்மனி மக்கள் பீதி அடைந்து மன்னர் கெய்சருக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டனர்.

மக்களை அடக்க, ராணுவத்தை கெய்சர் ஏவினார். உலகப்போரில் ஈடுபட்டிருந்த ஜெர்மனி படைகள், சொந்த மக்களைச் சுட்டுக் கொல்லும் நிலை ஏற்பட்டது. நேச நாடுகளின் படைகள், ஜெர்மனி தலைநகரான பெர்லின் நகருக்குள் 1918 நவம்பர் 11-ந்தேதி நுழைந்தன. இந்தப் பெரும் படைகளின் தாக்குதலை, ஜெர்மனி படைகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் ஜெர்மனி சரண் அடைந்தது. ஜெர்மனி மன்னர் கெய்சர் முடிதுறந்தார்.

படை வீரர்களுக்கு உணவு சப்ளை செய்யும் அமெரிக்க வண்டிகள்

ஆட்சியை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். சேதம் 1,561 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரில் 2 கோடிப்பேர் மாண்டனர். யுத்தம் முடிந்த பிறகு உலகம் முழுவதும் பரவிய விஷக் காய்ச்சலால் 2 கோடி மக்கள் உயிர் இழந்தார்கள். 40 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் நாசம் அடைந்தன. போரில் ஈடுபட்ட நாடுகள் இடையே 1919 ஜுன் 28ந் தேதி ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி படை திரட்டும் உரிமையை ஜெர்மனி இழந்தது. போரில் பங்கு கொண்ட நேச நாடுகளுக்கு ஜெர்மனி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்றும் முடிவாயிற்று.

ஜெர்மனியின் வளமான பகுதிகள் சிலவற்றை பிரான்ஸ் கைப்பற்றிக் கொண்டது. சிதறியது ஆஸ்திரியா நாடு, பல்வேறு இன மக்களைக் கொண்ட நாடாகும். போருக்குப்பிறகு, ஆஸ்திரியா நாடு துண்டு துண்டாகச் சிதறியது. யூகோஸ்லேவியா, போலந்து, செக்கசு லோவக்கியா ஆகிய புதிய நாடுகள் உதயமாயின. மீண்டும் இதுபோன்ற உலக யுத்தம் மூளக்கூடாது என்று உலக நாடுகள் கருதின. அதற்காக “சர்வதேச சங்கம்” ஒன்று நிறுவப்பட்டது. இதில் பல நாடுகள் சேர்ந்தன. ஆனால் சங்கத்தை அமைக்கப் பெரும் முயற்சி எடுத்துக் கொண்ட அமெரிக்கா சேர வில்லை.

முதல் உலகப்போர் உலகை மிரட்டிய ஹிட்லர் வெற்றிப்பாதையில் ஹிட்லர்

லண்டன் மீது குண்டு வீச்சு ரஷ்யா நடத்திய வீரப்போர் போரில் அமெரிக்கா..

இந்திய எல்லையில் ஜப்பான்.. ஹிட்லரை கொல்ல முயற்சி முசோலினி டிஸ்மிஸ்

முசோலினியின் கோர முடிவு ஹிட்லரின் காதலி காதலியுடன் தற்கொலை

அணுகுண்டு வீச்சு ஜப்பான் சரணாகதி போருக்குப்பின்…

போர் டைரி-1942 போர் டைரி-1945

இரண்டாம் உலகப்போர்

ஜன,12 போலந்துக்குள் ரஷிய படைகள் முன்னேறின. ஜன.27 மூடப்பட்டிருந்த பர்மா ரோடு திறக்கப்பட்டது. ஜன.30 ஜெர்மனியில் கடும் உணவுப் பஞ்சம் தாண்டவம் ஆடியது. பெர்லின் நகரில் உணவுக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஜன.30 அகதிகளை ஏற்றிச்சென்ற ஜெர்மனி கப்பல்களை ரஷியாவின் நீர்மூழ்கிக்கப்பல்கள் மூழ்கடித்ததால். 6 ஆயிரம் பேர் பலியானார்கள். பிப். 23 பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், ஒரு லட்சம் மக்களை ஜப்பான் கொன்று குவித்தது. மார்ச். 3 பிலிப்பைன்ஸ் தலைநகரம் ஜப்பானிடம் இருந்து மீட்கப்பட்டது. மார்ச். 19 பர்மாவில் உள்ள மாண்டலே நகரில் இருந்து ஜப்பானியப் படைகள் வெளியேறின. மார்ச் 25 ஜப்பானிய நகரங்கள் மீது நேசப்படைகள் தீவிரமாக விமானத்தாக்குதல் நடத்தின. மார்ச் 29 ஆஸ்திரியாவுக்குள் ரஷியப்படை நுழைந்தது. ஏப்.7; ஜப்பானின் மிகப்பெரிய போர்க்கப்பல் யமாட்டோ மூழ்கடிக்கப்பட்டது. ஏப்11 : ரஷியாவும், யுகோஸ்லேவியாவும் நட்புறவு ஒப்பந்த்தில் கையெழுத்திட்டன.

ஏப். 12 அமெரிக்க ஜனாதிபதி ரூஸ் வெல்ட் திடீரென்று காலமானார். அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியாக ட்ரூமன் பதவி ஏற்றார். ஏப். 13 ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவை ரஷியா கைப்பற்றியது. ஏப். 25 ஐ.நா. சபையின் முதல் கூட்டம் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்தது. அதில் 46 நாடுகள் கலந்து கொண்டன. ஏப். 28 இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவரும், ஹிட்லரின் நண்பருமான முசோலினி சுட்டுக்கொல்லப்பட்டார். ஏப். 29 இத்தாலியில் இருந்த ஜெர்மனி படைகள் சரண் அடைந்தன.

ஜெர்மனிக்குள் புகுந்த ரஷியப்படைகள் பெர்லின் நகரை கைப்பற்றின., ஏப்.30 ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். மே 3. பர்மா தலைநகரான ரங்கூனை இங்கிலாந்து படைகள் மீட்டன. மே. 7 ஜெர்மனி நிபந்தனையின்றி சரணாகதி அடைந்தது. மே. 15 யுகோஸ்லேவியா நாட்டில் மிஞ்சியிருந்த ஜெர்மனியர்கள் சரன் அடைந்தனர். ஜுன். 20 யுத்தம் தொடருவதைக் கண்டு, ஜப்பான் மன்னர் ஹிரோ ஹிட்டோ கவலை அடைந்தார். போரை முடிவுக்கு கொண்டுவர சமாதான பேச்சு நடத்தப்பட வேண்டும் என்று வற்புறுத்தினார். ஜுலை. 17 ஜெர்மனியில் உள்ள போட்ஸ்டாம் நகரில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன், இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில், ரஷிய அதிபர் ஸ்டாலின் ஆகிய முப்பெரும் தலைவர்கள் சந்தித்தனர். நிபந்தனை இன்றி சரண் அடையும் படி ஜப்பானுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஜுலை. 26 இங்கிலாந்தில் நடந்த பொதுத் தேர்தலில், யாரும் எதிர் பாராதவிதமாக ஆளும் கட்சி தோல்வி அடைந்தது. பிரதமராக இருந்த சர்ச்சில் விலக தொழில் கட்சியைச் சேர்ந்த ஆட்லி பிரதமர் ஆனார்.

ஜுலை 26; சரண் அடைய முடியாது என்று ஜப்பான் அறிவித்தது. ஆக 6; ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மீது, அமெரிக்கா அணுகுண்டு வீசியது. ஆக. 9 அமெரிக்காவின் இரண்டாவது அணுகுண்டு, ஜப்பானின் நாகசாகி நகரின் மீது வீசப்பட்டது. ஆக. 15 ஜப்பான் சரண் அடைவதாக ஜப்பான் மன்னர் ஹிரோ ஹிட்டோ அறிவித்தார். ஆக. 28 நேசப்படைகளின் தளபதி மக்ஆர்தர், ஜப்பானுக்கு விரைந்தார். செப். 2 அமெரிக்காவின் மிசவுரி என்ற போர்க்கப்பலுக்கு ஜப்பானிய தளபதிகள் சென்று சரணாகதி பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.

முதல் உலகப்போர் உலகை மிரட்டிய ஹிட்லர் வெற்றிப்பாதையில் ஹிட்லர்

லண்டன் மீது குண்டு வீச்சு ரஷ்யா நடத்திய வீரப்போர் போரில் அமெரிக்கா..

இந்திய எல்லையில் ஜப்பான்.. ஹிட்லரை கொல்ல முயற்சி முசோலினி டிஸ்மிஸ்

முசோலினியின் கோர முடிவு ஹிட்லரின் காதலி காதலியுடன் தற்கொலை

அணுகுண்டு வீச்சு ஜப்பான் சரணாகதி போருக்குப்பின்…

போர் டைரி-1942 போர் டைரி-1945

போரில் அமெரிக்கா

அமெரிக்க வசம் இருந்த “பெர்ல் ஹார்பர்” மீது ஜப்பான் நடத்தியவிமானத் தாக்குதல் 1941-ம் ஆண்டு டிசம்பர் 7ந்தேதி. அன்றுதான், உலகப் போரில் எதிர் பாராத திருப்பம் ஏற்பட்டு, வரலாறே மாறியது. அதுவரை உலகப் போரில் அமெரிக்கா கலந்து கொள்ளாமல், மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

ஜெர்மனியின் நட்பு நாடான ஜப்பான், அன்றைய தினம் அமெரிக்காவுக்கு சொந்தமான ஹவாய் தீவில் உள்ள “பெர்ல்” துறைமுகத்தை தாக்கியது. (பசுபிக் பெருங்கடலில் அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் இடையே உள்ளது ஹவாய் தீவு) அந்தத் பேர்ல் ஹார்பர் பகுதியில் ஜப்பான் வீசிய குண்டு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 8 அமெரிக்கப் போர்க்கப்பல்களும், 200 விமானங்களும் ஜப்பான் விமானத்தாக்குதலில் அழிந்தன. 3 ஆயிரம் அமெரிக்க வீரர்களும் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்காபோரில் குதித்தது.

பேர்ல் ஹார்பர் பகுதியில் ஜப்பான் வீசிய குண்டு

ஜப்பான் மீதும், ஜெர்மனி மீதும் போர்ப் பிரகடனம் செய்தார் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட். இதன் மூலம் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா ஆகிய 4 வல்லரசு நாடுகளும் ஓரணியில் நின்று ஜெர்மனி மீதும், ஜப்பான் மீதும் தாக்குதல் நடத்தின.

இதனால் யுத்தம் தீவிரம் அடைந்தது. 1942 பிப்ரவரி 15-ந்தேதி பிரிட்டிஷ் காலனியான சிங்கப்பூரை ஜப்பான் கைப்பற்றியது. அங்கிருந்த இங்கிலாந்து ராணுவம், ஜப்பானிய ராணுவத்திடம் சரண் அடைந்தது. “சூரியன் அஸ்தமிக்காத ராஜ்ஜியம்” என்று புகழ் பெற்றிருந்த இங்கிலாந்து, சிங்கப்பூரில் ஜப்பானிடம் சரண் அடைய நேரிட்டது.

சிங்கப்பூருக்கும், மலாயாவுக்கும் இடையே உள்ள கடலின் நீளம் ஒரு மைல்தான். சிங்கப்பூரில் இருந்த பிரிட்டிஷ் வீரர்களில் பலர், கடலில் நீந்தி, மலாயாவுக்குத் தப்பிச் சென்றனர். 54 நாள் நடந்த கடும் போருக்குப்பின் மலாயாவையும் ஜப்பான் கைப்பற்றியது. அங்கு இங்கிலாந்து தரப்பில் 25,000 பேர் மாண்டனர். ஏராளமான ஆயுதங்களும் அழிந்தன. ஜப்பானுக்கு ஏற்பட்ட உயிர் சேதம் 5 ஆயிரம் மட்டுமே. ஜப்பான் படைகள் பர்மாவையும் (தற்போதைய மியான்மீர்) தாக்கின. பர்மா தலைநகருக்கு 40 மைல் தூரத்தில் உள்ள பெகு என்ற நகரம், ஜப்பானியர் வசம் ஆகியது. பர்மாவில் இருந்த இங்கிலாந்து ராணுவத்தினர், திறமையானவர்கள் அல்ல. எனவே, அவர்களை ஜப்பானியர் எளிதாக முறியடிக்க முடிந்தது.

தற்போதைய இந்தோனேஷியா அக்காலத்தில் “டச்சு கிழக்கிந்திய தீவுகள்” என்று அழைக்கப்பட்டது. கிழக்கிந்திய தீவுகளையும் ஜப்பான் கைப்பற்றியது. டச்சு போர்னியோவில் பெட்ரோல் கிணறுகள் இருந்தன. எனவே, அந்த நாட்டையும் கைப்பற்ற ஜப்பான் முடிவு செய்தது. ஜப்பான் பாரசூட் படையினர், போர்னியோவுக்குள் குதித்து, அந்த நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர். கிழக்கிந்தியத் தீவுகளிலும், போர்னியோவிலும் இருந்த டச்சு படையினர் சரண் அடைந்தனர். இந்த நாடுகளில் சுமார் ஒரு லட்சம் பேர்களை, ஜப்பான் ராணுவத்தினர் “போர்க்கைதி களாக” கைது செய்தனர்.

1942 ஏப்ரல் 1-ந்தேதி, இலங்கை மீது ஜப்பான் தாக்குதல் நடத்தியது. பெர்ல் துறைமுகத்தை தாக்கிய ஜப்பான் கடற்படை தளபதி அட்மிரல் நாகுமோ தலைமையில் இந்த தாக்குதல் நடந்தன. ஜப்பான் தாக்குதல் நடத்தப்போகிறது என்பதைத் தெரிந்து கொண்ட இங்கிலாந்து, முன் எச்சரிக்கையாக தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

கொழும்பிலும், முக்கிய கடற்படை தளமான திரிகோண மலையிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்களை, பத்திரமான இடங்களுக்கு அனுப்பிவிட்டது. கொழும்பு மீது பறந்த ஜப்பான் போர் விமானம், அங்கு தாக்குதல் நடத்த எதுவுமே இல்லாததால், குண்டு வீசாமல் திரும்பியது. அப்போது, கடலில் ஒரு கப்பல் போய்க்கொண்டிருந்தது. அதன் மீது குண்டு வீசி அதை மூழ்கடித்துவிட்டு, ஜப்பான் விமானம் திரும்பிச் சென்றது. இலங்கை தீவாக இருந்ததால், ஜப்பான் தனது தரைப் படையை அங்கு அனுப்ப இயலவில்லை.

போர் டைரி 1940:

ஜன. 8: இங்கிலாந்தில் உணவு ரேஷன் அமலுக்கு வந்தது.

ஏப். 9: டென்மார்க், நார்வே ஆகிய நாடுகள் மீது ஜெர்மனி தாக்குதல் நடத்தியது.

ஏப். 30: பெர்ல் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படையின் கப்பல்கள் நிறுத்தப்பட்டன. இங்கிலாந்து பிரதமர் ராஜினாமா மே 10: போரை சரிவர சமாளிக்கத் தவறிவிட்டதாக குற்றம் சாட்டப் பட்டதால் இங்கிலாந்து பிரதமர் சேம்பர் லைன் ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக, புதிய பிரதமராக சர்ச்சில் பதவி ஏற்றார்.

மே 28: ஜெர்மனியிடம் பெல்ஜியம் சரண் அடைந்தது.

ஜுன் 14: ஜெர்மனியிடம் பிரான்சு சரண் அடைந்தது.

ஜுலை 24: இங்கிலாந்துக்கு நவீன போர் விமானங்களை கொடுக்க அமெரிக்கா முன் வந்தது.

ஆக. 19: இங்கிலாந்து வசம் இருந்த சோமாலிலாந்தை, ஜெர்மனி கைப்பற்றியது. லண்டன் மீது தாக்குதல்.

ஆக. 27: இங்கிலாந்து நாட்டின் 20 நகரங்கள் மீது ஜெர்மனி விமானங்கள் தாக்குதல் நடத்தின.

செப். 7: லண்டன் நகரத்தின் மீது ஜெர்மனி விமானங்கள் குண்டு மாரி பொழிந்தன.

செப். 27: ஜெர்மனியுடன் சேர்ந்து, ஜப்பான் போரில் ஈடுபட்டது.

அக். 28: கிரீஸ் மீது ஜெர்மனி தாக்குதல் நடத்தியது. நவ. 3: இங்கிலாந்து மீது குண்டு வீசிய ஜெர்மனி விமானங்களை, இங்கிலாந்து பீரங்கிகள் சுட்டுத்தள்ளின. இதுவரை 2,433 ஜெர்மனி விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்” என்று இங்கிலாந்து அறிவித்தது.

நவ. 5: அமெரிக்க ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக ரூஸ் வெல்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதல் உலகப்போர் உலகை மிரட்டிய ஹிட்லர் வெற்றிப்பாதையில் ஹிட்லர்

லண்டன் மீது குண்டு வீச்சு ரஷ்யா நடத்திய வீரப்போர் போரில் அமெரிக்கா..

இந்திய எல்லையில் ஜப்பான்.. ஹிட்லரை கொல்ல முயற்சி முசோலினி டிஸ்மிஸ்

முசோலினியின் கோர முடிவு ஹிட்லரின் காதலி காதலியுடன் தற்கொலை

அணுகுண்டு வீச்சு ஜப்பான் சரணாகதி போருக்குப்பின்…

போர் டைரி-1942 போர் டைரி-1945

இந்திய எல்லையில் ஜப்பான்

உலகப்போரில், இங்கிலாந்து படையில் இந்தியர்கள் பங்கு கொண்டார்கள். போர் முனையில் வீர தீரச் செயல் களில் ஈடுபட்டார்கள். இந்தியா மீது ஹிட்லருக்கு ஒரு கண் இருந்தது. இந்திய மக்கள் இங்கிலாந்து ஆதிக்கத்தை எதிர்த்து சுதந்திரப் போராட்டம் நடத்தி வந்தனர்.

உலகப் போரின் போதும், இந்தப் போராட்டம் நீடித்த ஜெர்மனியை அடக்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், ரஷிய அதிபர் ஸ்டாலின் மூவரும்சந்தித்துப் பேசினர்.

இந்திய மக்களின் நம்பிக்கையை பெற்றுவிட்டால், இந்தியாவை சுலபமாகக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தார் ஹிட்லர். ஆனால் அவருடைய முயற்சி பலிக்கவில்லை. “இந்தியா இங்கிலாந்து ஆதிக்கத்தில் இருந்து கஷ்டப்படுகிறது. நாங்கள் இந்தியாவை விடுவிப்போம்” என்று 1942 ஏப்ரலில் ஜப்பான் அறிவித்தது.

அதற்கு உடனடியாக நேரு பதில் அளித்தார். “இந்திய மக்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்வார்கள். அதற்கான வீரமும், விவேகமும் இந்திய மக்களுக்கு உண்டு. எனவே இந்திய மக்களின் விடுதலைக்கு ஜப்பான் உதவி தேவை இல்லை” என்று அறிவித்தார். இந்தியாவுக்கு இங்கிலாந்து எதிரி என்றபோதிலும் ஹிட்லரும், ஜப்பானும் உலகத்துக்கே எதிரிகளாக இருந்தார்கள். எனவேதான் ஜப்பானின் உதவி தேவை இல்லை என்று நேரு கூறினார்.

பர்மாவைக் கைப்பற்றிக் கொண்ட ஜப்பான் ராணுவம், 1944 மார்ச் மாதத்தில் இந்தியாவை நோக்கித் திரும்பியது. மார்ச் 30-ந்தேதி இம்பால் நகரத்தை முற்றுகையிட்டது. (இம்பால் நகரம் இப்போது மணிபுரி மாநிலத்தில் உள்ளது). இம்பாலில் இருந்த இங்கிலாந்து படையில் இந்தியர்களும் இருந்தார்கள். அவர்கள் ஜப்பானியரை எதிர்த்து வீரப்போர் புரிந்தனர்.

இதனால் இம்பால் நகருக்குள் ஜப்பான் படை நுழைய முடியவில்லை. ஆனாலும், எப்படியாவது இம்பாலைப் பிடித்துவிட்டு, இந்தியாவுக்குள் நுழைந்து விடவேண்டும் என்ற உறுதியுடன் ஜப்பானியர் 2 மாத காலம் முற்றுகையிட்டனர். இந்த சமயத்தில், இம்பாலுக்குள் சிக்கியிருந்த இங்கிலாந்து வீரர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்கள், மருந்துகள் முதலியவற்றை பிரிட்டிஷ் விமானங்கள் கொண்டு வந்து போட்டன.

ஆனால் முற்றுகையிட்டிருந்த ஜப்பானிய படைகளுக்கு உணவுப் பொருள்களோ, மருந்துகளோ கிடைக்காததோடு, வெடி பொருட்களும் தீர்ந்துபோய் விட்டன. இதன் காரணமாக, ஜப்பான் படைகள் தோல்வியைத் தழுவின. இம்பாலை தாக்கிய ஜப்பான் வீரர்கள் எண்ணிக்கை 85 ஆயிரம். அவர்களில் பெரும் பான்மையோர் போரில் பலியாகிவிட, மீதிப்பேர் பின்வாங்கிச் சென்றார்கள்.

ஏற்கனவே மாஸ்கோவை கைப்பற்ற முயன்று, ரஷியாவிடம் மூக்கறுபட்ட ஹிட்லர், ரஷியாவை எப்படியாவது அடிபணியச்செய்ய எண்ணி, ஸ்டாலின் கிராட் நகரைத் தாக்குமாறு தன் படைகளுக்குக் கட்டளையிட்டார். 1942 ஜுலை மாதத்தில், ரஷியாவில் உள்ள ஸ்டாலின் கிராட் நகரத்தை ஜெர்மனி படைகள் சூழ்ந்து கொண்டன. ஆனால், ரஷிய மக்கள் அஞ்சாமல் எதிர்த்து நின்றனர். சுலபமாக ஸ்டாலின் கிராடை கைப்பற்றி விடலாம் என்று ஜெர்மன் படைகள் நினைத்தது பகல் கனவு ஆயிற்று. அவர்களுக்கு உணவுப்பொருள்களும், மருந்துகளும் கிடைக்கவில்லை. இதனால் ஜெர்மனி வீரர்கள், ஒரு விநாடிக்கு 7 பேர் செத்து விழுந்ததாக மதிப்பிடப்படுகிறது.

1943 ஜனவரி 31-ந்தேதி ஹிட்லர், “எக்காரணம் கொண்டும் ஜெர்மனி தளபதியாக இருப்பவர் சரண் அடையக்கூடாது. அதைவிட தற்கொலை செய்து கொள்ளலாம்” என்று, ஸ்டாலின் கிராடில் இருந்த பீல்டுமார்ஷல் வான் பவ்லஸ் என்பவருக்கு தகவல் அனுப்பினார். ஆனால், தளபதி பவுலஸ் சுமார் 1,00,000 ஜெர்மனி ராணுவத்தினருடன் சரண் அடைந்தார்.

ஜெர்மனியையும், ஜப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், ரஷிய அதிபர் ஸ்டாலின் ஆகிய மூவரும் சந்தித்துப் பேசினார்கள். இந்த சந்திப்பு 1943 நவம்பர் 26-ந்தேதி, பாரசீக நாட்டில் டெஹ்ரான் நகரில் நடந்தது. உலகத்தையே மிரட்டிக் கொண்டிருந்த ஹிட்லரை முறியடிப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன.

ரஷியாவைப் பிடித்து விடலாம் என்று நினைத்த ஹிட்லர் தோல்வி அடைந்தார். ஆப்பிரிக்காவை கைப்பற்ற நினைத்த ஹிட்லரின் நண்பரான இத்தாலி சர்வாதிகாரி முசோலினியும் தோற்றுப் போனார். அவருக்கு உதவுவதற்காகச் சென்ற ஜெர்மனி ராணுவத்தினர் 2 லட்சம் பேர் சரண் அடைந்தனர். ஜெர்மனி கைப்பற்றியிருந்த ரஷிய பகுதிகளை மீட்க, ரஷியப் படைகள் மின்னல் வேகத்தாக்குதல் நடத்தின. அதில் ஒரு லட்சம் ஜெர்மனி வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜெர்மனியின் ஏராளமான டாங்கிகளும், பீரங்கிகளும், விமானங்களும் அழிக்கப்பட்டன. தொடர்ந்து நடந்த போரில் ஜெர்மனி படைகளுக்குத் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டது.

போர் டைரி 1941 பிப். 6: ஜெர்மனி ராணுவம், வடக்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்டது.

ஏப். 6: žகோஸ்லேவியா, கிரீஸ் நாடுகளை ஜெர்மனி தாக்கியது.

ஏப். 8: 70 ஆயிரம் கிரேக்கப் படை யினரை ஜெர்மனி ராணுவம் சிறை பிடித்தது.

ஏப். 12: žகோ தலைநகருக்குள் ஜெர்மனி படைகள் புகுந்தன.

ஏப். 16: லண்டன் மீது ஜெர்மனி நடத்திய விமானத் தாக்குதலால் 2,300 பேர் கொல்லப்பட்டனர்.

ஏப். 17: ஜெர்மனியிடம் žகோஸ் லேவியா சரண் அடைந்தது.

ஏப்.18: ஈராக் நாட்டுக்குள் பிரிட்டிஷ் படைகள் புகுந்தன.

மே 10: லண்டன் மீது ஜெர்மனி விமானங்கள் குண்டு வீசியதில் 1,400 பேர் மாண்டனர். இங்கிலாந்து பாராளுமன்ற கட்டிடம் சேதம் அடைந்தது. ரஷியா மீது படையெடுப்பு

ஜுன் 22: ரஷியா மீது ஜெர்மனி படையெடுத்தது.

ஜுலை 26: தூரக்கிழக்கு நாடு களில் உள்ள அமெரிக்கப் படைகளின் தளபதியாக மக்ஆர்தர் நியமிக்கப்பட்டார். ஜுலை 27: வியட்னாம், கம்போடியா ஆகிய நாடுகளை ஜப்பானியர் கைப்பற்றினர்.

ஜுலை 27: ரஷியாவுக்குள் ஜெர்மனி படைகள் முன்னேறின.

ஜுலை 27: திறமை குறைவான ரஷிய தளபதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆக. 2: ஜெர்மனி படைகளின் முன்னேற்றத்தை ரஷியா தடுத்து நிறுத்தியது.

ஆக. 7: ரஷியாவின் முப்படை களின் தலைமை தளபதி பொறுப்பையும் அதிபர் ஸ்டாலின் ஏற்றார்.

ஆக. 25: ஜெர்மன் படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்க, “லெனின் அணை” என்ற பெரிய அணையை ரஷியா தகர்த்தது.

செப். 24: லெனின் கிராட் பகுதிக்குள் ஜெர்மனி படைகள் Žழைந்தன. மாஸ்கோவை நோக்கி முன்னேற்றம்

அக். 2: ரஷியத் தலைநகர் மாஸ் கோவை நோக்கி ஜெர்மனி படைகள் முன்னேறின.

அக். 16: மாஸ்கோவில் உள்ள ரஷிய அரசு அலுவலகங்கள் காலி செய்யப்பட்டன. ஸ்டாலின் மட்டும் மாஸ்கோவை விட்டு வெளியேறவில்லை.

அக். 17: ஜப்பான் பிரதமர் பதவியை விட்டு கோனோயே நீக்கப்பட்டார். தளபதி டோஜோ ஜப்பான் பிரதமர் பதவியை ஏற்றார்.

நவ. 22: ஜெர்மனி படைகள், லெனின் கிராட் நகரத்தை அடைந்தன.

டிச. 2: மாஸ்கோவை நெருங்கிய ஜெர்மனி படை மீது ரஷியப் படை அதிரடி தாக்குதல் நடத்தியது. “பெர்ல்” துறைமுகம் மீது தாக்குதல்

டிச. 7: அமெரிக்கா வசம் உள்ள ஹவாய் தீவில் உள்ள “பெர்ல்” துறைமுகத்தின் மீது ஜப்பான் விமானங்கள் குண்டு வீசி தாக்கின.

டிச. 10: மலாயா மீதும் வடக்கு பிலிப்பைன்ஸ் மீதும் ஜப்பான் படையெடுத்தது.

டிச. 12: மாஸ்கோவில் ஜெர்மனி படைகள் தோல்வியை தழுவின.

டிச. 19: ஜெர்மனி ராணுவ தளபதி பொறுப்பையும் ஹிட்லர் ஏற்றார்.

டிச. 25: ஹாங்காங் தீவை ஜப்பான் ராணுவம் கைப்பற்றியது.

முதல் உலகப்போர் உலகை மிரட்டிய ஹிட்லர் வெற்றிப்பாதையில் ஹிட்லர்

லண்டன் மீது குண்டு வீச்சு ரஷ்யா நடத்திய வீரப்போர் போரில் அமெரிக்கா..

இந்திய எல்லையில் ஜப்பான்.. ஹிட்லரை கொல்ல முயற்சி முசோலினி டிஸ்மிஸ்

முசோலினியின் கோர முடிவு ஹிட்லரின் காதலி காதலியுடன் தற்கொலை

அணுகுண்டு வீச்சு ஜப்பான் சரணாகதி போருக்குப்பின்…

போர் டைரி-1942 போர் டைரி-1945

வெற்றிப்பாதையில் ஹிட்லர்

போலந்தை பிடித்துக் கொண்ட ஜெர்மனியுடன் போர் தொடுக்க இங்கிலாந்தும், பிரான்சும் முடிவு செய்து அதற்கான போர் பிரகடனத்தை 1939 செப்டம்பர் 6-ந்தேதி வெளியிட்டன. “போலந்தை விட்டு ஜெர்மனி ராணுவம் உடனே வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்” என்று இறுதி எச்சரிக்கை விடுத்தன. இதை ஹிட்லர் பொருட்படுத்தவில்லை. இங்கிலாந்தையும், பிரான்சையும் தாக்கும்படி தன் படைகளுக்கு கட்டளையிட்டார். அந்த நிமிடம் வரை இது உலக யுத்தமாக மாறும் என்று யாரும் நினைக்கவில்லை. ஹிட்லர் தன் தளபதிகளிடம் பேசும்போது “இந்த யுத்தம் ஐரோப்பாவுடன் நின்று விடும். முதல் உலகப் போரைப் போல, உலகம் முழுவதும் பரவாது” என்று கூறியிருந்தார். ஆனால் இங்கிலாந்தும், பிரான்சும் போரில் குதித்ததும் அது உலக யுத்தமாக மாறியது.

ஹிட்லர்

ஹிட்லரின் கட்டளைப்படி இங்கிலாந்தையும், பிரான்சையும் தாக்க ஜெர்மனியின் முப்படைகளும் துரிதமாக செயல்பட்டன. அக்டோபர் 14-ந்தேதிஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல் பிரிட்டிஷ் கடற்படையினரின் கட்டுக்காவலையும் மீறி, இங்கிலாந்தின் மிக பிரமாண்டமான போர்க்கப்பலை (பெயர்: “ராயல் ஓக்”) தாக்கி மூழ்கடித்தது. இதனால் கப்பலில் இருந்த 800 மாலுமிகள் பலியானார்கள்.

இது இங்கிலாந்தை அதிர்ச்சி அடையச் செய்தது. இங்கிலாந்துக்கு சேதம் உண்டாக்கிவிட்ட மகிழ்ச்சியில் பின்லாந்து மீது படையெடுத்தார்ஹிட்லர். ஆரம்பத்தில் பின்லாந்து படைகள் எதிர்த்துப் போரிட்டபோதிலும் பிறகு சரண் அடைந்தன. பின்னர் நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகள் மீது மின்னல் வேக தாக்குதல் நடத்தி வெகு விரைவில் அந்த இரு நாடுகளையும் கைப்பற்றிக் கொண்டார் ஹிட்லர். பின்னர் சுவீடன், நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகியவற்றையும் தாக்கி வெற்றி பெற்றார்.

1940 மே 10-ந்தேதி, பிரான்ஸ் நாட்டின் மீது ஹிட்லர் படையெடுத்தார். பிரிட்டன் படைகள் பிரான்சுக்கு ஆதரவாக அனுப்பப்பட்டன. என்றாலும் ஜெர்மனியின் டாங்கி படைக்கும், விமானப் படைக்கும் ஈடுகொடுக்க முடியாமல் பிரிட்டிஷ், பிரெஞ்சு படைகள் திணறின.

பிரான்ஸ் ராணுவத்தில் 51 லட்சம் வீரர்களும், பிரான்சுக்கு ஆதரவாக 7 லட்சம் பிரிட்டிஷ் ராணுவத்தினரும் இருந்த போதிலும் பயனில்லை. ஜெர்மனியின் 4 ஆயிரம் விமானங்கள், பிரான்ஸ் மீது குண்டு மாரி பொழிந்தன. அதே சமயத்தில் ஜெர்மனியின் தரைப்படைகளும் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரை நோக்கி முன்னேறின.

மே 27-ந்தேதி டன்கிர்க் துறைமுகத்தில் இங்கிலாந்து மற்றும் நேசப்படைகளைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் ராணுவ வீரர்கள் முகாமிட்டு இருந்தனர். அவர்களை சுற்றி வளைத்துப் பிடிக்க ஜெர்மனி முயற்சி செய்தது. எனினும் சர்ச்சிலின் விïகத்தால் அவர்களில் பெரும்பான்மையோர் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ஆயினும் சுமார் 40 ஆயிரம் பேர் ஜெர்மனியிடம் யுத்தக் கைதிகளாகப் பிடிபட்டனர்.

1940 ஜுன் மாத மத்தியில் பாரீஸ் நகரை ஜெர்மனி படைகள் முற்றுகையிட்டன. போரில் பிரான்ஸ் வீரர்கள் 5 லட்சம் பேர் மாண்டார்கள். 10 லட்சம் பேர் சிறைப்பிடிக்கப்பட்டனர். “உடனே சரண் அடையாவிட்டால் பாரீஸ் நகரத்தை எரித்துச் சாம்பலாக்குவேன்” என்று கொக்கரித்தார் ஹிட்லர். இதன் காரணமாக, 1940 ஜுன் 14-ந்தேதி ஜெர்மனியிடம் பிரான்ஸ் சரண் அடைந்தது. ஹிட்லர் நேரடியாக பாரீஸ் நகருக்குச் சென்று சரணாகதிப் பத்திரத்தில் பிரெஞ்சு பிரதமரிடமும், ராணுவத் தளபதியிடமும் கையெழுத்து வாங்கினார்.

முதல் உலகப்போர் உலகை மிரட்டிய ஹிட்லர் வெற்றிப்பாதையில் ஹிட்லர்

லண்டன் மீது குண்டு வீச்சு ரஷ்யா நடத்திய வீரப்போர் போரில் அமெரிக்கா..

இந்திய எல்லையில் ஜப்பான்.. ஹிட்லரை கொல்ல முயற்சி முசோலினி டிஸ்மிஸ்

முசோலினியின் கோர முடிவு ஹிட்லரின் காதலி காதலியுடன் தற்கொலை

அணுகுண்டு வீச்சு ஜப்பான் சரணாகதி போருக்குப்பின்…

போர் டைரி-1942 போர் டைரி-1945

போர் டைரி - 1942
ஜன.1: 26 உறுப்பினர்களுடன் ஐ.நா.சபை உருவாயிற்று. ஜன.2: பிலிப்பைன்ஸ் தீவில்உள்ள மணிலா நகரத்தை ஜப்பானியர் கைப்பற்றினர். ஜன.19: ஜெர்மணி படைகள் இருந்த பகுதிக்குள் ரஷிய பாராசூட் படையினர் குதித்து திடீர் தாக்குதல் நடத்தினர். ஜன.31: சிங்கப்பூரை ஜப்பான் படைகள் முற்றுகையிட்டன. பிப்.8: சிங்கப்பூருக்குள் ஜப்பான் படைகள் புகுந்தன. சிங்கப்பூர் வீழ்ந்தது பிப்.15: ஜப்பானிடம் சிங்கப்பூர் சரண் அடைந்தது மார்ச்.7: ஜப்பானிடம் ஜாவா சரண் அடைந்தது. ஏப்.1: இலங்கை மீது ஜப்பான் விமானங்கள் குண்டு வீச்சு. ஏப்.18: ஜப்பான் தலைநகர் டோக்கியோ மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தியது. ஏப்.30: ஹிட்லரும் முசோலினியும் சந்தித்துப் பேசினார்கள் ( லெனின்கிராட் நகரில் மட்டும் ஏப்பரல் மாதத்தில் 1 லட்சம் பேர் மாண்டனர் )

மே.2: பர்மாவில் உள்ள மாண்டாலே நகரை ஜப்பான் கைப்பற்றியது. மே.4: மடகாஸ்கர் தீவை பிரிட்டீஷ் படைகள் கைப்பற்றின. மே.31: ஆஸதிரேலியாவில் உள்ள சிட்னி துறைமுகத்தின் மீது ஜப்பானின் நீர்மூழ்கி கப்பல்கள் தாக்குதல் நடத்தின. ( இந்த மே மாதத்தில் மட்டும் 1,30,000 யூதர்கள் விஷவாயு மூலமாகவும் துப்பாக்கியால் சுட்டும் ஜெர்மானியர்கள் கொன்றனர். ) ஜுன்.10: போலந்து நாட்டில் ஏராளமான மக்களை ஜெர்மனி தூக்கிலிட்டது. ஜ×ன்.16: மத்திய தரைக்கடலில் பிரிட்டீஷ் போர்க்கப்பல்களும் 3 இத்தாலி போர்க்கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டன ஐசோனவர் ஜுன்.25: ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க படைகளுக்கு தளபதியாக ஐசனோவர் (பிற்காலத்தில் ஜனாதிபதியானவர்) நியமிக்கப்பட்டவர்.

( ஜுன் மாதத்தில் வட அட்லாண்டிக் கடலில் நேச நாடுகளின் 124 கப்பல்களை ஜெர்மனி தாக்கி மூழ்கடித்தது ) ஜுலை.27: ரஷியாவுக்கு Žழைந்த ஜெர்மணிப்படைகள் டான் சூஆற்றைக்கடந்து காகசஸ் நகரை நோக்கி முன்னேறின. ஒரு அடிக்கூட பின்வாங்கக்கூடாது என்று ஸ்டாலின் தனது படைகளுக்கு கட்டளையிட்டார். ஆக.9: காகசஸ் நகருக்கு அருகில் எண்ணெய் கிணறுகள் உள்ள முக்கிய பகுதிக்குள் ஜெர்மணிப்படைகள் Žழைந்தன. ஆக.13: இங்கிலாந்துப்பிரதமர் சர்ச்சில் ரஷுயாவுக்கு சென்று ஸ்டாலினை சந்தித்து பேசினார் ஆக.23: ஸ்டாலின் கிரேடுக்கு வடக்கே உள்ள வால்கா என்ற பகுதியை ஜெர்மனிப்படைகள் அடைந்தன. செப்.13: ஸ்டாலின் கிரேடு நகருக்குள் ஜெர்மனி படைகள் புகுந்தன.

செப்.22: ஸ்டாலின் கிராடு மையப்பகுதியை ஜெர்மனிப்படைகள் அடைந்தன. இரு தரப்பு படைகளுக்கும் இடையே கடும் போர் நடந்தது. ஜெர்மனி ரானுவம் திணறல் நவ.22: ஸ்டாலின் கிராடு நகரில் புகுந்த ஜெர்மனிப்படைகளை ரஷ்யப்படைகள் சுற்றி வளைத்து தாக்கின. டிச.11: ரஷ்யாவில் காகசஸ் நகரை பிடித்த ஜெர்மனி ரானுவம் அங்கிருந்து பின்வாங்கியது. டிச.19: ஸ்டாலின் கிராடில் அகப்பட்டுக் கொண்ட தனதுரானுவத்தை மீட்க ஜெர்மனி செய்த முயற்சி தோல்வி அடைந்தது. ( டிசம்பர் மாதத்தில் மட்டும் 18 ஆயிரம் ரஷிய யுத்தக் கைதிகளை ஜெர்மனி ரானுவம் பட்டினி போட்டுக் கொன்றது. 1942-ல் கொல்லப்பட்ட žதர்களின் எண்ணிக்கை 30 லட்சம் )

முதல் உலகப்போர் உலகை மிரட்டிய ஹிட்லர் வெற்றிப்பாதையில் ஹிட்லர்

லண்டன் மீது குண்டு வீச்சு ரஷ்யா நடத்திய வீரப்போர் போரில் அமெரிக்கா..

இந்திய எல்லையில் ஜப்பான்.. ஹிட்லரை கொல்ல முயற்சி முசோலினி டிஸ்மிஸ்

முசோலினியின் கோர முடிவு ஹிட்லரின் காதலி காதலியுடன் தற்கொலை

அணுகுண்டு வீச்சு ஜப்பான் சரணாகதி போருக்குப்பின்…

போர் டைரி-1942 போர் டைரி-1945

முசோலினி டிஸ்மிஸ்

இரண்டாம் உலகப்போரில், ஹிட்லருக்கு அடுத்த பெரிய சர்வாதிகாரியான முசோலினி போரில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக 1943 ஜுலையில் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ஹிட்லர் வாழ்க்கையைப் போலவே, முசோலினியின் வாழ்க்கையும் திகிலும், திருப்பங்களும் நிறைந்தது.

இத்தாலியில், இரும்புப் பட்டறை நடத்திய கொல்லர் ஒருவரின் மகனாக 1883-ம் ஆண்டு ஜுலை 29-ந்தேதி பிறந்தவர் முசோலினி. தாயார் பள்ளி ஆசிரியை. அப்போது இத்தாலியில் மன்னர் ஆட்சி நடந்து வந்தது. முசோலினியின் தந்தை, “மன்னர் ஆட்சி ஒழிந்து, மக்கள் ஆட்சி மலரவேண்டும்” என்ற கருத்துடையவர். தன் இரும்புப் பட்டறைக்கு வருகிறவர்களிடம் எல்லாம் அரசியல் பேசுவார். அதனால், முசோலினிக்கும் இளமையிலேயே அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டது. பள்ளிப் படிப்பை முடித்ததும், சில காலம் ஆசிரியராகப் பணி யாற்றினார்.

லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், ஆங்கிலம் முதலிய மொழிகளையும் கற்றறிந்த அவர், பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்கவர். ஆசிரியர் தொழிலை விட்டு சிறிது காலம் ராணுவத்தில் பணியாற்றினார். பிறகு, கம்யூனிஸ்ட் பத்திரிகை ஒன்றின் ஆசிரியரானார். பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைகள் பெரும் பரபரப்பை உண்டாக்கின.

ஒரு கட்டுரைக்காக அவருக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்து விடுதலையானபோது, பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அவரை சிறை வாசலில் வரவேற்றனர். மறுநாளே, “அவந்தி” என்ற புரட்சிப் பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் 1914-ம் ஆண்டில் முதலாம் உலகப்போர் மூண்டது. முசோலினி ராணுவத்தில் சேர்ந்தார். (இதே ஆண்டில்தான் ஜெர்மனியில் ஹிட்லரும் ராணுவத்தில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) போரில் முசோலினி படுகாயம் அடைந்து, ஊருக்குத் திரும்பினார். 1919-ல் உலகப்போர் முடிந்தது. போரில், இத்தாலியில் மட்டும் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பலியானார்கள். மேலும் 10 லட்சம் பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.

இத்தாலியின் பொருளாதாரமே சீரழிந்து எங்கு பார்த்தாலும் பசியும் பட்டினியும் தாண்டவமாடின. நாட்டில் கலகங்கள் மூண்டன. இந்தச் சூழ்நிலையில் 1920-ல் “பாசிஸ்ட்” கட்சியை முசோலினி தொடங்கினார். 1921-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் முசோலினி கட்சி ஆட்சியைப் பிடிக்கமுடியா விட்டாலும் 30 இடங்களைக் கைப்பற்றியது. முசோலினி பெரும் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சித்தலைவரான முசோலினி, பாராளுமன்றத்தில் நிகழ்த்திய வீராவேசச் சொற்பொழிவுகள், ஆளும் கட்சியினருக்கு அச்சமூட்டின.

பாராளுமன்றத்தை அமைதியாக நடத்த விடாமல் கலாட்டா செய்து கொண்டிருந்தார் முசோலினி. அதுமட்டுமல்ல, ஊர் ஊராகச் சென்று பொதுக் கூட்டங்கள் நடத்தி, உணர்ச்சி ததும்பப்பேசி, ஆளும் கட்சிக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டார். ரவுடிகள் சாம்ராஜ்யம் மக்கள் தன் பேச்சில் மயங்கிக்கிடக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட முசோலினி, ஒவ்வொரு ஊரிலும் அராஜகம் நடத்தி, அரசு அலுவலகங்களைக் கைப்பற்றும்படி தன் கட்சியினருக்குக் கட்டளையிட்டார். அதன்படி அவர் கட்சியினர் ரவுடிகளையும், பொது மக்களையும் அழைத்துக்கொண்டு, பயங்கர ஆயுதங்களால் அரசு அலுவலகங்களைத் தாக்கினார்கள். ஊழியர்களை விரட்டி அடித்துவிட்டு, அலுவலகங்களையும், கஜானாக்களையும் கைப்பற்றிக்கொண்டார்கள்.

1922 அக்டோபரில், முசோலினியின் “கருஞ்சட்டைப்படை” இத்தாலியின் தலைநகரைப் பிடிக்கத் திரண்டு சென்றது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், அமைச்சரவையை ராஜினாமா செய்யுமாறு மன்னர் கட்டளையிட்டார். மந்திரிசபை பதவி விலகியதும், ஆட்சிப்பொறுப்பை முசோலினியிடம் ஒப்படைத்தார். அடக்கு முறை ஆட்சிக்கு வந்த முசோலினி, “இத்தாலியின் முன்னேற்றத்திற்காக, நான் பல தீவிர நடவடிக்கைகளை எடுக்கப் போகிறேன். இதை எதிர்ப்பவர்களை அடியோடு அழித்துவிடுவேன்” என்று அறிவித்தார்.

எதிர்க்கட்சிகளைத் தடை செய்தார். பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கினார். தன்னை எதிர்த்தவர்களை நாடு கடத்தினார். அது மட்டுமல்ல. தன் எதிரிகளைச் “சிரச்சேதம்” செய்யும்படி (தலைகளைத் துண்டிக்கும்படி) உத்தரவிட்டார். மூன்றே ஆண்டுகளில் இவ்வாறு சிரச்சேதம் செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் மேல்! இவ்வளவு கொடுமைகள் செய்த முசோலினி, மக்களைக் கவரப் பல திட்டங்களைக் கொண்டு வந்தார்.

விவசாயிகளுக்கு இயந்திரக்கலப்பைகள் வழங்கினார். அதனால் உணவு உற்பத்தி பெருகியது. வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வரிகள் குறைக்கப்பட்டன. மருத்துவ வசதிகள் பெருகின. இதனால், முசோலினியை மக்கள் ஆதரித்தனர். நிலைமை தனக்குச் சாதகமாக இருந்ததால், பொதுத் தேர்தலை நடத்தினார்முசோலினி. அதில் அவர் கட்சி மகத்தான வெற்றி பெற்றது. அதன்பின் பாராளுமன்றத்தின் அதிகாரங்களையும் தானே எடுத்துக்கொண்டார்.

1922-ம் ஆண்டு முதல் இத்தாலியின் மாபெரும் சர்வாதிகாரியாக முசோலினி விளங்கினார். 1933-ல் ஜெர்மனியில் ஆட்சியைக் கைப்பற்றிய ஹிட்லர் முசோலினியின் நண்பரானார். 1934-ல் வெனீஸ் நகருக்குச் சென்று, முசோலினியைச் சந்தித்துப் பேசினார் ஹிட்லர். அதைத்தொடர்ந்து, இத்தாலி ராணுவத்தைப் பலப்படுத்தவும், ஆயுதத் தொழிற்சாலைகளை அமைக்கவும் ஹிட்லர் உதவினார். இந்த நிலையில், அரசாங்க விருந்து ஒன்றில் கிளாரா என்ற அழகியை முசோலினி சந்தித்தார். அவள் அழகில் மனதைப் பறிகொடுத்தார். ஏற்கனவே திருமணம் ஆன முசோலினி, கிளாராவை எப்படியும் அடைந்தே தீருவது என்று தீர்மானித்தார். கிளாரா, விமானப்படை அதிகாரி ஒருவரை மணந்து விவாகரத்து பெற்றவள்.

இரண்டாண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்தாள். தனது வசீகரப் பேச்சால் கிளாராவைக் கவர்ந்த முசோலினி, அவளைத் தன் ஆசை நாயகியாக்கிக் கொண்டார். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரும், முசோலினியும் ஓரணியில் நின்று நேச நாடுகளை எதிர்த்தனர். முதலில் இவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. மக்கள் புகழ்ந்தனர். பிறகு போரின் போக்கு மாறியது. மக்களின் வெறுப்புக்கு உள்ளாயினர். போர் முனையில் இத்தாலி ராணுவம் தோல்வியை சந்தித்ததால்முசோலினியை 1943 ஜுலை 9-ந்தேதி “பாசிஸ்ட்” கட்சி மேலிடம் டிஸ்மிஸ் செய்தது. அவரையும், அவர் குடும்பத்தினரையும், ஆதரவாளர்களையும் கைது செய்து, வீட்டுக் காவலில் சிறை வைத்தது.

முதல் உலகப்போர் உலகை மிரட்டிய ஹிட்லர் வெற்றிப்பாதையில் ஹிட்லர்

லண்டன் மீது குண்டு வீச்சு ரஷ்யா நடத்திய வீரப்போர் போரில் அமெரிக்கா..

இந்திய எல்லையில் ஜப்பான்.. ஹிட்லரை கொல்ல முயற்சி முசோலினி டிஸ்மிஸ்

முசோலினியின் கோர முடிவு ஹிட்லரின் காதலி காதலியுடன் தற்கொலை

அணுகுண்டு வீச்சு ஜப்பான் சரணாகதி போருக்குப்பின்…

போர் டைரி-1942 போர் டைரி-1945

முசோலினியின் கோர முடிவு

முசோலினி சிறை வைக்கப்பட்ட சம்பவம் ஹிட்லருக்கு அதிர்ச்சி அளித்தது. தன் ஆத்ம நண்பரை விடுவிக்க முடிவு செய்தார். பகிரங்கமாக படையெடுத்துச் சென்று முசோலினியை விடுவிப்பது முடியாத காரியம் என்பதை போர்க்கலையில் வல்லவரான ஹிட்லர் அறிந்திருந்தார். முசோலினியை மீட்க தனது ரகசியப்படையை அனுப்பினார். ரகசிய படையினர் முசோலினி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து முசோலினியையும் அவர் குடும்பத்தையும் மீட்டனர். வடக்கு இத்தாலியில் முசோலினிக்கு ஓரளவு ஆதரவு இருந்தது.

மனைவியுடனும் காதலி கிளாராவுடனும் அங்கு தப்பிச் சென்றார். அங்கு ஒரு பொம்மை அரசாங்கத்தை அமைத்துக் கொண்டார். இத்தாலியின் உண்மையான அதிபர் நானே என்று பிரகடனம் செய்தார். அப்போது இத்தாலி விடுதலை இயக்கம் என்ற புரட்சிக்கர இயக்கமே தோன்றியது. இத்தாலி முழுவதும் புரட்சிக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். முசோலினியை பிடித்து கொலை செய்வது என்று புரட்சிக்காரர்கள் சபதம் எடுத்துக் கொண்டனர். புரட்சிக்காரர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்நது கொண்ட முசோலினி அண்டை நாடான சுவிட்சர்லாந்திற்கு தப்பி ஓட முடிவு செய்தார்.

2 ரானுவ லாரிகளில் தனது இரண்டு குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். ஆனால் வழியிலே அந்த லாரிகளை புரட்சிக்காரர்கள் மடக்கினார்கள். முசோலினியை கைது செய்தார்கள். இதைக்கண்ட முசோலினியின் காதலி கிளாரா அலறிக் கொண்டு லாரியிலிருந்து குதித்தாள். அவளையும் புரட்சிக்காரர்கள் பிடித்துக் கொண்டனர். முசோலினியின் மனைவி லாரிக்குள் பதுங்கிக் கொண்டதால் அவள் புரட்சிக்காரர்கள் கண்ணில்படவில்லை.

இது நடந்தது 1945 -ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதி. அன்று டோங்கா நகரில் ஒரு அறையில் முசோலினியும், கிளாராவும் அடைத்து வைக்கப்பட்டனர். மறுநாள் அவர்களை புரட்சிக்காரர்கள் ஒரு காரில் அழைத்துச் சென்றனர். மலைப்பகுதியிலிருந்து கார் கீழே இறங்கியதும் முசோலினியையும் காதலி கிளாராவையும் கீழே இறங்கச் சொன்னார்கள்.

கீழே இறங்கியதும் அவர்களை நடுரோட்டில் நிற்க வைத்தார்கள். தங்களை சுடப்போகிறார்கள் என்பதை உணர்நது கொண்ட கிளாரா முசோலினியின் முன்னால் வந்து நின்று முதலில் என்னைச்சுடுங்கள் என்றாள். இயந்திர துப்பாக்கிகளால் புரட்சிக்காரர்கள் சரமாரியாகச் சுட்டார்கள். இருவர் உடல்களும் துளைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தன. முசோலினிக்கு உதவியாக இருந்த வேறு சிலரையும் சுட்டுக் கொன்றார்கள். முசோலினியின் உடலையும், மற்றவர்களின் உடல்களையும் புரட்சிக்காரர்கள் மிலான் நகருக்கு கொண்டு சென்றார்கள். அங்கு விளக்கு கம்பத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டார்கள். அன்று மாலை உடல்கள் இறக்கப்பட்டு அடையாளம் தெரியாத இடத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டன.

முதல் உலகப்போர் உலகை மிரட்டிய ஹிட்லர் வெற்றிப்பாதையில் ஹிட்லர்

லண்டன் மீது குண்டு வீச்சு ரஷ்யா நடத்திய வீரப்போர் போரில் அமெரிக்கா..

இந்திய எல்லையில் ஜப்பான்.. ஹிட்லரை கொல்ல முயற்சி முசோலினி டிஸ்மிஸ்

முசோலினியின் கோர முடிவு ஹிட்லரின் காதலி காதலியுடன் தற்கொலை

அணுகுண்டு வீச்சு ஜப்பான் சரணாகதி போருக்குப்பின்…

போர் டைரி-1942 போர் டைரி-1945

உலகை மிரட்டிய ஹிட்லர்

இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப்போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது. இரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும், அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் வாழ்க்கை, பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது.

ஹிட்லர்

ஜேம்ஸ்பாண்ட் சினிமா படங்களைவிட விறு விறுப்பானது. வட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்ற ஊரில் 1889-ம் ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி பிறந்தவர் ஹிட்லர். (நேருவை விட 7 மாதம் மூத்தவர்) இவருடைய தந்தையின் பெயர் அலாய்ஸ் ஷிக்கிள் கிரப்பர் ஹிட்லர். இவர் சுங்க இலாகா அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மூன்று மனைவிகள். மூன்றாவது மனைவியான கிளாராவின் நான்காவது மகன் ஹிட்லர். பிறந்தது முதலே ஹிட்லர் நோஞ்சானாக இருந்தார். அடிக்கடி காய்ச்சல் வரும். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பிறகுதான் உடம்பு தேறியது.

தந்தை சுங்க அதிகாரியாகப் பணியாற்றியதால், அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். அதனால், ஹிட்லருக்கு அம்மாவிடம் செல்லம் அதிகம். தாய் மீது மிகுந்த பக்தியும், பாசமும் கொண்டவர் ஹிட்லர். பள்ளியில் படிக்கும்போது, ஹிட்லர்தான் வகுப்பில் முதல் மாணவர். பிறகு அவருக்குப் படிப்பில் ஆர்வம் குறைந்தது. படம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. விரைவிலேயே அழகாக படங்கள் வரையும் ஆற்றல் பெற்றார். மாணவப் பருவத்திலேயே நிறைய நாவல்கள் படித்தார். போர்கள் பற்றிய கதைகள் என்றால் நாட்டம் அதிகம்.

1903-ம் ஆண்டு, ஹிட்லரின் தந்தை இறந்து போனார். தந்தையின் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த ஹிட்லர், நாளுக்கு நாள் முரடனாக மாறினார். மாணவர்களுடன் சண்டை போடுவதுடன், ஆசிரியர்களுடனும் மோதுவார். தனது 17-வது வயதில், பள்ளி இறுதித் தேர்வில் தேறினார். ஹிட்லர் அதற்காகக் கொடுத்த சான்றிதழை வாங்கிக்கொண்டு வருகிற வழியில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தினார். சர்டிபிகேட்டைக் கிழித்தெறிந்தார்.

இதை அறிந்த ஆசிரியர், அவரைக்கூப்பிட்டுக் கண்டித்தார். “இனி என் வாழ்நாளில் சிகரெட்டையும், மதுவையும் தொடமாட்டேன்” என்று சபதம் செய்தார், ஹிட்லர். அதன்படி, கடைசி மூச்சு உள்ளவரை சிகரெட்டையும், மதுவையும் அவர் தொடவில்லை. 1907-ல் ஒரு ஓவியப் பள்ளியில் சேர முயன்றார். இடம் கிடைக்கவில்லை. அந்த ஆண்டின் இறுதியில் ஹிட்லரின் தாயார் இறந்து போனார்.

ஹிட்லரின் தாயார் கிளாரா குழந்தை பருவத்தில் ஹிட்லர்

அதன்பின் ஓவிய அட்டைகள் தயாரித்து, பிழைப்பு நடத்தினார் ஹிட்லர். இரவில் கூட மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் ஓவியங்கள் வரைவார். சில மாடல் அழகிகளை வைத்து ஹிட்லர் வரைந்த படங்கள், நல்ல விலைக்குப் போயின. அதனால் சொந்தமாக ஒரு ஓவியக்கூடம் அமைத்தார். இந்தச் சமயத்தில், சிந்தியா என்ற பெண்ணை ஹிட்லர் காதலித்தார். காதல் தோல்வி அடையவே, ராணுவத்தில் சேர்ந்தார்.

1914-ல் தொடங்கி, 1918 வரை நடந்த முதல் உலகப் போரின் போது ஜெர்மனி ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1918-ல் போரில் ஜெர்மனி தோற்றது. இந்த தோல்விக்கு ஜனநாயகவாதிகளும், யூதர்களும்தான் காரணம் என்று ஹிட்லர் நினைத்தார்.

“உலகில் ஜெர்மானியரே உயர்ந்த இனத்தினர். உலகம் முழுவதையும் ஜெர்மனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்” என்று விரும்பினார். ஹிட்லர் பேச்சு வன்மை மிக்கவர். தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் ஒரு உறுப்பினராகச் சேர்ந்து, தனது பேச்சு வன்மையால் விரைவிலேயே கட்சித் தலைவரானார்.

அரசாங்கத்தின் நிர்வாகத்திறமை இன்மையால்தான் நாட்டில் வறுமையும், வேலை இல்லாத்திண்டாட்டமும் பெருகிவிட்டதாகப் பிரசாரம் செய்தார். அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டு, ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார். ஆனால், அந்த முயற்சியில் தோல்வி அடைந்தார். அரசாங்கம் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஹிட்லருக்கு முதலில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

பிறகு அது ஓராண்டு தண்டனையாகக் குறைக்கப்பட்டது. சிறையில் இருந்தபோது, “எனது போராட்டம்” என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார்ஹிட்லர். இது உலகப் புகழ் பெற்ற நூல். 1928-ல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வி அடைந்தது. ஆனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை.

தன்னுடைய கட்சியின் பெயரை “நாஜி கட்சி” என்று மாற்றி நாடு முழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார். அவருடைய இடைவிடாத உழைப்பும், பேச்சுவன்மையும், ராஜதந்திரமும் வெற்றி பெற்றன. ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து, பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமன்றக் கட்டிடம் கொளுத்தப்பட்டது. ஜனாதிபதியாக இருந்த ஹிண்டன்பர்க், மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்தார். 1933-ஜனவரி 30-ந்தேதி ஹிட்லரை அழைத்துப் பிரதமராக நியமித்தார். அன்று முதல் ஹிட்லருக்கு ஏறுமுகம்தான். பிரதமராக இவர் பதவி ஏற்ற 1 வருடத்தில் ஜனாதிபதி ஹிண்டன்பர்க் மரணம் அடைந்தார். அவ்வளவுதான். ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக் கொண்டு, எதிர்ப்பாளர்களை எல்லாம் ஒழித்துவிட்டு, ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆனார்ஹிட்லர். பாராளுமன்றத்தைக் கலைத்தார்.

ராணுவ இலாகாவையும், ராணுவ தளபதி பதவியையும் தானே எடுத்துக்கொண்டார். அரசியல் கட்சிகளை எல்லாம் தடை செய்தார். எதிரிகளைச் சிறையில் தள்ளினார். “இனி ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்று அறிவித்தார். யூதர்களை அடியோடு அழிக்கவேண்டும் என்று முடிவு செய்து, ஒரு பாவமும் அறியாத யூதர்களைக் கைது செய்து, சிறையில் பட்டினி போட்டுச் சித்திரவதை செய்து கொன்றார். பலர் இருட்டறைகளில் அடைக்கப்பட்டு, விஷப் புகையால் கொல்லப்பட்டனர். தினமும் சராசரியாக 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் விஷப்புகையிட்டுச் சாகடிக்கப்பட்டனர்.

ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம். முதல் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்குக் காரணமான பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளைப் பழிவாங்க வேண்டுமென்று திட்டமிட்டார். ராணுவத்தைப் பலப்படுத்தினார். ஜெர்மனியின் தரைப்படை, கப்பல் படை, விமானப் படை மூன்றும் உலகின் சிறந்த படைகளாக உருவெடுத்தன. உலகத்தையே தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர நேரம் நெருங்கிவிட்டதாக நினைத்தார்ஹிட்லர். 1939-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி, எந்தவிதப் போர்ப் பிரகடனமும் வெளியிடாமல் போலந்து நாட்டின் மீது படையெடுத்தார் ஹிட்லர்.

பிரிட்டனும், பிரான்சும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்ப் பிரகடனம் வெளியிட்ட போதிலும், போரில் நேரடியாக குதிக்கவில்லை. இதனால், இரண்டே வாரங்களில் போலந்தைக் கைப்பற்றிக் கொண்டது ஜெர்மன் ராணுவம். இந்தச் சமயத்தில் ஹிட்லருடன் நட்புக் கொண்டார் இத்தாலி சர்வாதிகாரி முசோலினி.

ஜப்பான் உள்பட வேறு சில நாடுகளும் ஜெர்மனியுடன் கைகோர்த்துக் கொண்டன. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ஒரு ரகசிய ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. ஆசியப் பகுதிகளை ஜப்பானும், ஆப்பிரிக்காவை இத்தாலியும், ஐரோப்பிய பகுதிகளை ஜெர்மனியும் தாக்கிக் கைப்பற்றவேண்டும் என்பதே அந்த ரகசிய ஒப்பந்தம்.

முதல் உலகப்போர் உலகை மிரட்டிய ஹிட்லர் வெற்றிப்பாதையில் ஹிட்லர்

லண்டன் மீது குண்டு வீச்சு ரஷ்யா நடத்திய வீரப்போர் போரில் அமெரிக்கா..

இந்திய எல்லையில் ஜப்பான்.. ஹிட்லரை கொல்ல முயற்சி முசோலினி டிஸ்மிஸ்

முசோலினியின் கோர முடிவு ஹிட்லரின் காதலி காதலியுடன் தற்கொலை

அணுகுண்டு வீச்சு ஜப்பான் சரணாகதி போருக்குப்பின்…

போர் டைரி-1942 போர் டைரி-1945

ஜப்பான் சரணாகதி

போரின்போது ஜப்பானிய மன்னராக இருந்தவர் ஹிரோ ஹிட்டோ. அவர் போரை விரும்பவில்லை. என்றாலும், அவரைக் கேட்காமல் அமெரிக்காவின் பெர்ல் துறைமுகத்தைத் தாக்கி, அமெரிக்காவை வலுச்சண்டைக்கு இழுத்தவர் பிரதமர் டோஜோ. போரில் ஜப்பான் ஈடுபட அவரே காரணம். போரில் ஜப்பானுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தபோது, அவரை ஜப்பான் மக்கள் புகழ்ந்தனர். ஆனால் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தபோது, மக்களின் வெறுப்புக்கு உள்ளானார். ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டதைத் தொடர்ந்து, மன்னர் ஹிரோஹிட்டோ மனம் கலங்கினார். 1945 ஆகஸ்டு 9-ந்தேதி ஜப்பான் வானொலி மூலம், தனது சரணாகதியை அறிவித்தார். ஜப்பான் மன்னர் ரேடியோவில் பேசியது வாழ்நாளில் இதுவே முதல் தடவை. அதுமட்டுமல்ல நேச நாடுகளின் சேனாதிபதியாக இருந்து போரை நடத்திய அமெரிக்க தளபதி மக்ஆர்தரைச் சந்தித்து “போருக்கு முழுப்பொறுப்பையும் ஏற்கிறேன்” என்றார்.

ஜப்பானிய தளபதிகள், அமெரிக்காவின் “மிசவுரி” என்ற போர்க்கப்பலுக்குச் சென்றார்கள். அங்கு அமெரிக்காவின் பிரதம தளபதி மக்ஆர்தர் இருந்தார். அவரிடம், சரணாகதி பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்தனர். ஏற்கனவே ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதால், ஐரோப்பாவில் போர் முடிந்துவிட்டது. இப்போது ஜப்பான் சரண் அடைந்ததைத் தொடர்ந்து உலகப்போர் முடிந்தது.

போருக்கு ஜப்பான் பிரதமர் டோஜாதான் காரணம் என்பது நேச நாடுகளுக்குத் தெரியும். அவரைக் கைது செய்யத் தளபதிகள் சென்றபோது, அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு, தற்கொலை செய்து கொள்ள முயன்றார். என்றாலும் அவர் முயற்சி தோல்வி அடைந்தது. நேசப் படைகளால் கைது செய்யப்பட்டார். அணுகுண்டு வீசப்பட்டதும், ஜப்பான் மன்னர் ஹிரோஹிட்டோ, அமெரிக்க தளபதி மக்ஆர்தரை சந்தித்து, ஜப்பான் சரண் அடைவதாக தெரிவித்தார். விசாரணையின்போது, டோஜோ “போருக்கு நான்தான் காரணம்; மன்னர் நிரபராதி” என்று கூறினார்.

டோஜோ குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1948 டிசம்பர் 23-ந்தேதி டோஜோவும், மற்றும் சில ஜப்பான் ராணுவ அதிகாரிகளும் தூக்கிலிடப்பட்டனர். இரண்டாவது உலகப் போரில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு என்று யாராலும் சரியாகக் கணக்கிட இயலவில்லை. போர் வீரர்களும், பொதுமக்களும் மொத்தம் 5 கோடிப்பேருக்கு மேல் பலியானதாக மதிப்பிடப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் அழிந்தன. நாசமான நகரங்களுக்கு கணக்கே இல்லை. அணுகுண்டு வீச்சினால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைவிட மிக அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் படுகாயம் அடைந்த பலர், சில நாட்களில் மரணம் அடைந்தனர். ஹிரோஷிமா நகரில் உள்ள கல்லறைகளில், இறந்தவர்களின் 1,38,890 பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அணுகுண்டுகள் வெடித்த போது ஏற்பட்ட கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தவர்கள், உடல் வெந்து கருகிப் போனவர்கள் பல லட்சம் பேர்.

போர் டைரி 1944:

ஜன. 2: நிïகினியாவை அமெரிக்கா கைப்பற்றியது.

ஜன. 27: ஜெர்மனி ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட லெனின் கிராட் மீட்கப்பட்டது.

பிப். 16: சில இடங்களில் ஜப்பானிய ராணுவத்தை அமெரிக்க ராணுவம் தோற்கடித்தது.



பிப். 17: கானேவ் என்ற இடத்தில், ஜெர்மன் ராணுவத்தின் 10 டிவிஷன்களைச் சேர்ந்தவர்களை ரஷிய ராணுவம் சிறை பிடித்தது.

பிப். 20: ஜெர்மனி மீது பெரும் தாக்குதலை நேசப்படைகள் தொடங்கின.

பிப். 26: இந்த பெரும் தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்க விமானப்படை வீரர்கள் 2,600 பேர் கொல்லப்பட்டனர்.

மார்ச். 18: ஹங்கேரி நாட்டை ஜெர்மனி கைப்பற்றியது.

மார்ச். 24: பெர்லின் மீது விமானத் தாக்குதல் நடத்திய நேச நாடுகளின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதால் 392 விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

மார்ச். 28: ஜெர்மன் சிறையிலிருந்து தப்ப முயற்சித்த நேசப்படை வீரர்கள் 47 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஏப். 4: இந்தியாவில் உள்ள கோஹிமாவை ஜப்பானிய ராணுவம் தாக்கியது.

ஏப். 9: ஜப்பான் கைப்பற்றியிருந்த பர்மாவுக்குள், நேசப்படை வீரர்கள் ‘பாரசூட்’ மூலம் குதித்தனர்.

ஜுன் 4: ரோம் நகருக்குள் நேசப்படைகள் நுழைந்தன.

ஜுன் 5: இத்தாலி மன்னர் விக்டர் இம்மானுவேல் முடிதுறந்தார்.

ஜுன் 7: பெல்ஜியம் மன்னர் லியோ போல்டு கைது செய்யப்பட்டார்.

ஜுன் 13: இங்கிலாந்து நாட்டை தாக்க வந்த ஜெர்மனி விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

ஜுன் 28: போப்ரூயிஸ்க் என்ற இடத்தில் நடந்த போரில் 34,000 ஜெர்மனி வீரர்கள் உயிர் இழந்தனர்.

ஜுலை 3: மின்ஸ்க் என்ற இடத்தில் நடந்த போரில் ஜெர்மனியை ரஷியா தோற்கடித்தது. அங்கு 1 லட்சம் ஜெர்மனி ராணுவத்தினர், ரஷியாவிடம் யுத்தக் கைதிகளாகப் பிடிபட்டனர்.

ஜுலை 18: ஜப்பான் பிரதமர் டோஜோ ராஜினாமா செய்தார்.

ஜுலை 30: பர்மாவில் ‘மியிட்கினா’ என்ற இடத்திலிருந்து ஜப்பான் படைகள் வெளியேறின.

ஆக. 2: இங்கிலாந்து நாட்டில், ஜெர்மனி விமானத் தாக்குதலால்

ஜுன் 13 முதல் இதுவரை 5,000 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.

ஆக. 8: போலந்து நாட்டில் வார்சாவில் நடந்த போரில் போலந்தை சேர்ந்த 50 ஆயிரம் பேர் மாண்டனர்.

ஆக. 15: பிரான்ஸ் தென்பகுதியில் நேசப் படைகளின் விமானப் படையினர் ஆயிரக்கணக்கில் இறங்கினர். பாரீஸ் மீட்பு ஆக. 25: ஜெர்மனி பிடியில் இருந்து, பாரீஸ் விடுவிக்கப்பட்டது.

செப். 2: பெல்ஜியத்துக்குள் பிரிட்டிஷ் படை நுழைந்தது.

செப். 6: žகோஸ்லேவியா நாட்டுக்குள் ரஷியப்படை நுழைந்தது.

செப். 21: பிலிப்பைன்ஸ் நாட்டின் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு வீசின.

அக். 7: ஹிட்லருக்கு எதிராக žதர்கள் பெரும் கிளர்ச்சி செய்தனர். ïதர்களை விஷ வாயு மூலம் படுகொலை செய்யும் இடங்கள் அழிக்கப்பட்டன.

அக். 18: செக் நாட்டுக்குள் ரஷியாவின் செம்படைகள் புகுந்தன.

அக். 19: ïகோ தலைநகர் பெல்கிரேடை ரஷியப்படைகள் கைப்பற்றின.

அக். 20: ஒரு லட்சம் ராணுவத்தினருடன் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குள் நேசப்படைகளின் தளபதி மக் ஆர்தர் புகுந்தார். நவ. 4: அமெரிக்க ஜனாதிபதியாக நான்காவது முறையாக ரூஸ் வெல்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நவ. 19: பர்மாவை ஜப்பானிடம் இருந்து மீட்க இங்கிலாந்து படைகள் பெருந்தாக்குதல் நடத்தின.

நவ. 20: யுத்தம் காரணமாக லண்டனில் இருந்த “இருட்டடிப்பு” முறை (இரவில் விளக்குகளை அணைத்து விடுவது) நீக்கப்பட்டது.

நவ. 25: ஜப்பானின் சரக்கு கப்பலை பிரிட்டனின் நீர்மூழ்கி கப்பல் தகர்த்தது.

டிச. 1: அமெரிக்காவின் முதலாவது “ஐந்து நட்சத்திர” அந்தஸ்து தள பதியாக ஐசனோவர் பொறுப்பு ஏற்றார்.

டிச. 4: ஜெர்மனி நகரங்கள் மீது பிரிட் டிஷ் விமானங்கள் குண்டு வீசின.

முதல் உலகப்போர் உலகை மிரட்டிய ஹிட்லர் வெற்றிப்பாதையில் ஹிட்லர்

லண்டன் மீது குண்டு வீச்சு ரஷ்யா நடத்திய வீரப்போர் போரில் அமெரிக்கா..

இந்திய எல்லையில் ஜப்பான்.. ஹிட்லரை கொல்ல முயற்சி முசோலினி டிஸ்மிஸ்

முசோலினியின் கோர முடிவு ஹிட்லரின் காதலி காதலியுடன் தற்கொலை

அணுகுண்டு வீச்சு ஜப்பான் சரணாகதி போருக்குப்பின்…

போர் டைரி-1942 போர் டைரி-1945

காதலியுடன் தற்கொலை

1945 ஏப்ரல் 30-ந்தேதி இரவு 9 மணி. “இன்று மாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியும், அவர் மனைவியும் எதிர்ப்பாளர் களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்” என்று சுவீடன் நாட்டு ரேடியோ அறிவித்தது. ரேடியோச் செய்தியை ஹிட்லர் நேரடியாகக் கேட்டார். காதலியுடன் ஹிட்லர் முசோலினியின் முடிவு, ஹிட்லருக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது. அன்றிரவு 12 மணி, பெர்லின் நகரம் முற்றிலுமாக ரஷியப் படைகள் வசமாகிவிட்டது என்றும், எந்த நேரத்திலும், சுரங்க மாளிகை தகர்க்கப்படலாம் என்றும், ஹிட்லருக்குத் தகவல் கிடைத்தது. ஹிட்லரின் முகம் இருண்டது. மவுனமாக எழுந்து, தன் தோழர்களுடன் கை குலுக்கினார்.

1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர். எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம் தெரிவித்தார். ஹிட்லரின் முடிவைக் கேட்டு, ஈவாபிரவுன் திடுக்கிடவில்லை. “வாழ்விலும் உங்களுடன் இருந்தேன். பூப்பறிக்கும் ஈவாபிரவுன். சாவிலும் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுடன் நானும் தற்கொலை செய்து கொள்வேன்” என்றாள்.

பிறகு தன் அந்தரங்க உதவியாளரை அழைத்து, “நானும் ஈவாவும் ஒன்றாக இறந்துவிடப்போகிறோம். நாங்கள் இறந்தபின், எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துச் சாம்பலாக்கி விடுங்கள். எங்கள் அறையில் உள்ள கடிதங்கள், டைரிகள், என் உடைகள், என் பேனா, கண்ணாடி முதலிய பொருள்களை சேகரித்து, ஒன்று விடாமல் எரித்துவிடுங்கள்” என்று கூறிவிட்டு, மனைவியையும் அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றார். அறைக்கதவு சாத்தப்பட்டது. வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. ஹிட்லரும் ஈவாவும் என்ன ஆனார்கள் என்று வெளியே இருந்தவர்களுக்குத் தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மந்திரிகளும், தளபதிகளும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர். அங்கே அவர்கள் கண்ட காட்சி: ஒரு சோபாவில், உட்கார்ந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல். அவர் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது. அதன் நுனியிலிருந்து புகை வந்து கொண்டிருந்ததால், அவர் சற்று நேரத்துக்கு முன்தான் தன்னைச் சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்தது. அவருடைய வலது காதுக்கு கீழ் அரை அங்குல அளவுக்கு துவாரம் விழுந்து, அதிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.

ஹிட்லர், துப்பாக்கி முனையை வாய்க்குள் வைத்து சுட்டதால்தான், குண்டு காதுக்கு அருகே துளைத்துக் கொண்டு சென்றிருக்கவேண்டும் என்று தளபதிகள் கருதினார்கள். ஹிட்லரின் வலது கரம் ஒரு புகைப்படத்தை மார்போடு அணைத்தபடி இருந்தது. அந்தப்படம், ஹிட்லரின் தாயாரின் புகைப்படம். தாயின் மீது ஹிட்லர் கொண்டிருந்த பாசத்தை எண்ணி அவர் நண்பர்கள் கண்ணீர் சிந்தினர். ஹிட்லர் உடல் இருந்த சோபாவில் சாய்ந்தபடி பிணமாகியிருந்தாள் அவருடைய மனைவி ஈவா. வெள்ளைப் புள்ளிகளோடு கூடிய கருநீல “மாக்சி” உடை அணிந்திருந்தாள். அவள் உடல் நீலம் பாய்ந்திருந்தது. எனவே அவள் சயனைடு விஷம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது.

ரஷ்யாவின் பீரங்கி தாக்குதலால் பொடிபொடியான ஹிட்லரின் பாதாள மாளிகை ஹிட்லர் உடலையும், ஈவா உடலையும் உதவியாளர்கள் ஒரு கம்பளிப்போர்வையில் சுற்றினார்கள். பிறகு அந்த உடல்களை அந்த அறையிலிருந்து தலைமைச் செயலகத் தோட்டத்திற்கு தூக்கிக் கொண்டு போனார்கள். அங்கே, பெட்ரோலையும், எரிவாயுவையும் கொண்டு இரு உடல்களையும் எரித்துச் சாம்பலாக்கினார்கள். சில மணி நேரம் கழித்து அங்கு வந்த ரஷியப்படையினர் ஹிட்லரைக் காணாமல் திகைத்துப் போனார்கள். அவர் தற்கொலை செய்து கொண்டதும், பிணம் எரிக்கப்பட்டதும் பிறகுதான் தெரிந்தது. எனினும் ஹிட்லர் சாகவில்லை, தலைமறைவாக இருக்கிறார் என்று நீண்ட காலம் நம்பியவர்கள் ஏராளம்!

ஹிட்லர் ஈவு இரக்கமற்ற கொடியவராக இருந்தாலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் சில நல்ல குணங்களும் இருந்தன. ஹிட்லர், குழந்தைகளிடமும், பிராணிகளிடமும் அன்பு கொண்டவர். மது அருந்த மாட்டார். புகை பிடிக்க மாட்டார். சைவ உணவே சாப்பிடுவார்.

உலகப் போரின்போது, ஹிட்லரின் பிரசார பீரங்கியாகச் செயல்பட்டவர், கோயபல்ஸ். 1897-ல் பிறந்த கோயபல்ஸ், 8 பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயின்றவர். தத்துவத்தில் “டாக்டர்” பட்டம் பெற்றவர். சிறந்த பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்கவர். 1929-ல் இவர் ஹிட்லர் மந்திரி சபையில் பிரசார மந்திரியானார். உலகப்போரின்போது, புதுப்புது உத்திகளைக் கையாண்டு, ஹிட்லரின் பெயர் உலகம் முழுவதும் பரவச் செய்தார். (போரில் ஹிட்லர் தோல்வியைச் சந்தித்தபோதும், அவர் வெற்றி பெற்று வருவதாக பிரசாரம் செய்தார். இதன் காரணமாக பொய் பேசுபவர்களை “கோயபல்ஸ்” என்று வர்ணிக்கும் வழக்கம் வந்தது.) ஹிட்லர் மீது இவர் கொண்டிருந்த பக்திக்கு அளவே இல்லை. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதற்கு மறுநாள், கோயபல்ஸ் தன் மனைவியுடனும், 6 குழந்தைகளுடனும் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகள் 2 முதல் 12 வயது வரை உள்ளவர்கள்.

முதல் உலகப்போர் உலகை மிரட்டிய ஹிட்லர் வெற்றிப்பாதையில் ஹிட்லர்

லண்டன் மீது குண்டு வீச்சு ரஷ்யா நடத்திய வீரப்போர் போரில் அமெரிக்கா..

இந்திய எல்லையில் ஜப்பான்.. ஹிட்லரை கொல்ல முயற்சி முசோலினி டிஸ்மிஸ்

முசோலினியின் கோர முடிவு ஹிட்லரின் காதலி காதலியுடன் தற்கொலை

அணுகுண்டு வீச்சு ஜப்பான் சரணாகதி போருக்குப்பின்…

போர் டைரி-1942 போர் டைரி-1945

போருக்குப்பின்

ஹிட்லர் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொண்டதும், ஜெர்மனியை நேசநாடுகள் பங்கு போட்டுக் கொண்டன. மேற்கு ஜெர்மனி என்றும், கிழக்கு ஜெர்மனி என்றும் இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டன. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் சார்புடைய அராசாங்கம் மேற்கு ஜெர்மனியிலும், ரஷிய சார்புடைய அரசாங்கம் கிழக்கு ஜெர்மனியிலும் அமைக்கப்பட்டன. ஜெர்மனி தலைநகரமான பெர்லின், குண்டு வீச்சின் காரணமாகப் பாழடைந்துபோய் விட்டது.

அந்த நகரமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு மேற்கு பெர்லின் மேற்கு ஜெர்மனியிலும், கிழக்கு பெர்லின் கிழக்கு ஜெர்மனியிலும் சேர்க்கப்பட்டன. 1950-ல் கிழக்கு ஜெர்மனியில் இருந்து ஏராளமான பேர் மேற்கு ஜெர்மனிக்கு அகதிகளாக குடியேறினார்கள். அகதிகள் போவதற்கு பெர்லின் நகரம்தான் வழியாகப் பயன்பட்டது. எனவே, அகதிகள் போவதை தடுக்க கிழக்கு பெர்லினையும், மேற்கு பெர்லினையும் பிரிக்கும் வகையில் பெரிய சுவர் ஒன்றை கிழக்கு ஜெர்மனி அரசாங்கம் அமைத்தது.

பெர்லின் சுவர் என்று இது அழைக்கப்பட்டது. அமெரிக்காவின் உதவியுடன் மேற்கு பெர்லின் நகரம் புதுப்பிக்கப்பட்டது. உலகின் அழகிய நரங்களில் ஒன்றாக அந்த நகரம் கம்பீரமாக எழுந்தது. ஆனால் கிழக்கு பெர்லின் நகரம் மிக மிக மெதுவாகவே வளர்ச்சி அடைந்தது. இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் ஜெர்மனி மக்கள் உணர்ச்சியால் ஒன்றுபட்டவர்கள்தானே. இரண்டு நாடுகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்பினார்கள். இரண்டு ஜெர்மனிகளையும் ஒன்றாக இணைப்பது என்று இரு நாடுகள் இடையேயும் 1990-ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி 1990 அக்டோபர் 3-ந் தேதி இரு ஜெர்மனிகளும் ஒரே நாடாக இணைந்தன.

பெர்லின் சுவர் இடித்துத் தள்ளப்பட்டது. அணுகுண்டு வீச்சினால் பேரழிவுக்கு உள்ளான ஜப்பான் அந்த சோதனைகளை எல்லாம் எதிர்கொண்டு பொருளாதார துறையில் படிப்படியாக முன்னேறியது. ஜப்பானிய மக்களின் அயராத உழைப்பினால், இன்று உலகிலேயே எலக்ட்ரானிக் துறையில் தலை சிறந்து விளங்குகிறது. உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. போரின் போது அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் தோளோடு தோன் நின்று ஹிட்லரை எதிர்த்துப் போர் புரிந்த ஸ்டாலின், பின்னர் ரஷியாவில் தன் எதிரிகளை ஒழித்துக்கட்டிவிட்டு சர்வாதிகாரியானார். ரஷியாவில் நடப்பது வெளி உலகுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டன. ரஷியாவில் இரும்புத்திரை போடப்பட்டு விட்டதாக சர்ச்சில் வர்ணித்தார்.

இரண்டாவது உலகப்போரின்போது இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. போர் முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை இங்கிலாந்து கோரியது. போர் முயற்சிகளில் பிரிட்டனுக்கு இந்தியா ஆதரவாக இருந்தால் இந்தியாவுக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் டொமினியன் அந்தஸ்து கொடுக்கப்படும் என்று அறிவித்தது. இது சம்பந்தமாக 1942 மார்ச் மாதத்தில் இங்கிலாந்து மந்திரி கிரிப்ஸ் இந்தியாவுக்கு வந்து காந்தியையும், மற்ற தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். ஆனால் பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. உலகப்போரில் ஹிட்லருடன் சேர்ந்திருந்த ஜப்பான், தொடக்கத்தில் பல வெற்றிகளைப் பெற்றது. பிரிட்டன் வசம் இருந்த மலாயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை கைப்பற்றியது. இந்தியா மீதும் ஜப்பான் படையெடுக்கலாம் என்றும் கருதப்பட்டது.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி இருந்து வருவதால்தான் ஜப்பானியர் இந்த நாட்டின் மீது படையெடுக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்தியாவில் இருந்து பிரிட்டிஷார் உடனே வெளியேற வேண்டும் என்று காந்தி அறிக்கை வெளியிட்டார். வெள்ளையனே வெளியேறு என்று புகழ் பெற்ற தீர்மானத்தை 1942 ஆகஸ்டு மாதத்தில் காங்கிரஸ் நிறைவேற்றியது. எனினும் இந்திய இளைஞர்கள் பெருமளவில் ராணுவத்தில் சேர்ந்து போர் முனைக்கு சென்றார்கள். குறிப்பாக ஜப்பானை எதிர்த்துப் போர் புரிய சிங்கப்பூர், மலாயா, பர்மா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட படைகளில் இந்திய இளைஞர்கள் அதிக அளவில் இருந்தனர். யுத்த காலத்தில் இந்தியாவில் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவுக்கு ரேஷன் கொண்டு வரப்பட்டது.

தமிழ்நாட்டில் அரிசிக்கு ரேஷன் அமுலாகியது. வரவர அரிசியின் அளவு குறைக்கப்பட்டு கோதுமை, மக்காச்சோளம் ஆகியவை தரப்பட்டன. கடைகளில் ரொட்டி வாங்க வேண்டும் என்றால் கூட அரிசியைக் குறைத்துக் கொண்டு அதற்கு சமமான கூப்பனை பெற்றுக்கொண்டு அதைக் கொடுத்துத்தான் ரொட்டி வாங்க முடியும், சென்னை, மதுரை, திருச்சி, கோவை முதலிய நரங்களில் பாதுகாப்பு குழிகள் வெட்டப்பட்டன. அடிக்கடி அபாயச் சங்கு ஊதி ஒத்திகை பார்ப்பார்கள். அப்போது ரோட்டில் நடந்து போகிறவர்கள். பதுங்குக் குழிகளில் ஒளிந்து கொள்ள வேண்டும்.

இரவில் விளக்கு வெளிச்சம் எதிரி விமானங்களுக்கு தெரியக் கூடாது என்பதற்காக, தெரு விளக்குகளுக்கு மேல் கறுப்பு மூடிகள் போடப்பட்டன. கச்சா பிலிமுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், சினிமா படங்களை நீளமாகத் தயாரிக்க தடை போடப்பட்டது. 13 ஆயிரம் அடிக்குள் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவு விடப்பட்டது. இந்த உத்தரவு, நல்லதாகவும் அமைந்தது. படங்களில் பாடல்கள் குறைக்கப்பட்டு விறுவிறுப்பு கூடியது. மிகப்பெரிய வெற்றிப் படங்களான ஹரிதாஸ் ஸ்ரீவள்ளி நாம் இருவர் ஆகியவை இந்தக் காலக் கட்டத்தில் குறைந்த நீளத்தில் தயாரிக்கப்பட்டவைதான்.

முதல் உலகப்போர் உலகை மிரட்டிய ஹிட்லர் வெற்றிப்பாதையில் ஹிட்லர்

லண்டன் மீது குண்டு வீச்சு ரஷ்யா நடத்திய வீரப்போர் போரில் அமெரிக்கா..

இந்திய எல்லையில் ஜப்பான்.. ஹிட்லரை கொல்ல முயற்சி முசோலினி டிஸ்மிஸ்

முசோலினியின் கோர முடிவு ஹிட்லரின் காதலி காதலியுடன் தற்கொலை

அணுகுண்டு வீச்சு ஜப்பான் சரணாகதி போருக்குப்பின்…

போர் டைரி-1942 போர் டைரி-1945



நன்றி மாலை மலர்



....

லெமூரியா கண்டம்

லெமூரியா மெய்யா? கற்பனையா?

இரா.கு.பாலசுப்பிரமணியன்

2004 டிச.26. பூகம்பத்தாலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடல் சீற்றத்தாலும், சுனாமி எனப்படும் பேரலைகளால் இந்தியப் பெருங்கடல் பகுதிகளை ஒட்டிய பலநாடுகளின் கடற்கரைப் பிரதேசங்கள் பெரும் அழிவைச் சந்தித்தன. பேரலைகளால் இத்தகு அழிவைச் சந்திப்பது இந்தியா போன்ற நாடுகளுக்குப் புதிது என்றனர் பலர்.

இத்தகைய சீற்றத்தின்போது மாமல்லபுரத்தில் கடல் சற்றே உள்வாங்கி, பிறகு வழக்கமான நிலைக்கு வந்தது. அப்போது கடலிலிருந்து வெளித் தெரிந்த பாறைகளும் கற்களும் கடல் கொண்ட பழம் நாகரிகத்தைப் பறை சாற்றின. அங்கே ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இத்தகைய கடல் சீற்றத்தை நாம் உணரும் போது, பண்டைய லெமூரியாக் கண்டம் பற்றியும், அது எப்படி கடல்கொண்டு அழிந்து போயிருக்கும் என்பது பற்றியும் உணரத் தலைப்பட்டோம். லெமூரியா உண்மையில் இருந்ததா என்பதில் இருவேறு கருத்துகள் உண்டு. புவியில் ஏற்படும் மாற்றங்கள், கண்டங்கள் நகர்வது ஆகியவற்றை மக்கள் தற்போது பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இத்தகைய மனநிலையோடு இந்தக் கட்டுரையைப் படிக்கத் தொடங்குங்கள்…

கி.பி.19 ஆம் நூற்றாண்டின் நடுவில், இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி உறுப்பினர் பி.எல்.ஸ்கிலேட்டர் எனும் உயரியல் அறிஞர், “”கடல் கொண்ட கண்டம் ஒன்று இருந்தது'’ என்று தன் கருத்தைக் கூறும் போது, அதற்கு லெமூரியா என்ற பெயரைச் சூட்டினார்.

அந்தக் காலகட்டத்தில் அறிஞர் பலரின் கவனத்திற்கு உட்பட்டு ஆய்வுக்குரிய பொருளானது லெமூரியா. பரிணாம வளர்ச்சி பற்றி ஆய்ந்த தாமஸ் ஹக்ஸ்லி (1825 & 1895) மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்துமாக்கடலில் பாலூட்டிகள் தோன்றி வளர்ந்த “செனாசாயிக்’ என்ற காலகட்டத்தின் மூன்றாவது யுகமான “மயேசென்’ யுகத்தில் கண்டம் ஒன்று இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டார். இயற்கை ஆராய்ச்சியாளர் ஆல்ஃபிரடு ரசல் வாலஸ் (1823 & 1913) மற்றும் ஏனஸ்ட் ஹென்றிக் ஹெகல் (1834 1919) என்ற ஜெர்மானிய உயிரியல் அறிஞர் ஆகியோர் ஸ்கிலேட்டரின் கருத்தை ஆதரித்தனர்.

“லெமூரியா மனித இனத்தின் தொட்டிலாக இருக்கலாம்; சிம்பன்சி, உராங்குட்டான், கொரில்லா, கப்பன் போன்ற ஆந்திரப்பாய்டு மனிதக் குரங்குகளிலிருந்து மனிதர் முதலில் லெமூரியாவில் உண்டாகி யிருக்கலாம்'’ என்பதை ஹெகல் முதலில் கூறினார். லெமூர் என்ற குரங்கிலிருந்து லெமூரியா என்ற பெயர் சூட்டப்பட்டது. சிறு பாலூட்டியான இதற்கு கண்கள் பெரியதாகவும், மூக்கு கூர்மையாகவும், மேனியில் மென்மையான முடிகள் மூடியதாகவும் இருக்கும் இக்குரங்கினம், அதிகமாக ஆப்பிரிக்காக் கண்டத்தின் தென்கிழக்குக் கரைக்கு அப்பால் இந்து மாக்கடலில் உள்ள மடகாஸ்கர் தீவில் இருக்கிறது. இது இரவில் நடமாடக் கூடிய விலங்கினம். லெமூர் மற்றும் அதை ஒத்த தொடர்புடைய குரங்கும் உலகின் வடகோளம் முழுவதிலும் வாழ்ந்திருக்கக் கூடும். அவை இன்று ஆப்பிரிக்கா, தென்னிந்தியா, மலேயா முதலிய நாடுகளை உறைவிடமாகக் கொண்டுள்ளன. எனவே லெமூரியா என்ற நிலப்பரப்பு ஆசியாவின் தென்கரைக்குக் குறுக்கே மலேயா தீவுக் கூட்டங்களிலிருந்து மடகாஸ்கர் தீவு வரை நீண்டு இருந்திருக்கலாம்.

உலகிலுள்ள பெருங்கடல்களில் ஒன்றான அட்லாண்டிக்கின் ஜிப்ரால்டருக்கு மேற்கே ஒரு பெருந்தீவு (அ) கண்டம் இருந்ததென்று தம் முன்னோர் குறிப்பிட்டிருந்ததைத் தத்துவஞானி பிளாட்டோ (கி.மு.427 & 347) அறிவித்திருந்ததால், அது அறிஞர் பலரின் சிந்தனைக்கு உள்ளாகி, அத்தீவு மெய்யாகவே இருந்ததா? அல்லது, கற்பனையா? என்ற வினாக்களை எழுப்பிப் பல நூல்கள் தோன்றக் காரணமாயிற்று. தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா (தென்துருவக் கண்டம்) முதலியன அடங்கிய மிகப்பெரிய கண்டம் ஒன்று 3000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் தென்பகுதியில் இருந்ததாம். அதனை “கோண்ட்வானா’ என்று அறிஞர்கள் குறித்துள்ளனர். அது 180 ,150 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் உடையத் தொடங்கியதாம்.

இருந்தபோதும் இந்தத் தொல்கண்டம் பற்றிய வரலாற்று விஷயங்கள் இன்னும் தெளிவாகப் புலப்படாமல் இருக்கின்றன. இந்து மாக்கடல் (அ) அதன் சில பகுதிகளாயினும் கோண்ட்வானா நிலப்பரப்பில் அடங்கியிருந்தனவா? அல்லது, அவை இரண்டும் எப்போதும் தனித்தே இருந்தனவா? இவ்வினாக்களுக்கு விடை உறுதியாகத் தெரியவில்லை. கோண்ட்வானா, இந்து மாக்கடல் ஆகியவற்றின் தோற்றம் பற்றி, கண்டங்கள் பிரிந்து மிதந்து செல்கின்றன என்ற யூகத்தின் அடிப்படையிலேயே புவியியல், கடலியல் அறிஞரிடையே அதிகமாக சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

ஜெர்மானிய அறிஞர் ஆல்ஃபிரட் வேஜனர், 1915 இல் கண்டங்கள் பிரிந்து மிதந்து செல்கின்றன. தமது “கண்டங்கள் கடற்படுகைகளின் தோற்றம்’ எனும் நூலில் எடுத்துரைத்தார். உலகம் பூராவும் ஒரு காலத்தில் ஒரே கண்டமாக இருந்தது; பின்பு கோள்களின் ஈர்ப்பு விசைகள், பூமிக்குள் அதிகமான ஆழத்தில் நிகழ்ந்த செயல்கள் முதலியன அவ்வுலகை இருபெரும் கண்டங்களாக பிரித்தன; ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியாவின் பெரும் பகுதி அடங்கியது வடகோளம், கோண்ட்வானா கொண்டது தென்கோளம் என்பது வேஜனரின் கருத்து.

அறிஞர் ஃபிரான்சிஸ் பேக்கன் (1561 - 1626), ஆப்பிரிக்காவின் திருகு வெட்டு வடிவான மேற்குக் கரையையும், தென்அமெரிக்காவின் கிழக்குக் கரையையும் ஒப்பு நோக்கி, அவை ஒன்றோடு ஒன்று பொருந்தியதைச் சொன்னவர். புவியின் உட்கருவைச் சுற்றியுள்ள திரையின் மேலும் கீழும் பக்கவாட்டிலும் அதன் மேல் கண்டங்கள் நகர்கின்றன என்ற வேஜனரின் கருத்தை அறிஞர் பலர் ஏற்றுக் கொண்ட போதிலும், அறிவியலார் அக்கருத்தை ஏற்க மறுக்கின்றனர். வேஜனரின் கொள்கை எளிதில் ஏற்புடையதாக இருந்த போதிலும், திண்மையான கண்டங்கள் கடலில் மிதந்து இடம் பெயர்வது சாத்தியம் தானா? அப்படி அவை மிதந்து செல்லக் கூடுமாயின், அவற்றை அவ்வாறு இயக்கும் ஆற்றல் எது? இவைபோன்ற வினாக்களுக்கு விஞ்ஞானப்பூர்வ விடை இன்னும் கிடைக்கவில்லை.

சுமார் 200 மில்லியன் ஆண்டுகள் வரையிலும் பாங்கியா என்ற பெருங்கண்டம் ஒன்று இருந்ததாம். கிரேக்கச் சொல் “பாங்கியா’வுக்கு “அனைத்துலகு’ என்று பொருள்.

இந்தப் பாங்கியா, பின்னர் லாரேசியா , கோண்ட்வானா என்ற இரண்டாகப் பிரிந்தது. அவற்றை தேத்திஸ் என்ற கடல் பிரித்தது. லாரேசியாவில் வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவும், கோண்ட்வானாவில், தென்அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகியவையும் அடங்கும். அவை இரண்டும் இன்று நாம் காணும் கண்டங்களாக மீண்டும் பிளவுபட்டன.

இவையனைத்தும் ஒரே காலத்தில் நிகழவில்லை. கடலுக்கடியில் உண்டாகும் சக்திகள் நிலப்பரப்பை மிதந்து மெல்ல இடம் பெயருமாறு செய்கின்றன. இது நீடிக்குமானால், நிலப்பரப்பு ஓர் ஆண்டில் சில மி.மீ.க்கு மேல் செல்லாது. இன்றைய உலகம் இனி 50 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின் இப்போது உள்ளது போல் இல்லாமல், அப்போது அட்லாண்டிக் மாக்கடல் விரிந்து காணப்படும்; ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் மிகப் பெரிய பிளவு உண்டாகும், ஆசியாவை நோக்கி ஆஸ்திரேலியா நகரத் தொடங்கும் என்றெல்லாம் சொல்கின்றனர் அறிவியலார்.

தென்கிழக்கு ஆசியாவின் கரையோரப் பகுதி முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக கடலினுள் மூழ்கி வருகிறது என்பதைத் தற்காலத்தில் பெறப்படும் நிலவியல் சான்றுகள் காட்டுகின்றன. இவ்வாறு நிலம் நீரினுள் அமிழும் செயல் முன்னொரு காலத்தில் மிகவும் வேகமாகவும் பரந்த அளவிலும் நடந்திருக்கலாமாம்!

ஆப்பிரிக்காவின் பெரும்பாறை வெடிப்புப் பள்ளத்தாக்கு போன்ற நிலப் பரப்பு பரந்த அளவில் வெடித்துப் பிளந்து போனதைப் பார்க்கும் போது, கண்டம் பிளந்தது என்ற யூகத்தில் நியாயம் உண்டு. ஆனாலும், தனிக் கண்டம் ஏன் உடைந்தது என்பதற்கான காரணம் புலப்படாமல் உள்ளது.

கண்டங்கள் அதிக தூரம் நகர்கின்றன என்ற வேஜனரின் கொள்கையை அறவே மறுப்பவர்கள், கண்டங்களின் ஓரங்களில் காணப்படும் ஒத்த தன்மையை வேஜனர் சுட்டிக் காட்டுகையில், அது தற்செயல் பொருத்தம் என்று கூறி நிராகரித்து விடுகின்றனர்.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உடைந்த கோண்ட்வானா, சிதறுண்ட பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர்கூட இந்து மாக்கடலின் வடமேற்கில் லெமூரியா என்ற பெரிய கண்டம் தொடர்ந்து இருந்து வந்தது என்பார் ஸ்கிலேட்டர்.

ஹோமோ சேப்பியன் எனும் மனிதன் தற்போது கடலில் மூழ்கிக் கிடக்கும் லெமூரியாவிலிருந்து தோன்றினான் என்றார் ஹக்ஸ்லி. அவரது கொள்கையை ஹெகல் விரிவுபடுத்தினார். இவர்கள் இருவரின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே ஃபிரடரிக் எங்கல்ஸ் (1820 & 1895), “”பரிணாம வளர்ச்சி பெற்ற ஆந்திரபாய்ட் என்ற மனிதக் குரங்குகள் இன்னும் இந்து மாக்கடலுள் மூழ்கியுள்ள பெரிய கண்டத்தில் வாழ்ந்திருக்கலாம்'’ என்று “மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய கட்டத்தில் உழைப்பு ஆற்றிய பங்கு’ என்ற நூலில் கூறுகிறார். லெமூரியாவானது குமரிக்கண்டம், குமரிநாடு, நாவலந்தீவு என்பனவாகத் தமிழ் இலக்கியங்களில் இயம்பப் படுகிறது. இளம்பூரணர் போன்ற ஆசிரியர்களின் உரைகளாலும், இறையனார் களவியல் உரை, அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரை போன்ற உரைகளாலும் குமரிக் கண்டம் விளக்கம் பெறுகிறது.

“”நெடியோன் குன்றமுந்த தொடியோள் பெüமும்

தமிழ்வரம் பறுத்த தண்டி னன்னாட்டு'’ (சில 8:12)


“”வடிவே லெறிந்த வான்பகை பொறாது


பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்


குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள'’
(சில 11:1:20)

இன்றுள்ள குமரிமுனைக்கு 200 கல் தொலைவில் தெற்கில் குமரிமலையில் தோன்றி கிழக்கு நோக்கிப் பாய்ந்தது குமரியாறு. குமரியாற்றுக்கு சுமார் 700 கல் தெற்கில் பன்மலைத் தொடரில் தோன்றி பஃறுளியாறு (பல்+துளி= பஃறுளி; துளி=சிற்றாறு) என்னும் பேராறு பாய்ந்தது.

ஏழேழு உள்நாடுகளாகப் பிரிவு பட்டிருந்த அந்தப் பெருவள நாடு, இன்றுள்ள தென் கடற்கரையின் தெற்கில் 1500 கல்லுக்கு மேல் பரவியிருந்தது. அதன் வடமேற்கில் குமரி, கொல்லம் முதலிய பல மலைநாடுகளும் காடுகளும் இருந்தன. குமரிமலை, பன்மலைத் தொடர் முதலாக அப்பெருவள நாட்டின் மேற்கில் இருந்த மலைகள் எல்லாம் மேற்கு மலைத் தொடரின் தொடர்ச்சியே ஆகும்.

“தடநீர்க்குமரி’ என்பதால் அக்குமரிமலை, மிக்க நீர்வளம் பொருந்தியது என்பது விளங்குகிறது. “நதியும் பதியும்’ என்பதால், பஃறுளி அல்லாத வேறு பல ஆறுகளும், பாய்ந்து பேரூர்கள் பல கொண்டு விளங்கியது அப்பெருவள நாடு. ஏறக்குறைய 500 கல் பரப் புடைய நிலம் பஃறுளியாற்றின் தென்பால் இருந்ததால், அந்நிலம் தென்பாலி நாடு எனப் பெயர் பெற்றது. அஃதும் பல உள்நாடுகளாகப் பிரிக்கப் பட்டிருக் கலாம். இப்பெருவள நாட்டில் குமரிமலை, பன்மலை தவிர பனிமலை, மணிமலை போன்ற மலைகளும், நாவலந் தண்பொழில் நாடும் இருந்தன. “நீர் மலிவான்’ என்பதால் அப்பெரு வளநாடு நீர்வளமும் நிலவளமும் பிற வளங்களும் உடையதாக மக்களின் நல்வாழ்வுக்கு ஏற்ற நன்னாடாக விளங்கியது. பலமுறை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அவை யாவும் கடலுள் மூழ்கிவிட்டன.

லெமூரியாக் கண்டத்தில் பெரும்பாலும் அழிந்தது போக மீதியாகித் தமிழ்நாட்டுடன் ஒட்டிக் கிடந்த பகுதியே குமரிநாடாயிருக்க வேண்டும் என்ற கருத்தைத் தருகிறார் பன்மொழிப் புலவர் க. அப்பாதுரையார் (குமரிக் கண்டம்). இப்போது இந்துமாக் கடலுள் மூழ்கிக் கிடக்கும் கோண்ட்வானா என்ற பரந்த கண்டத்தின் வடபகுதியே லெமூரியா (எ) குமரி நாடு அல்லது நாவலந்தீவு என நம்புகின்றனர் தமிழ் ஆய்வாளர்கள்.


thanks :
http://tamil.sify.com/manjari/feb05/fullstory.php?id=13689479


...

சோழர் வரலாறு

சோழர் வரலாறு
 

சோழர்களது நீண்ட வரலாற்றை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

1. சங்க இலக்கிய காலம்.

2. சங்ககால இறுதிக்கும் விஜயாலய அரசமரபின் தோற்றத்திற்கும் இடைப்பட்ட காலம்.


3. விஜயாலயனுடைய மரபு புகழ்பெற்று விளங்கிய காலமான கி.பி. 9ஆம் நூற்றாண்டு முதலான காலம் (இதில்தான் இராஜராஜன் இராஜேந்திரன் வருவார்கள்.)


4. சாளுக்கிய-சோழ குல மன்னன் முதலாம் குலோத்துங்கனும் அவனது பின்னோரும் புகழ்பெற்று விளங்கிய கி.பி. பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையிலான காலம்.


நாம் இதில் முதல் பகுதியான சங்க இலக்கிய காலத்தைப் பற்றி முதலில் பார்ப்போம். ஆதாரமாக நான் வைத்து எழுதிக் கொண்டிருப்பது, சோழர்கள், பேராசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதியது, தமிழில் மொழிபெயர்த்தது, கே.வி.ராமன்.

முதலாம் பராந்தகன் (கி.பி. 907 - 955)

திருப்புறம்பயம் போரின் போது, தஞ்சையையும் உறையூரையும் கொண்ட சிறு பகுதியைச் சோழர்கள், பல்லவர்களின் தலைமையின் கீழேயே ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின் பலம் பல மடங்கு பெருகிற்று. இந்நிலைக்கு மிக முக்கியமான காரணமாயிருந்தவன் ஒப்பற்ற வீரனும், இராஜதந்திரியுமான முதலாம் ஆதித்தனே ஆவான்.

இவனுக்குப் பிறகு அரியணைக்கு வந்த பராந்தகன் என்றழைக்கப்படும் முதலாம் ஆதித்தனின் மகன், சிறிது காலத்திலேயே பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். தனது மூன்றாம் ஆட்சி ஆண்டிலேயே “மதுரை கொண்ட” என்ற விருதை அவன் பெற்றான். இவன் ஆட்சிக்கு வந்தபொழுது, சோழநாடு வடக்கில் மைசூர் பீடபூமி நீங்கலாக, தெற்கே காவிரி வரையிலான பகுதியும், மேற்குத் கடற்கரையோரமாக ஒரு பகுதியும், சென்னை, காளத்தி வரையிலும் பரவியிருந்தது. கங்க மன்னர்கள் சோழரது அதிகாரத்திற்கு உட்பட்ட நண்பராகவும் சேரமன்னன், நெருங்கிய நண்பனாகவும் கருதப்பட்டனர்.

இலங்கையின் வரலாற்றுப் பதிவான மகா வமிசம் கூறும் குறிப்புகளிலிருந்து (மஹாவம்சா சி.வி. பாகம், 52, பக். 70) சோழ- பாண்டியப் போரில் மூன்று கட்டங்களைப் பற்றி அறியலாம். முதல் கட்டத்தில் பராந்தகனிடம் பாண்டிய மன்னன் தோல்வியுற்றான். இரண்டாம் கட்டத்தில் பாண்டிய மன்னன், ஈழ மன்னனது உதவியைக் கோரிப் பெற்று, சோழப்படையைத் தாக்கினான். பாண்டிய ஈழத்துப்படைகள் சோழப்படையிடம் பின்வாங்கின. ஈழப்படைத்தலைவன் சோழரை வெல்ல மீண்டும் முயன்றது மூன்றாம் கட்டமாகும்.

ஈழப்போர்:

தான் புதியதாக வெற்றி கொண்ட பகுதிகளைத் தன் அதிகாரத்தை ஏற்குமாறு செய்யும் பணியில் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்று எண்ணிய பராந்தகன், தன் வெற்றியை மதுரையில் கொண்டாடும் பொருட்டு, பாண்டிய மன்னனின் முடியையும், மற்ற சின்னங்களையும் தானே அணிந்து கொள்ள எண்ணினான். ஆனால் இவையனைத்தும் இராஜசிம்மனால் (பாண்டிய மன்னன்) ஈழத்து மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால் பராந்தகன் நான்காம் உதயன் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 945-953) இவற்றைத் திரும்பிப் பெறமுயன்று இம்முயற்சியில் படுதோல்வியடைந்தான்.

இவை பராந்தகனின் ஆட்சிக் காலத்தின் கடைசி ஆண்டுகளைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். மறக்கப்படாமலிருந்த இவனது தோல்வி, பல ஆண்டுகளுக்குப் பிறகு, இவனது பலம் வாய்ந்த வழித்தோன்றலான முதலாம் இராஜேந்திரனால் மாற்றப்பட்டது (அதாவது பழிவாங்கப்பட்டது).

பராந்தகனின் நண்பர்கள்:

கேரள மன்னன், கீழப்பழுவூர்த் தலைவர்களான பழுவேட்டரையர் ஆகியோரைத் தவிர, கொடும்பாளூரைச் சேர்ந்த வேளிர் தலைவரும், பாண்டியருக்கான போர்களில் பராந்தகனுக்காக உதவி செய்தனர்.

கொடும்பாளூர் வமிசத்தைச் சேர்ந்த தென்னவன் இளங்கே-வேளிர் என்பவரின் மகள் பூதி ஆதிக்க பிடாரி என்பவளைப் பராந்தகனின் மக்களில் ஒருவனான அரிகுலகேசரி முன்பே திருமணம் செய்திருந்தான்.

ஆட்சிக் காலம்:

முதலாம் பராந்தகன் 48 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்பதை அவனது 48-ம் ஆண்டின் கல்வெட்டிலிருந்து அறியலாம். இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன், தன் பேரன் கன்னர தேவனைச் சோழ நாட்டின் அரியணையில் அமரச் செய்த முயற்சியை முதலாம் பராந்தகன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே முறியடித்தான். அதுமுதல் பராந்தகன் தன் ஆட்சிக் காலம் முழுவதும் வெற்றி மேல் வெற்றி பெற்று பீடுநடை போட்டான். தன் தந்தையின் வெற்றிகளை நிறைவேற்றும் வகையில் இவன் பாண்டியர்களின் சுதந்திரத்தைப் பறித்து, தன் நாட்டைத் தெற்கே கன்னியாகுமரி வரை பரவச் செய்தான். ஈழத்தின் மீதும் படையெடுத்தான், ஆனால் இம்முயற்சியில் இவனது குறிக்கோள் வெற்றியடையாததை முன்னர் பார்த்தோம். ஏனைய இடங்களில் இவன் பாணர்களை வெற்றி கொண்டதுடன் கங்க மன்னன் ஹுஸ்தி மல்லனைத் தன் அதிகாரத்திற்கு உட்படுத்தினான.

எஞ்சியிருந்த பல்லவர்களின் அதிகாரம் அடியோடு மறைந்தது; பராந்தகனின் நாடு, வடக்கே நெல்லூர் வரை பரவியது. எனினும் இவனது ஆட்சி முடிவதற்கு முன், வட மேற்கிலிருந்து மிகுந்த படைபலத்துடன் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். அதன் விளைவாக நடைபெற்ற போரில் பராந்தகனின் மூத்த மகனான இராஜாதித்தன் உயிரழந்ததோடு, இதற்குப்பின் பராந்தகனும் வெகுகாலம் உயிர் வாழவில்லை. இதுமுதல் புகழ்மிக்க முதலாம் இராஜராஜன் கி.பி. 985ல் அரியணையில் அமர்ந்தது வரையிலான முப்பது ஆண்டுகள் வரையில் சோழ நாடு பெரும் இருளில் ஆழந்திருந்தது.

தக்கோலப்போர்

இதுவும் சோழ வரலாற்றில் ஒரு முக்கயமான போர் என்பதால் விரிவாகப் பார்ப்போம்.

பிரதிவீபதியின் மரணம்:

சுமார் கி.பி. 940ல் முதற் பராந்தகனின் நம்பிக்கையுடைய நண்பனும் அவன் ஆட்சிக்குட்பட்டவனுமான கங்கமன்னன் இரண்டாம் பிரதிவீபதி மரணம் அடைந்தான். இதுவே கங்க நாட்டிலிருந்து, பராந்தகனுக்கு ஏற்பட்ட தொல்லைகளின் தொடக்கமாக இருந்தது. பிரதிவீபதி தன் வாழ்நாளின் இறுதியில், ஒரே மகன் விக்கியண்ணனை இழந்திருந்தான். இரண்டாம் பூதகன் என்பவன் இராஷ்டிரகூட இளவரசியும் மூன்றாம் கிருஷ்ணனின் சகோதரியுமான ரேவகா என்பவளை மணந்தான். இவன் கங்க நாட்டின் தனிப்பெரும் தலைவனாக இப்போது விளங்கினான். சோழர்களின் வலிமையைக் கண்டு அஞ்சிய வாணர்களும் வைதும்பரர்களும் ஏற்கனவே கிருஷ்ணனுடைய பாதுகாப்பைக் கோரியிருந்ததோடு, சோழருக்கு எதிராகவும் அவனது உதவியைப் பெற விழைந்தனர்.

இச்சூழ்நிலையில், அப்போதுதான் தன் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புகள் அனைத்தையும் அழித்துப் புகழேணியில் இருந்த கிருஷ்ணன் (இராஷ்டிரகூட மன்னன்) தெற்கு நோக்கித் தன் நாட்டை மேலும் விரிக்கக்கூடிய அரிய வாய்ப்பை நழுவவிட விரும்பாமல் சோழருக்கு எதிராகப் படையெடுத்தான்.

இராஜாதித்தன்:

திருமுனைப்பாடியில் இக்காலத்திலேயே பராந்தகனின் முதல் மகன் இராஜாதித்தன் தலைமையில் யானைப் படையும் சிறிய குதிரைப் படையும் அடங்கிய பெரும் படை ஒன்று இந்த இராஷ்டிரகூட படையெடுப்பு நிகழும் சாத்தியக் கூறுகள் இருந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதே காலத்தில், இதே பகுதியில் அரிகுலகேசரி என்ற பராந்தகனின் இரண்டாம் மகனும் தன் சகோதரன் இராஜாதித்தனுக்கு உறுதுணையாக இருந்தான்.

வாணர், வைதும்பர் ஆகியோருக்கு எதிராக, தான் கடைப்பிடித்த ஆக்கிரமிப்புக் கொள்கையின் விளைவுகளைப் பற்றி கவலையுற்ற பராந்தகன், இரண்டாம் பிரதிவீபதியிடம் மட்டும் இந்தப் பொறுப்புகளை ஒப்படைக்காமல் பல எச்சரிக்கை நடவடிக்கைகளை, தானே மேற்கொண்டான். இத்தகைய ஏற்பாடுகள் பல ஆண்டுகளாகப் பராந்தகனின் நாட்டைப் பாதுகாத்து வந்தது. ஆனால் கி.பி. 949ல் பல காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்தப் படையெடுப்பு தக்கோலத்தில் பெரும்போரில் முடிவுற்றது.

தக்கோலத்தில் மூவடி சோழ இராஜாதித்தனுடன் பொருது அவனைக் கொன்று கன்னரதேவன் வெற்றி கொண்டதாக, ஆதகூர் கல்வெட்டு கூறுகிறது. பூதகனது இந்த வீரச்செயலைப் பாராட்டும் வகையில் கிருஷ்ணன் அவனுக்கு வனவாசி 12,000 பெல்வோலோ 300 என்ற பகுதிகளை வழங்கினான். இதை சோழர்களின் சான்றுகளை ஒப்புகின்றன.

இப்போரில் வெற்றி பெற்றாலும் கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு மறைந்துவிடவில்லை. இன்னும் பல ஆண்டுகள் இம்மன்னன் கடும் போர் புரிய வேண்டிய நிலையில் இருந்தான். கிருஷ்ணனின் படையெடுப்பால் சோழ நாடு சிதறுண்டது. வடபகுதியில் பெற்ற தோல்வியின் பயனாக, பராந்தகன் தன் நாட்டின் தென் பகுதியையும் இழந்தான் என்பது திண்ணம். சோழப் பேரரசு வீழ்ச்சியுற்றது; அதற்கு மீண்டும் உயிரூட்ட வேண்டிய நிலையை அடைந்தது.

பராந்தகன் ஆட்சியின் முடிவு:

பராந்தகனது ஆட்சியின் இறுதி ஆண்டுகளைப் பற்றி தஞ்சையை அடுத்துள்ள இடங்களிலிருந்து கிடைக்கும் ஒரு சில கல்வெட்டுகளிலிருந்து அறியலாம். இதைக்கொண்டு இம்மன்னன் 48-ம் ஆட்சி ஆண்டு வரை உயிர்வாழ்ந்தான்.

இம்மன்னன் பல மனைவியரை மணந்திருந்தான், இவர்களில் பதினொருவருடைய பெயர்கள் கல்வெட்டுகளில் இடம் பெறுகிறது. இராஜாதித்தனைத் தவிர, பராந்தகனுக்கு நான்கு மக்கள் இருந்தனர். கண்டராதித்தன், அரிகுலகேசரி, உத்தமசீலி, அரிந்திகை அல்லது பட்டயங்களில் காண்பது போல அரிஞ்சயன் என்பவராவர். பராந்தகன் சிறந்த சிவ பக்தன் என்று திருவாலங்காட்டுப் பட்டயம் சொல்கிறது. முதலாம் ஆதித்தனால் மேற்கொள்ளப்பட்ட கோயில் எடுப்பிக்கும் பணி இவனது காலத்தில் சிறந்த முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

இதனுடன் முதலாம் பராந்தகனின் வரலாறு முடிவுறுகிறது. அடுத்து முதலாம் பராந்தகனின் மறைவிலிருந்து (கி.பி. 955) முதலாம் இராஜராஜன் அரியணையேறும் வரையிலான காலத்தைப் பற்றி பார்க்கலாம் (கி.பி. 985).

இரண்டாம் பாகம்: சங்ககால இறுதிக்கும் விஜயாலய அரசமரபின் தோற்றத்திற்கும் இடைப்பட்ட காலம்.

சங்க காலத்திற்குப் பிறகு, ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளுக்குக் கடுங்கோன் வழிவந்த பாண்டியர்களும், சிம்மவிஷ்ணு வமிசத்துப் பல்லவர்களும் எவ்வாறு தமிழ்நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டு ஆட்சி புரிந்து வந்துள்ளனர் என்பது புதிராகவே உள்ளது. இதுபோன்று அடுத்த மூன்று நூற்றாண்டுகளில் அதாவது ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் விஜயாலயன் ஆட்சிக்கு வரும்வரை சோழ மன்னர்களின் வரலாறு இருள் சூழ்ந்ததாக உள்ளது.

இந்நீண்ட இடைக்காலத்தில் இப்பெரிய ஆட்சிகளில் ஏற்பட்ட மாறுதல்களைப் பற்றிக் கல்வெட்டுகளிலிருந்தும் இலக்கியத்திலிருந்தும் ஒருவாறு அறிந்து கொள்கிறோம். சோழநாட்டின் வீழ்ச்சிக்குப் பிறகு வடக்கிலும் தெற்கிலும் பல்லவர்களும், பாண்டியர்களும் வலுப்பெற்றப்போது, சோழ அரச குடும்பத்தைச் சேர்ந்தோர் வெற்றிபெற்ற தம் பகைவரிடமும் பணிபுரிந்ததோடு அவர்களது உரிமைகளையும் பெற்று வந்தனர். இத்தகைய நிகழ்ச்சி, இந்திய வரலாற்றில் சர்வசாதாரணமாக ஏற்பட்ட ஒன்றாகும்.

ராஷ்டிரக்கூடரின் எழுச்சியின் போது மேளைச்சாளுக்கியரும், இராஜராஜன் காலத்துக்கும் வேங்கியைக் கைப்பற்றிய முதலாம் குலோத்துங்கன் சோழ அரியணையில் ஏறுவதற்குமிடையே கீழைச் சாளுக்கியரும், பாண்டியரும், பல்லவர்களும், கங்கர்களும், பாணர்களும், விஜயாலயன் ஆட்சிக்குப்பின் தம் பகைவரிடம் பணிபுரிந்ததற்கான பல சிறந்த எடுத்துக்காட்டுக்களில் ஒரு சிலவாகும்.
 
களப்பிரர்கள்:

நாட்டில் பல அரசியல் மாறுதல்களுக்குக் காரணமாக இருந்த தெளிவற்ற ஒரு குலத்தைச் சார்ந்த களப்பிரர்களைப் பற்றிப் பாண்டியர்களின் வேள்விக்குடிப் பட்டயமும், பல்லவர்களின் சில பட்டயங்களும் கூறுகின்றன. பாண்டியர்களும் பல்லவர்களும் தம் ஆட்சியை நிலைநாட்ட வேண்டி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இக்குலத்தை அடியோடு முறியடித்தமை அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாகும்.

இவர்களில் குறிப்பிடுதற்குரிய ஒரு மன்னன், அச்சுதவிக்கந்தன். இம்மன்னனே சேர சோழ பாண்டிய மன்னர்களைச் சிறையெடுத்தான் என்று இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் அச்சுதன். கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த யாப்பெருங்காலக் காரிகையின் ஆசிரியரான அமிர்தசாகர் இவனைப் பற்றிய சில பாடங்களை மேற்கோள் காட்டியுள்ளார். இம்மன்னன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவனாய் இருக்கக்கூடும்.

சோழர்களின் வீழ்ச்சி:

அச்சுதனின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு (எவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு என்பதை அறுதியிட்டுக் கூற இயலாது), களப்பிரர்களை முறியடித்த பல்லவர்களும், பாண்டியர்களும் தங்கள் ஆட்சியினை நிலைநாட்டினர், தம் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாத சோழ மன்னர்கள், காவிரிக்கரைப் பகுதிகளஇல் புகழ் மங்கிய நிலையில் வாழ்ந்து வந்தனர். வடக்கிலும் தெற்கிலும் புதிதாக ஏற்பட்ட அரசுகள் சோழ மன்னர்களை ஓரளவு புறக்கணித்தாலும் இவர்களது பழம் புகழை மதிக்கின்ற வகையில், சோழர்குல மகளிரை மணந்ததோடு, தம்மிடம் பணியாற்ற விரும்பிய சோழ இளவரசர்களுக்குப் பதவிகளையும் அளித்தனர்.

தமிழ்நாட்டில் சோழர்கள்:

இந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த சோழ மன்னர்களைப் பற்றி நம்மால் அறிய முடியவில்லை, இக்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளும் இலக்கியமும் இச்சோழ மன்னர்களைப்பற்றி மேலெழுந்த வாரியாகக் கூறும்போது, காவேரிக் கரையில் இவர்கள் தொடர்ந்து வாழந்தனர் என்று கூறுகின்றனவே தவிர, வரலாற்று முக்கியமுள்ள செய்திகளைத் தரவில்லை.

இதன் காரணமாக கி.பி. 3-ம் அல்லது 4-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டு வரை சோழர்களைச் சுற்றி நீண்டதோர் இருண்ட காலம் சூழந்து கொள்வதை அறிகிறோம். இக்காலத்தில், கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும் என்ற நிலையில் இருந்தனர் என்றே கூறலாம். நாம் இப்பொழுது அறிந்துகொள்ள முடியாத விதத்தில் அவர்கள் தங்களுக்கென்று ரேனாட்டுப் பகுதியில் இரண்டாம் புகலிடத்தைத் தேடிக் கொண்டனர். பழைய நாட்டிலோ, தமக்கெதிராக ஏற்பட்ட, ஒவ்வொரு புயலுக்கும் வளைந்து கொடுத்து, தம் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர். வெற்றிபெற்ற மன்னர்களுடன் தம் சந்ததியினருக்குத் திருமணங்கள் செய்து வைத்தும், அக்காலத்திய சமய இயக்கங்களை ஊக்குவித்தும், தம் அரசியல் செல்வாக்கை வளர்க்கப் பாடுபட்டனர்.

விஜயாலயனின் எழுச்சி முதலாம் ஆதித்தன் (கி.பி. 850 - 907)

திருப்புறம்பயம்:

தென்னிந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இருந்த இந்த திருப்புறம்பயம் போர் இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது.

இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம் வசப்படுத்தினர். இவர்களே செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை ஆண்டுவந்தனர் என்று செந்தலைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர்களும் சோழர்களைப்போலவே, தம் சுதந்திர ஆட்சியை நிலைநாட்ட முடியாமல், பாண்டியர்களுடனோ பல்லவர்களுடனோ நட்புகொள்ள வேண்டியிருந்தது. தங்கள் முன்னேற்றத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு அவ்வப்போது தங்கள் ஆதரவை முத்தரையர் மாற்றிக் கொண்டனர் என்பதை இவர்களது கல்வெட்டுகளும் விருதுகளுமே விளக்குகின்றன.

வரகுண மன்னன் காலத்தில், தாமாகவோ அல்லது வரகுணனின் முயற்சியாலோ இவர்கள் தம் முழு ஆதரவையும் பாண்டியர்களுக்கு அளித்தனர். இதன் விளைவாக, பல்லவர்களின் உரிமைகளைக் காக்கும் பொருட்டுச் செயல்பட்ட விஜயாலயனிடம் தஞ்சையை இழக்கலாயினர். தம் அதிகாரத்திற்கு உட்பட்ட சோழமன்னனை இச்செயலில் இறக்கியது, “புலிக்குட்டியை வளர்த்து, இரத்தத்தை சுவைபார்க்க வைத்தது போலாகும்” என்று பல்லவ மன்னன் சிறிதும் சிந்திக்கவில்லை. விஜயாலயனும், இவ்வெற்றியே இந்திய வரலாற்றில் காணப்படும் ஒரு பேரரசை நிறுவுவதற்கான மிகச்சிறப்பான தொடக்கம் என கனவுகூடக் காணவில்லை.

விஜயாலயனது வெற்றி, பாண்டிய மன்னன் வரகுணவர்மனின் நண்பர்களான முத்தரையரின் பலவீனத்தையே காட்டியதால், சமநிலையை மீண்டும் நிலைநாட்டும் பொருட்டு, பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்து வடகரையிலுள்ள இடவை என்னுமிடத்தை அடைந்தனர். இந்த நிகழ்சிக்குச் சற்று முன்பே நிருபதுங்க வர்மனுக்கு (பல்லவ மன்னன்) அடுத்த மன்னனான அபராஜிதன் கங்க மன்னன் முதலாம் பிரதி வீபதி உள்ளிட்டுத் தன் நண்பர்களைக் கூட்டி, பாண்டியர்களை முறியடிக்க வேண்டிய பெரும் முயற்சியை மேற்கொண்டான். திருப்புறம்பயத்தில் நடந்த பெரும் போரில், விஜயாலயனை அடுத்து ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனும் அபராஜித மன்னனுடன் இருந்து போரிட்டான்.

பல்லவர்க்கும் கங்க மன்னர்களுக்கும் இடையில் தொன்றுதொட்டு நட்பு ஏற்பட்டிருந்தாலும், இப்போரில் கங்கமன்னன் உயிர்நீத்ததால், போரில் கிடைத்த வருவாயின் பெரும் பங்கை ஆதித்தனே பெற்றான். ஆதித்தன், போரில் தனக்கு உதவியதற்கான நன்றிப் பெருக்கால், முத்தரையரிடமிருந்து முன்னால் ஆதித்தன் தந்தை விஜயாலயனால் எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளையும் அபராஜித்தன், ஆதித்தனுக்கு அளித்தான். திருப்புறம்பயம் போரில், ஆதித்தன் பெரும்பங்கை ஏற்காவிடினும், தனக்கு அனுகூலமாக அமைந்த சூழ்நிலையை அறிந்து தன் உயர்வுக்காகத் தன் பலத்தை விரைவிலேயே பயன்படுத்தத் தொடங்கினான். முதலாம் பிரதிவீபதியின் கடைசி ஆண்டு, கி.பி. 879 ஆகத்தெரிகிறது. எனவே இதே ஆண்டில்தான் இவன் உயிர்விட வேண்டி நேர்ந்த திருப்புறம்பயம் போரும் நடைபெற்றிருக்க வேண்டும்.

இதிலிருந்து முதலாம் ஆதித்தன் கி.பி. 870-லிருந்து கி.பி. 907 வரை, ஏறத்தாழ 36 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என அறிய இயலுகிறது. கி.பி. 850 அளவில் தொடங்கிய விஜயாலயனது ஆட்சி, கி.பி. 870-ம் ஆண்டு அளவில் முடிவுற்றது என்றும் இதிலிருந்து அறியலாம்.

முதலாம் ஆதித்தன்:

சஹுயாத்திரி மலைத்தொடரிலிருந்து பரந்த கடல் வரையுள்ள பகுதிகளில், காவிரியாற்றின் இரு கரைகளிலும், தன் வெற்றிச் சின்னங்களாகச் சிவபெருமானுக்கு வரிசை வரிசையாக வானோக்கி பல கோயில்களை எடுப்பித்தான் என்று ஆதித்தனைப் பற்றி (கி.பி. 871-907) அன்பில் பட்டயங்கள் கூறுகின்றன. பலம் மிக்க பல்லவ மன்னன் அபராஜிதனைத் தோற்கடித்து, அவனது ஆட்சியைக் கைப்பற்றினான் என்று திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. கோதண்டராமன் என்னும் சிறப்புப் பெயரை இவனுக்கு இடுவதோடு, ஒரு உயர்ந்த யானையின்மீது அமர்ந்திருந்த பல்லவமன்னன் மீது பாய்ந்து அவனைக்கொன்றான் என்றும் கன்னியாக்குமரிக் கல்வெட்டு கூறுகிறது.

தில்லைஸ்தானம் என்னுமிடத்திலுள்ள ஒரு கல்வெட்டு இராஜகேசரி தன் இராஜ்ஜியத்தை, தொண்டைநாடு வரை பரவச்செய்தான் எனத் தெளிவாகக் கூறுகிறது. இதிலிருந்து ஆதித்தன் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி அதன்மூலம் பல்லவர்களின் ஆட்சியை ஒரு முடிவிற்கு கொண்டுவந்ததோடு, சோழ இராச்சியத்தை இராஷ்டிரகூடர்களின் எல்லைவரை பரப்பினான் என்றே கூற வேண்டும். இதை வைத்து இவன் கி.பி. 890-ல் தான் பல்லவர்களைத் தோல்வியுறச்செய்து, அந்நாட்டைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும்.

புதிதாகக் கைப்பற்றப்பட்ட தொண்டை மண்டலப் பகுதியில் அமைதியை ஏற்படுத்த சில ஆண்டுகள் தேவைப்பட்டதோடு, பல புதிய படையெடுப்புக்களுக்கும் காரணமாயிற்று. இவ்வெற்றிகளில் கங்க மன்னன் உதவியிருக்கக்கூடும், இது எவ்வாறு இருப்பினும் விரைவிலேயே கங்கை மன்னன், ஆதித்தன் தலைமையை ஏற்றான்.

தஞ்சாவூர்-பட்டணத்தில் முடிசூட்டிக் கொண்டபின் ஆதித்தன் கொங்கு தேசத்திற்கு வந்து, இந்நாட்டை வெற்றிகொண்டு, தன்னாட்டுடன் சேர்த்து ஆட்சிசெய்தான் என்று கொங்கு தேச ராஜாக்கள் என்னும் குறிப்பேடு கூறுகிறது.

இவன் காலத்தில் வாழ்ந்த சேரமன்னன் தாணுரவி என்பவனுடன் ஆதித்தன் நெருங்கிய உறவு கொண்டிருந்தான் என்று தில்லைத்தானத்திலுள்ள ஆண்டு குறிப்பிடாத ஒரு கல்வெட்டு கூறுகிறது.

மறைவு:

சித்தூர் மாவட்டம் காளத்தியின் அருகேயுள்ள தொண்டைமானாடு என்னுமிடத்தில் ஆதித்தன் இறந்தான். இவனது மகன் பராந்தகன், இறந்த இடத்தில் கோதண்ட இராமேசுவரம் என்றும் ஆதித்தீசுவரம் என்றும் அழைக்கப்பட்ட கோயிலை எடுப்பித்தான். பராந்தகனைத்தவிர, ஆதித்தனுக்கு கன்னரதேவர் என்ற மற்றொரு மகனும் இருந்தான்.

இத்துடன் விஜயாலயன் மற்றும் முதலாம் ஆதித்தனின் வரலாறு முடிகிறது. அடுத்து முதலாம் பராந்தகனைப் பற்றிப் பார்க்கலாம்.

காவிரி:

காவிரியின் பெருமையைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் புகழ்ந்து பாடுகின்றன. சூரிய புத்திரர்களுக்காகவும் காந்தமன் என்ற மன்னனின் வேண்டுதலுக்காகவும் அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிறந்ததே இக்காவேரி நதி என்று கூறப்படுகின்றது. நீதியைப் பேணி வளர்த்த சோழ மன்னர்களின் குலக்கொடியாக விளங்கிய காவிரி, நீண்ட வறட்சிக் காலங்களிலும் அவர்களைக் கைவிடவில்லை. ஆண்டுதோறும் மழை பெய்து, காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்போது மன்னன் முதல் சாதாரண உழவன் வரை சோழநாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி திருவிழாக் கொண்டினார்கள்.

சோழர்கள் காலம்:

தென்னிந்திய வரலாற்றில் மிகவும் படைப்பாக்கம் நிறைந்த காலப்பகுதி சோழர் காலமாகும். அக்காலத்தில் முதன் முதலாகத் தென்னிந்தியா முழுவதும் ஒரே அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. புதிய சூழ்நிலைகள் தோன்றியபோது ஆட்சிமுறைச் சிக்கல்களைச் சமாளிக்கவும் தீர்க்கவும் சோழர் காலத்தில் அக்கறையுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உள்ளூர் ஆட்சிமுறை, கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் பிற்காலங்களில் மீண்டும் அடைய இயலாத ஒரு பொற்காலத்தை, ஒர் உயர்வைத் தமிழ்நாடு இக்காலத்தில் பெற்றது. வெளிநாட்டு வாணிகம், கடலக வாழ்வின் செயல்முறைகள் ஆகியவற்றைப்போல, முன்சொன்ன துறைகளிலும் ஏற்கனவே பல்லவர்கள் காலத்தில் தொடங்கப்பெற்ற இயக்கங்கள், சோழர் காலத்தில் முழுமை பெற்றன.

சோழர் என்னும் பெயர்:

சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை; சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றன. இது மரபுவழிச் செய்தி; வரலாற்று ஆதாரமற்றது. இது எவ்வாறாயினும் சோழ அரச மரபின் மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர்.

இலச்சினைச் சின்னம்:

சோழர்களின் இலச்சினை அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப் பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.

பண்டைய இலக்கியங்களின் தன்மை:

சங்க இலக்கியங்களிலிருந்து நாம் பண்டைய சோழர்களைப் பற்றித் தெளிவாக அறிய முடிகிறது. இவ்விலக்கயங்கள் கிறித்துவ சகாப்தத்தின் முதற்சில நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டன என்பது பொதுவாக எல்லா அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விலக்கியங்களின் கால வரையறையை இவற்றில் கிடைக்கும் குறிப்புகளைக் கொண்டு அறுதியிட்டுக் கூற இயலவில்லை. இதுவே இக்காலத்தின் வரலாற்றைத் தொடர்ச்சியாக எழுதத் தடையாக உள்ளது. அரசர்கள், இளவரசர்கள் ஆகியோரின் பெயர்களும், இவர்களுடைய புகழ்பாடிய புலவர்களின் பெயர்களும் நமக்குக் கிடைக்கின்றன. விஜயாலயச் சோழர்களின் காலம் உறுதியாக்கப்பட்ட பிறகு, இலக்கியத்தின் மெய்யான இயல்பும் உறுதியும் குலைந்து, அரண்மனைகளில் வீற்றிருக்கும் தனி மனிதர்களின் புகழ்பாடும் பாக்களாக அது குறைந்துவிடுகிறது.

இருபெரும் மன்னர்கள்:

சங்க இலக்கியங்கள் கூறும் சோழ மன்னர்களுள் இரு பெருவேந்தர் சிறந்து விளங்குகின்றனர். இவர்களது நினைவு பல பாடல்களிலும், கற்பனைக் கதைகளிலும் பிற்காலத்தில் போற்றப்படுகிறது. கரிகாலனும் கோச்செங்கணானுமே இவ்விருவர்.

இவ்விருவருள் முன்னால் வாழ்ந்தவர் யார்? இவர்களுக்கிடையே நிலவிய உறவு யாது? இவர்களுக்கும், இவர்கள் காலத்தில் வாழ்ந்த மற்ற மன்னர்களுக்கும், குறுநில மன்னர்களுக்கும் இடையே நிலவிய உறவு எத்தகையது? என்பது போன்ற குறிப்புகள் நமக்குத் தெளிவாகக் கிடைக்கவில்லை. புகார் எனப்படும் காவிரிப்பூம்பட்டினம் கரிகாலன் காலத்தில்தான் சிறப்பில் உயர்வு பெற்றதெனில், உறையூரில் ஒன்றும் புகாரிலும் மற்றொன்றுமாகத் திகழ்ந்த சோழகுலத்தின் கிளைகள் இரண்டுக்கும் இடையே ஏற்பட்ட உட்பூசல், கரிகாலன் ஆட்சிக்குப் பிறகே தோன்றியிருக்க வேண்டும்.

சங்ககால மன்னர்களைப் பற்றி ஆராயுமுன், சங்க இலக்கியத்தில் இவர்களைப் பற்றி காணப்பெறும் செவிவழிக் கதைகளை பார்ப்போம். பசுவின் கன்றுமீது தேரினை ஏற்றிக் கொன்ற தன் மகனுக்கு மரண தண்டனை அளித்த மன்னனையும் பருந்திடமிருந்து புறாவினைக் காத்த மன்னனையும் பற்றி இவ்விலக்கியங்கள் பேசுகின்றன. ஆனால் சிபி, மனு ஆகியோர் பெயர்கள் இவற்றில் கூறப்படவில்லை. புறாக்கதையில் கூறப்படும் மன்னனே செம்பியன் என்பவனாவான். இக்கதைகளுள் கன்றுக்குட்டி, இளவரசன் ஆகிய கதைகள் சங்க இலக்கயத் தொகை நூல்களில் காணப்படவில்லை; ஆனால் முதல்முறையாக சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரட்டைக்காப்பியங்களில் காணப்படுகின்றன.

கரிகாலன்

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான். கரிகாலன் என்பதற்கு, கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று. ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப் பெற்றபோது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்.

“வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க் கொடுவரிக்

குருளைகூட்டுள் வளர்த்தாங்குப் பிறர், பிணியகத்திருந்து


பீடுகாழ், முற்றி யருங்கரை கவியக்குத்திக் குழி


கொன்று யானை பிடிபுக்காங்கு”
(பட்டினப்பாலை 220-228)

“நுண்ணுதி னுணர நாடி நண்ணார்

செறிவடைத் திண்காப் பேறிவாழ் கழித்


துருகெழ தாப மூழி னெய்திப்


பெற்றவை மகிழ்தல் செய்வான்”
(பட்டினப்பாலை 220-228)

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளிருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக் கூடங்களில் வாழ்ந்தபோது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு பின் சிறைக் காவலரரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.

இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்துவிட்டான். இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி, கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்டான். இதைக் கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக்குயத்தியார் என்னும் புறநானுற்றுப் புலவர் விளக்குகிறார்.

இவனது படைபலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்க்காமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவன் முறியடித்தான். கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப்பாலையின் ஆசிரியர் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப் பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உத்திரங்கண்ணனார் பொதுப்படையாகக் கூறுகிறார். நாங்கூரைச் சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தயை கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியார் அவரது காலத்தில் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.

புராணக் கதைகள்:

பழங்காலந்தொட்டே கரிகாலனைப்பற்றிய பல புராணக் கதைகள் உருவாகி, தற்போது, இக்கதையே வரலாறாகப் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றனர் என்று கூறும் சிலப்பதிகாரம், கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது. இப்படையெடுப்பில், கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம், மகதம், அவந்தி போன்ற சில நாடுகளை வென்றோ, அல்லது உடன்பாடோ செய்து கொண்டான். காவிரியாற்றின் கரைகளை உயர்த்திக் கட்டினான் என்பதை ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழந்த தெலுங்கு சோ(ட)ழ மன்னன் புண்ணிய குமரனின் மலேபாடு பட்டயங்களில் முதன்முதலாகக் காண்கிறோம்.

சமயம்/இறப்பு:

வைதீக மதத்தில் கரிகாலனுக்கு இருந்த நம்பிக்கை பற்றியும் அவன் இறந்ததால் ஏற்பட்ட ஆறாத் துயரத்தைப் பற்றியும் கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.

அடுத்து சோழர் பரம்பரையில் இருந்த கிள்ளி மன்னர்கள் (கில்லியில்லை கிள்ளி), நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன், பெருங்கிள்ளி ஆகியோர் பற்றி அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.

நலங்கிள்ளி

புறநானூற்றில் 14 பாடல்களுக்குக் குறையாமல் நலங்கிள்ளியைப் புலவர்கள் பாடியுள்ளார்கள். இவற்றில் பாதிக்கும் மேலான பாடல்களைப் பாடியுள்ள கோவூர்கிழார், கரிகாலனைப் போன்று நலங்கிள்ளியும் தமிழ் அரசர்களில் தலைமை ஏற்றான் என்று கூறுகிறார். இப்பாடல்களைக் கீழ்காணுமாறு மிகைப்படுத்திப் பாடியுள்ளார்.

அறத்தின் பயனாகவே பொருளும் இன்பமும் நிலையாகக் கிடைக்கும் உன்னுடைய எதிரிகளாக இருக்கும் சேரர் பாண்டியர் உனக்குப் பின்னேவர உன்னுடைய ஒப்பற்ற வெண்கொற்றக் குடை முழுநிலாப் போல புகழுடன் செல்லுகிறது. நீயும் அரண்மனைக்குள் அல்லது தலைநகருக்குள் இராமல் வெற்றிநடை போட்டு, போர்க்களத்திலேயே இருக்கின்றாய். உன்னுடைய யானைகளோ, எதிரிகளுடைய நீண்டுயர்ந்த கோட்டைகளைத் தகர்க்க வல்லவை; உன்னுடைய படையோ, வீரக்கழலை உடைய மறவர்களைக் கொண்டது. அவர்கள் அடர்த்தியான காடுகளினூடே சென்று எதிரியின் நாட்டை அடைய அஞ்ச மாட்டார்கள். உன்னுடைய குதிரைப் படை, கீழைக் கடற்கரையில் புறப்பட்டால் மேலைக் கடற்கரை வரை பிடித்துத்தான் நிற்கும். எனவே நீ எங்கே படையெடுத்து விடுவாயோ என்று எந்த நேரமும் வடநாட்டு அரசர்கள் கவலையால் கண் துயிலாது இருக்கின்றனர். (புறம்.)

தன் மன்னனைப் பலவாறு புகழந்து பாடிய புலவர் இச்சகம் பாடுபவர் அல்லர். மேற்சொன்ன பாடலுக்கு முரணாகக் கீழ்க்காணும் பாடலில, நெடுங்கிள்ளியைத் தோற்கடிக்கும் பொருட்டு, உறையூரை முற்றுகையிட்ட நலங்கிள்ளியிடம் சமாதானத்தை நிலைநாட்டக் கோரி வற்புறுத்திக் கூறுவதைக் காணுகிறோம்.

பெரிய பனையினது வெளியத் தோட்டைச் சூடினோனல்லன், கரிய தோட்டினையுடைய வேம்பினது தாரையுடையவனும் அல்லன், உன்னுடைய கண்ணியும் ஆத்தியாற் செறியக் கட்டப்பட்டது, ஆதலால் உங்களில் ஒருவர் தோற்பினும், தோற்பது உங்கள் குடியன்றோ? இருவரும் வெல்லுதல் இயல்புமன்று; ஆதலால் உனது செய்கை உன் குடிக்கு தக்கதொன்றின்று, ஆதலால் இதை(போரை)த் தவிர்த்தலே உமக்கு நல்லது (புறம். 45)

இப்புலவரது அறிவார்ந்த அறிவுரையை நலங்கிள்ளி, செவிமடுக்கவில்லை என்பது தெரிகிறது. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்ற பட்டப்பெயரிலிருந்து, இவ்விருவருக்குமிடையே ஏற்பட்ட போர், நெடுங்கிள்ளி இறந்த பிறகே முடிவிற்கு வந்திருக்க வேண்டும் என்பதை அறிகிறோம்.

இவனது காலத்தில் வாழந்த பல மன்னர்களைப் போன்று நலங்கிள்ளியும் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டிருந்தான். இவன் இயற்றிய பாடல்களில் இரண்டு புதுமையான உறுதிமொழி பற்றிக் கூறுகிறான்.

நட்பால் என்னிடம் வந்து வேண்டிக் கொண்டால் நான் என்னுடைய ஆட்சியைக் கேட்டாலும் கொடுத்துவிடுவேன். பழமையும் தொன்மையும் உடையதே என்று பார்க்காமல் என் நாட்டை மகிழ்ச்சியுடன் இரப்பவனிடம் ஒப்புவித்துவிடுவேன்; கெஞ்சிக் கேட்பவனுக்காக என் உயிரையும் கொடுப்பேன். ஆனால் என் ஆற்றல் இன்னது என்று தெரியாமல் என்னுடன் போரிட வருவார்களாயின், தூங்குகிற புலியை எழுப்புவது போல் ஆகிவிடும். என் போர்ப்படை எதிரிகளை அழிக்கும். அப்படி அழிக்காவிட்டால் கற்பில்லாப் பெண்டிரோடு என் மார்பகம் கிடந்து முயங்குவதாக. (புறம். 73)

நெடுங்கிள்ளி

நலங்கிள்ளிக்கு எதிராகப் போர் புரிந்த நெடுங்கிள்ளியைப் பற்றி, இவ்விருவரையும் சமாதானப்படுத்த முயன்று கோவூர்க்கிழார் பாடிய இரு பாடல்களில் காண்கிறோம். உறையூரை நலங்கிள்ளி, முற்றுகையிட்டு அங்கு நெடுங்கிள்ளியை சிறை வைத்தான் என்று ஒரு பாடல் கூறுகிறது. கீழ்க்காணும் இப்பாடல் இம்முற்றுகையின் விவரங்களை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றது.

உறையூரில் கோட்டைக்கட்டி ஆளும் நெடுங்கிள்ளியே, உன் கோட்டையை நலங்கிள்ளி முற்றுகையிட்டிருக்கிறான். நீயோ அதைப் பொருட்படுத்தாமல் உன்னுடைய கோட்டைக்குள் கவலையின்றி இருக்கிறாய். இது கோழையின் செயல்; வீர அரசர்களுக்கு ஏற்குமா? ஒன்று கோட்டையை விட்டு வெளியே வந்து அவனுடன் போரிடுக; அல்லது அவனுடன் சமாதான உடன்பாட்டைக் காண்க; இரண்டும் கெட்டான் நிலையில், மக்கள் துன்பப்பட்டுகிறார்கள். யானைகள் உணவின்றி தவிக்கின்றன. பெண்டு பிள்ளைகள், குழந்தைகள் எல்லாம்கூட பட்டினியால் தவிக்கின்றனர். உன் ஆட்சிக்கு இதெல்லாம் இழுக்கு அல்லவா? நீயாகிலும் ஆட்சி செய்; அல்லது அவனையாகிலும் ஆளவிடு. (புறம். 44)

நலங்கிள்ளியின் பகுதியிலிருந்து உறையூருக்குள் வந்த இளந்தத்தன் என்ற ஒரு புலவரை ஒற்றர் எனக்கருதி, அவரைத் தூக்கிலிட இவன் உத்தரவிட்டான். ஆனால் அங்கு இருந்த கோவூர்க்கிழாரின் வேண்டுகோளுக்கு இணங்கி அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. இது சங்ககாலப் புலவர்களின் வாழ்க்கை முறையை தெரிவிக்கிறது.

இளந்தத்தன் என்ற புலவர், நலங்கிள்ளியிடம் பரிசில் பெற்ற பிறகு, நெடுங்கிள்ளியிடம் பரிசல் பெற வருகிறார். நலங்கிள்ளியிடமிருந்து வருவதால் புலவர் ஒற்றராக இருக்கலாம் என்று அச்சப்படுகிறான் நெடுங்கிள்ளி. ஐந்தாம் படைப் பேர்வழிகளைப் போல அவரைக் கொன்றுவிடவும் முடிவு செய்கிறான். இது தகுமோ? புலவர் ஒற்றர் அல்லர், அவர்கள் வறுமையால் வாடுபவர்கள், பழுத்த மரத்தை நாடிச்செல்லும் பறவைகள் போல, வள்ளல்களைத் தேடிச்செல்வது அவர்களுடைய இயல்பு. பொருள்பெற்று, சுற்றத்தை வாழ வைக்க வேண்டியது புலவர் கடமை. அவர்கள் ஒரு நாளும் பிறருக்குத் தீங்கு இழைக்க மாட்டார்கள். தங்களை இகழ்ந்தார் நாணும்படி நடந்து கொள்வர். மண்ணை ஆளும் அரசர் போல அவர்களும் தலைமையே விரும்புவர்.

கிள்ளிவளவன்

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோரைப் பற்றிப் பாடிய புலவர்களே குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பற்றியும் பாடியிருப்பதால், கிள்ளிவளவனும் இவர்கள் காலத்திலேயே வாழ்ந்தவனாவான். கோவூர்கிழாரின் ஒரேவொரு பாடலில், பாடப்பட்டுள்ள மற்றொரு கிள்ளிவளவன், குராப்பள்ளியில் இறந்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் இவ்விரு மன்னர்களுமே ஒருவரே என்று கூறப்படுகிறது. இது எவ்வாறாயினும் கோவூர்கிழாரின் பாடல், கிள்ளிவளவன் கருவூரைக் கைப்பற்றிய பிறகே இயற்றப்பட்டதாகும். ஆலத்துர் கிழார் தம் பாடலில், கருவூரைக் கைப்பற்றுவதற்கு முன் நிகழ்ந்த ஒரு முற்றுகையைப் பற்றி கூறுகிறார். கிள்ளிவளவனின் புகழைப்பற்றி பத்து புலவர்கள் பதினெட்டு பாடல்கள் பாடியுள்ளனர். சிறுகுடி என்னும் பகுதியின் தலைவனான பண்ணன், என்ற இவனது நண்பனைப் புகழ்ந்து பாடப்பெற்றுள்ள பாடல் இவன் (கிள்ளிவளவனே) இயற்றியதே. இவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான்.

இம்மன்னன் வீரமும் பெருந்தன்மையும் பலவகைத் திறமையும் வாய்ந்தவன். ஆனால், செருக்கு மிக்கவன். இதனால் பல புலவர்கள் இவனுக்கு அறிவுரை வழங்கி, இவனை நல்ல முறையில் திருத்தியுள்ளனர். வெள்ளைக்குடி நாயனார் என்னும் புலவர் தம் ஊரின் நிலத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த வரியைத் தள்ளுபடி செய்யுமாறு கீழ்வரும் பாட்டினை அவர் பாடியுள்ளார்.

சேரரின் தலைநகரான கரூரை முற்றுகையிட்டு, பின் அதைக் கைப்பற்றியதே கிள்ளிவளவனின் மிகச் சிறந்த போர் வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சியைக் குறித்து பல நாள்கள் சிறப்பாகப் பேசுகின்றனர். தனக்கு பொருத்தமில்லாத பகைவனுடன் போரிடுவது தகாது, பொருந்தாது, நியாயமாகாது என்று கிள்ளிவளவனுக்கு எடுத்துரைக்கும் வகையில் கரூரை அழிவின்றி காக்க, முயன்றவர் ஆலத்தூர் கிழார் என்னும் புலவர். ஆனால் இப்புலவரது முயற்சி வெற்றி பெறவில்லை, அழகிய நகர் வீழந்தது. இதைப்பற்றி மாறோக்கத்து நப்பசலையார் என்னும் பெண்பாற்புலவர் புலம்புகின்றார்.

இதே போல் கபிலரும், மாறோகத்து நப்பசலையாரும், புறநானுற்றுப் பாடல்கள் பலவற்றில் புலவர்களிடம் இவன் காட்டிய கொடைத்திறனை வியந்து பாடியுள்ளனர். வெற்றிபெற்ற சோழமன்னன் மலையமானின் குழந்தைகளுக்கு அளித்த மரணதண்டனையிலிருந்து அவர்கள் தப்பி விடுதலை பெறச்செய்தது இவர்களைப் போன்ற ஒரு புலவர் எழுதிய ஒரு பாடலே.

இம்மன்னன் இறந்தபொழுது பாடப்பட்ட இரு இரங்கற்பாக்கள், இவன் இறந்த இடமாகிய கழுமுற்றம் எங்குள்ளது என்றோ, இவன் இறந்ததற்கு காரணம் என்ன என்றோ கூறாவிடினும் இவனது அகந்தையை எடுத்துக்காட்டுகின்றன.

கோப்பெருஞ்சோழன்

உறையூரிலிருந்து அரசாண்டு வந்த கோப்பெருஞ்சோழன் இக்காலத்தில் வாழ்ந்த மற்றொரு புகழ் வாய்ந்த சோழ மன்னன் ஆவான். இம்மன்னன் தாமே ஒரு புலவராய் இருந்ததோடு, பிசிராந்தையார், போத்தியார் ஆகிய இரு புலவரின் நெருங்கிய நட்பை பெற்றிருந்தான்.

பெருங்கிள்ளி

சங்ககாலத்துச் சோழ மன்னர்களுள் இராசசூய யாகத்தைச் செய்த பெருங்கிள்ளி, மிகப்பலம் வாய்ந்த மன்னனாக இருந்திருக்க வேண்டும். சேரமன்னன் மாரி வெண்கோவும், பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதியும் பெருங்கிள்ளியின் ஆட்சியின் தொடக்கத்தில் நடைபெற்ற இந்த யாகத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைக் கண்ட ஒளைவயார் பாடிய வாழ்த்துப்பாவில் இம்மூன்று மன்னர்களையும் குறிப்பிட்டதிலிருந்து ஒருவாறு அறியலாம்.

தேவலோகம் போன்ற இந்த நாடு உன்னால் ஆளப்பட்டாலும் சரி, உன் பகைவரிடம் சென்றாலும் சரி, உண்மையில் அது துறவிகளுக்கு உரிமையானது. பிராமணர்களக்கு நீ தண்ணீரும் பூவும் பொன்னும் தருவாயாக; மிளிரும் நகைகளை அணிந்த வேலைக்காரப் பெண்கள் தங்கக் குவளைகளில் தரும் மதுவை அருந்தி மகிழ்வாயாக; அந்த மகிழ்ச்சியில் தேவைப்பட்டவர்களுக்கு எளியவர்களுக்கு பரிசுகளை அள்ளி வழங்குவாயாக. அறச்செயல்கள் தாமே இறுதி நாளில் உன்னைத் துணை நிற்கும்; வெண்கொற்றக் குடைகளும் வீரத் தேர்களும் உடைய அரசர்களே நீவர் நீடு வாழ்க! (புறம். 367)

பெருங்கிள்ளிக்கும், சேரமன்னன் மாஞ்சேரல் இரும்பொறைக்கும் நடந்த போரில், தேர் வண்மலையான் என்ற தலைவன் சோழ மன்னனுக்கு ஆதரவாகப் போரிட்டதாக கொளு கூறுகிறது. சோழ மன்னனின் நண்பனையோ இல்லை பகைவனையோ யார் என்று அறுதியிட்டு கூறமுடியாது.

கோச்செங்கணான்

கரிகாலனது வாழ்க்கையைப் போன்று, கோச்செங்கணான் வாழ்க்கையைச் சுற்றியும் எண்ணற்ற கற்பனைக் கதைகள் பின்னப்பட்டுள்ளன. இவன் காலத்திய சான்றுகள் பிற்காலத்தில் ஏற்பட்டு தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்ட செய்திகளும் இரண்டறக் கலந்துவிடாமல் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. புறநானூற்றுப் பாடலொன்றும் பொய்கையார் பாடல் நாற்பது பாடல்களைக் கொண்ட களவழியும் இவனது வாழ்க்கையைப் பற்றிய தொன்மையான சான்றுகளாகும். திருஞான சம்மந்தரும் திருமங்கையாழ்வாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் பாடல்களில் இம்மன்னனது சமய வாழ்க்கையைப் பற்றி விளக்குகின்றனர். பத்து பதினோராம் நூற்றாண்டுகளில் கிடைக்கும் சோழர் செப்பேடுகளிலிருந்து தெரியும் புராண மரபுவழிகளும் இவனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது.

நடுத்தர அளவிலான களவழி பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே கொடுத்தாலும், சில சமயம் கொங்கு நாட்டில கரூருக்கு அருகேயுள்ள கழுமத்தில் நடைபெற்ற யுத்தத்தைப் பற்றி கொடுரமான வர்ணனைகளையும் தருகிறது. சேரமன்னன் கணக்கால் இரும்பொறையை வென்று அவனைச் செங்கணான் சிறைப்பிடித்தான்.

திருநாறையூரைப் பற்ற திருமங்கை ஆழ்வார் பாடியுள்ள பாடல்களில் ஒன்று கோச்செங்கணானின் சாதனைகளைக் கூறுவதுடன், இவன் இவ்வூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வழிபட்டதையும் குறிப்பிடுகிறது. போர்க்களத்தில் பெரும்வீரனாகவும் சிவபெருமானுக்கு எழுபது கோயில்களை எடுத்து சிறந்த சிவபக்தனுமான சோழமன்னன் திருநாறையிலுள்ள வைணவ ஆலயத்திலும் வழிபட்டான் என்று இவ்வாழ்வார் கூறும்பொழுது சோழமன்னன் என்று கோச்செங்கணானையே குறிப்பிடுகிறார் என்பதை எவ்வித ஐயப்பாடுமின்றி உணரலாம். செங்கணானின் பகைவனுடைய யானைப் படையைப் பற்றியும் செங்கணானின் குதிரைப் படை ஆற்றிய அரும் பெரும் பணியைப் பற்றியும் ஆழ்வார் குறிப்பிடுகிறார். இவ்வாறே களவழியிலும் சேரமன்னனனுடைய யானைப் படையை எதிர்த்துச் சோழமன்னன் வெற்றி கொள்ள அவனது குதிரைப் படையும், காலாட் படையும் காரணமாயிருந்தன என்று குறிப்பிட்டுள்ளது.

செங்கணானது ஆட்சி சோழ நாட்டிற்கு அப்பாலும் பரவியிருந்ததென்றும் அழுந்த, வெண்ணி என்ற இடங்களில் இவன் போர் புரிந்தானென்றும் விளந்தை வேள் என்ற குருநில மன்னனைப் போரில் கொன்றான் என்றும், திருமங்கையாழ்வார் கூறுகிறார். ஆம்பூர், வைகல், நன்னிலம் ஆகிய இடங்களிலுள்ள சிவாலயங்கள், செங்கணானாலேயே கட்டப்பட்டவை என்று திருஞான சம்மந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் தேவாரப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். நாடு முழுவதும் கௌரீசனுக்கு செங்கணானால் கோயில்கள் கட்டப்பட்டன, என்று சுந்தர சோழனுடைய அன்பில் பட்டயங்கள் கூறுகின்றன.

சேக்கிழார் குறிப்பிடும், செங்கணான் என்ற இவனது பெயரும், இவன் சோழ குடும்பத்தில் பிறந்தவன் என்பதும் ஜம்புகேஸ்வரம் உள்ளிட்ட பல இடங்களில் சிவபெருமானுக்கு இவன் கோயில்கள் எடுத்த வி வரங்களும் இம்மன்னனைப் பற்றி பாடியுள்ள நாயனார் யாரென்று முடிவுகட்ட உதவுகின்றன.

இத்துடன் ‘கிள்ளி’ சோழர்களின் வரலாறு முடிகிறது. இனி சோழர்களின் பொற்காலத்தை தொடங்கி வைத்த விஜயாலய மன்னன் பற்றி அடுத்ததில் பாரக்கலாம்


....